ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 293
यथेच्छसी तथा कुरु ... (अध्याय १८ - श्लोक ६३)
யதேச்சஸி ததா குரு ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 63)
Yathechchasi Tathaa Kuru ... (Chapter 18 - Shloka 63)
அர்தம் : உன் விருப்பப் படி எது ஸரி என்று நினைக்கிறாயோ அதைச் செய்திடு ...
ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கருத்து இது .. ஹிந்து தர்மத்தில் க்றிஸ்தவ 'commandments' கிடையாது .. இஸ்லாமின் ஃபத்வா கிடையாது .. தெய்வத்தின் கட்டளைகள் கிடையாது .. இங்கு பூர்ணமான விசார ஸ்வாதந்தர்யம் (கருத்து ஸ்வதந்த்ரம்) உண்டு .. ஆசார ஸ்வாதந்தர்யம் (செயல்களின் ஸ்வதந்த்ரம்) உண்டு .. பகவானை ஏற்க மறுக்கவும் ஸ்வாதந்தர்யம் உண்டு .. நம் சிந்தனைக்கும் செயல்களுக்கும் ஸம்ஸார நியதிகளின் அடிப்படையில் ஃபலன்கள் உண்டு .. விளைவுகள் உண்டு .. நிஶ்சயம் உண்டு ..
ஸ்வதந்த்ரம் வேண்டும் என்றால் விளைவுகளின் பொறுப்பையும் ஏற்க வேண்டும் .. இங்கு காலத்திற்கு ஏற்ற மாற்றமும் உண்டு .. முன்னேற்றமும் உண்டு .. ஸ்வாதந்தர்யம் இல்லாத மதங்களில் இயற்கையைப் பற்றியோ ஸமுதாயத்தைப் பற்றியோ , ஏன் ஸ்வந்த வாழ்க்கையைப் பற்றியும் பொறுப்பு கிடையாது .. அங்கு மாற்றத்திற்கும் இடம் இல்லை .. முன்னேற்றத்திற்கும் இடம் இல்லை .. புஸ்தகத்தில் எழுதப் பட்டதே இறுதி ஸத்யம் .. இறை தூதனால் சொல்லப் பட்டதே இறுதி ஸத்யம் .. முன்னேற்றம் வேண்டும் என்றால் புஸ்தகத்தை விட வேண்டும் .. மதத்தை விட வேண்டும் . மதம்தான் வேண்டும் , புஸ்தகம்தான் வேண்டும் என்றால் முன்னேற்றத்தை விட வேண்டும் .. காலத்துக்கேற்ற மாற்றங்களை இழக்க வேண்டும் ..
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை சொன்னான் .. விரிவாகச் சொன்னான் .. ஆனால் , இறுதியில் "எனக்கு ப்ரியமானவன் என்பதால் உனக்கு கீதையைக் கூறினேன் .. இனி நீ உன் சிந்தனைக்கு ஸரி என்று படுவதைச் செய் .. உன் விருப்பப் படி செயல்படு" என்கிறான் .. இதுவே ஹிந்து தர்மத்தின் உயர்வு .. அதனால் தான் ஹிந்து தர்மம் காலத்தால் அழியாது நிற்கிறது .. இதோ அழிந்து விட்டது என்ற மிக விபரீதமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது .. தழைத்து ஓங்குகிறது ... ஹிந்தியில் "நித்ய நூதன் - சிர புராதன்" (नित्य नूतन - चिर पुरातन) என்பார்கள் .. அதாவது , தொன்மையானது எனினும் என்றென்றும் புதுமையானது ..

Comments
Post a Comment