ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 289
विविक्त सेवी ... (अध्याय १८ - श्लोक ५२)
விவிக்த ஸேவீ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 52)
Vivikta Sevee ... (Chapter 18 - Shloka 52)
அர்தம் : தனிமை நாடுபவன் ...
தனிமையை நாடுவது ஒரு தன்மையாகும் .. த்யானம் செய்பவர்கள் , ஆத்ம சிந்தனையில் லயித்து இருப்போரின் விஶேஷத் தன்மையாகும் .. உலக விஷயங்களில் கவர்ச்சி இல்லை என்றாலும் உலக விஷயங்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றிலும் சூழ்ந்தே இருக்கின்றன .. நம் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கின்றன .. நம் மனஸு அவ்விஷயங்களில் ஈடுபடவில்லை என்றாலும் இந்த்ரியங்கள் என்னும் த்வாரங்கள் வழியாக அவை நம் உள்ளே புகுந்த வண்ணம் உள்ளன ..
குறிப்பாக , த்யானம் பழகும் ஸாதகன் விவிக்த ஸேவீ ஆக வேண்டும் .. தனிமையை நாட வேண்டும் .. தனிமையை ஆனந்தமாக அநுபவிக்க வேண்டும் .. ஆத்ம க்ஞானம் பெற்றவனின் நிலை வேறு .. ஆனால் , அந்த திஶையில் முயற்சி செய்யும் ஸாதகன் விஷயங்களின் இவ்வகை தாக்கத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள , தனிமையை நாடுவது ஸஹஜம் ..
தனிமை என்பது புற உலகத்துடன் தொடர்பு இல்லாத தனிமை .. ஆனால் , இது ஸாத்யமா ?? கண்ணை மூடிக் கொள்ளலாம் .. காதுகளை மூடிக் கொள்ளலாம் .. வாயைப் பொத்தி , உணவேதும் போடாமல் இருக்கலாம் .. நாஸி த்வாரம் வழியாக வாஸனைகளும் துர்நாற்றங்களும் உள்ளே புகுந்து தாக்குவதைத் தவிர்க்க முடியாதல்லவா !! தோலின் மீது காற்றும் பூமியும் எறும்பும் கொசுவும் பூச்சிகளும் ஏற்படுத்தும் ஸ்பர்ஶத்தைத் தவிர்க்க முடியுமா ?? இவற்றுக்கு மேல் மனஸு பூர்வ அநுபவங்களின் ஞாபகம் மூலம் விஷயங்களுடன் கொஞ்ஜிக் குலவுவதை எவ்வாறு தவிர்ப்பது ?? கடினம் தான் என்றாலும் தனிமையை நாடுதல் ஒரு விஶேஷத் தன்மையே ஆகும் .. அவஶ்யமான தன்மையும் கூட ..

Comments
Post a Comment