ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 288
अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य ... (अध्याय १८ - श्लोक ५३)
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் விமுச்ய ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 53)
Ahankaaram Balam Darpam Kaamam Krodham Parigraham Vimuchya ... (Chapter 18 - Shloka 53)
அர்தம் : அஹங்காரம் , பலம் , தர்பம் (செருக்கு) , காமம் , க்ரோதம் மற்றும் பரிக்ரஹம் (பொருட்குவிப்பு) இவற்றை விலக்கி ...
அஹங்காரம் , பலம் , ஆணவம் , காமம் , க்ரோதம் மற்றும் பொருட்களைச் சேர்த்திடும் தன்மை ஆகியவற்றை விலக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. 'விலக்கி' என்ற வார்தை ஒரு கேள்வியை எழுப்புகிறது .. அத்யாத்ம ஸாதனையின் விளைவாக இது நடந்திடுமா அல்லது இதற்காக நாம் முயல வேண்டுமா ?? ப்ரஹ்ம க்ஞானத்தை அடைய வேண்டும் என்றால் , பிரஹ்மத்தை அநுபவித்திட வேண்டும் என்றால் , அந்தஹ் - ஶுத்தி அல்லது உள் - தூய்மை அவஶ்யமாகிறது .. உள்ளத்தில் மாஸுக்கள் இவை .. எனவே , இவை அகல வேண்டும் ..
இத்தன்மைகளை நீக்கிட செய்யப்படும் முயற்சியே இவற்றை மேலும் அதிகரித்திட வாய்ப்பு உண்டு .. நீக்கி விட்டேன் என்ற சிந்தனையும் ஏமாற்றுச் சிந்தனையாகவே இருந்திடும் .. இத்தன்மைகள் மிகவும் ஸூக்ஷ்மமானவை .. உள்ளத்தில் இவை குடி கொண்டிருப்பதை அறிவதே மிகக் கடினம் .. இவற்றைக் கண்டு கொண்டாலே போதும் .. யஜமான் விழிப்புடன் இருந்தால் பணியாள் நேர்மையாக வேலை செய்வதைப் போல , விழிப்புடன் இருக்கும் வீட்டில் இருந்து திருடன் விலகி விடுவதைப் போல , இவை தன்னால் விலகி விடும் ..

Comments
Post a Comment