ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 294
கீதையில் சில சொற்றொடர்கள் - 294
सर्व धर्मान परित्यज्य मामेकं शरणम् व्रज ... (अध्याय १८ - श्लोक ६६)
ஸ்ர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 66)
Sarva Dharmaan Parityajya Maamekam Sharanam Vraja ... (Chapter 18 - Shloka 66)
அர்தம் : அனைத்து தர்மங்களையும் துறந்து விட்டு , என்னை மாத்ரம் ஶரண் அடை ...
இந்த ஶ்லோகத்தை கீதையின் சரம ஶ்லோகம் என்கிறார்கள் .. இது கீதையின் உச்சம் ..
இந்த ஶப்தாவலியில் ரெண்டு பகுதிகள் உள்ளன .. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்பது ஒன்று .. மாமேகம் ஶரணம் வ்ரஜ என்பது மற்றொன்று .. உனக்கென்று எதையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் , உனக்கென்று எதையும் பதுக்கி வைத்துக் கொள்ளாமல் , நீ அடைய வேண்டியது , நீ செய்ய வேண்டியது என்றெல்லாம் எதையும் வைத்துக் கொள்ளாமல் , அனைத்தையும் விட்டு விட்டு .. என்பது ஒன்று .. வேறு வழிகளை நாடாமல் , வேறு ஶக்திகளின் மீது எதிர்ப்பார்ப்பு வைக்காமல் .. என்னை மாத்ரம் ஶரண் அடை என்பது மற்றொன்று ..
தனக்கென்று வைத்துக் கொண்டால் , ஶரண் அடைதல் முழுமை ஆகாது .. த்ரௌபதி புடவையைத் தன் கையால் பற்றிய படி , தன்னைக் காக்க முயற்சி செய்த படி , ஸ்ரீ க்ருஷ்ணனை அழைத்தாள் .. உதவிக்கு அவன் வரவில்லை .. ஸ்வய முயற்சிகளை விட்டு விட்டு , ரெண்டு கைகளையும் உயர்த்தி , "அச்யுதா" என்று கூவியவுடன் வந்தான் ..
துர்யோதன ஸேனையில் தளபதிகள் ஒவ்வொருவருக்கும் தான் ஸார்ந்திருக்கும் ஸேனையின் வெற்றியை விட , தான் எடுத்த ஶபதங்கள் , தன் பெருமைகள் , தன் உறவு , தன் உணர்வு , தன் பெயர் இவை எல்லாம் தான் முக்யமாக இருந்தன .. பீஷ்மருக்கு ஶிகண்டியைப் பற்றிய கருத்து பெரிதாக இருந்தது .. அவனுக்கு எதிராக யுத்தம் புரிய மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார் ..
கர்ணனுக்கு தானம் பற்றிய தன் புகழ் பெரிதாக இருந்தது .. பீஷ்மரைப் பற்றிய வெறுப்பு முக்யமாக இருந்தது .. அவர் இருக்கும் வரை தன் நண்பருக்காக யுத்த க்ஷேத்ரத்தில் கால் வைக்க மறுத்து விட்டான் .. தன் கவச குண்டலங்களை தானம் அளித்தால் தான் ஸார்ந்திருக்கும் ஸேனை தோல்வியுறும் என்று அறிந்திருந்தும் தானம் அளித்தான் ..
த்ரோணருக்குத் தன் புத்ர பாஶம் முக்யமாக இருந்தது .. யுத்தத்தில் அர்ஜுனனின் மகன் இறக்கவில்லையா ?? பீமனின் மகன் இறக்கவில்லையா ?? ஏன் !! துர்யோதனனின் மகனும் இறந்தான் .. தன் மகன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆயுதத்தை வீசி எறிந்து விட்டார் .. கொல்லப் பட்டார் ..
பாண்டவ ஸேனையில் அனைவரும் ஸ்ரீ க்ருஷ்ணனை ஶரண் அடைந்து இருந்தனர் .. ஸத்யம் பேசும் யுதிஷ்டிரன் அதை விட்டார் .. ஆயுதம் ஏந்தாத எதிரியைத் தாக்கக் கூடாது என்ற தன் வ்ரதத்தை அர்ஜுனன் விட்டான் .. கதையால் இடுப்பிற்குக் கீழ் தாக்கக் கூடாது என்ற யுத்த தர்மத்தை பீமன் விட்டான் .. ஸ்ரீ க்ருஷ்ணன் சொன்னதால் ..
என்னை மாத்ரம் ஶரண் அடைந்திடு .. முழு ஶ்ரத்தை வைத்திடு .. பரம ஶக்தியிடம் ஶரண் அடைய வேண்டும் .. மநுஷ்ய ஶக்தியிடம் (விஶ்வாமித்ரன்) ஶரண் அடைந்த த்ரிஶங்கு என்ற ராஜா ஸ்வர்கத்தை அடைய முடியவில்லை என்பது ஒரு புறம் .. அபமானப் பட்டான் .. அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கினான் .. தேவேந்த்ரனை ஶரண் அடைந்த தக்ஷனால் தன்னை காத்துக் கொள்ள முடியவில்லை என்பது ஒரு புறம் .. இந்த்ரனுக்கே ஆபத்து விளைவித்து விட்டான் .. பரம ஶக்தியை மாத்ரம் ஶரண் அடைவோம் ..
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ...

Comments
Post a Comment