ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 290
स्वभावजेन निबद्धः ... (अध्याय १८ - श्लोक ६०)
ஸ்வபாவஜேன நிபத்தஹ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 60)
Swabhaavajena Nibaddhah ... (Chapter 18 - Shloka 60)
அர்தம் : ஸ்வபாவத்தால் கட்டப் பட்டு ...
நாம் ஸ்வபாவத்தால் கட்டப் பட்டிருக்கிறோம் என்பதே ஸத்யம் .. ஸ்வய நினைவோடு , சிந்தனை செய்து , முடிவெடுத்து , திட்டமிட்டு நாம் செயல்களைச் செய்கிறோமா ? ஸந்தேஹமே .. ஸ்வபாவத்தால் உந்தப்பட்ட சிந்தனையே செய்கிறோம் .. ஸ்வபாவத்திற்கு ஒத்த நிர்ணயங்களே எடுக்கிறோம் .. செயல்படுகிறோம் .. பெரும்பாலோர் சிந்தனையும் செய்வதில்லை .. அதுவும் அவர் ஸ்வபாவத்தின் வெளிப்பாடே .. அவரது தாமஸ ஸ்வபாவம் அவரை சிந்திக்க விடாது ..
ஸ்வபாவத்தை மாற்றிக் கொள்வது இயலுமா ?? மிகக் கடினம் .. மிகப் பெரும் முயற்சி தேவைப் படும் .. இத்தகைய முயற்சி செய்வதும் ஸ்வபாவத்தைப் பொருத்ததே .. ஸ்வபாவம் மிக வலிமையான ஒரு உடன் பிறப்பு .. ஹிந்தியில் சொல்வார்கள் .. பிறக்கும் போது கை விரலைச் சூப்பிக் கொண்டு வந்தவன் , கடைசியில் ஶ்மஶான காட்டிற்குத் தூக்கிச் செல்லப் படும் போதும் விரலைச் சூப்பிய படியே செல்வான் ... என்பார்கள் ..

Comments
Post a Comment