Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 295

ॐ

கீதையில் சில சொற்றொடர்கள் - 295


ना तपस्काय , ना भक्ताय , न शुश्रूषवे , न मां असूयते  ...  (अध्याय १८ - श्लोक ६७)
நா தபஸ்காய ..  நா பக்தாய நா அஶுஶ்ரூஷவே  ..  நா மாம் அஸூயதே  ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 67)
Naa Tapaskaaya Naa Bhaktaaya Naa ashushrooshave  Naa Asooyate ...  (Chapter 18 - Shloka 67)

அர்தம் :  (எவரிடம் கீதையைக் கூறக் கூடாது .)  தபஸ் இல்லாதவன் , பக்தி இல்லாதவன் , கேட்க ஆர்வம் இல்லாதவன் , என் மேல் பொறாமை கொண்டவன் ..

ஊதற ஶங்கை ஊதி வைப்போம் என்பார்கள் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு கூறுவது இந்த லோக வசனத்திற்கு எதிராக அல்லவா உள்ளது ..  கீதையை இவர்களிடம் சொல்லாதே ..  இவர்களிடம் கீதையை சர்சை செய்யாதே என்கிறார் ..  கீதையோ நல்லது ..  அதைச் சொன்ன ஸ்ரீ க்ருஷ்ணனும் நல்லவரே ..  நல்லவர் ஒரு சிலருக்கு கீதையின் நல்ல செய்தியை மறுப்பது சரியா ??

அவருக்கு அனைவருமே ஸமம் தான் ..  எனினும் அர்ஹதை இல்லாதவருக்கு தகுதி இல்லாத ஒன்று கிடைக்கக் கூடாது ..  தபஸ் இல்லாதவரிடம் சொல்லாதே என்கிறார் ..  பக்தி இல்லாதவனிடம் சொல்லாதே ..  கேட்க ஆர்வம் இல்லாதவனிடம் சொல்லாதே ..  பொறாமை கொண்டவனிடம் சொல்லாதே என்கிறார் ..  தபஸ் இல்லாதவனிடம் பொறுமை இருக்காது ..  அமைதியான மனஸ் இருந்திடாது ..  ஆழமான கருத்தைப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற புத்தி இருந்திடாது ..  அவனிடம் கீதையைச் சொல்வது வீண் ..  பக்தி இல்லாதவனிடம் ஶ்ரத்தையும் இருந்திடாது ..  கண்களுக்குப் புலப்படுவதே ஸத்யம் என்பான் ..  இந்திரியங்களுக்கு அப்பால் உள்ள ஸூக்ஷ்மமானவற்றை ஶ்ரத்தை இன்றி புரிந்து கொள்ள முடியாது ..  கேட்கும் ஆர்வம் இல்லாதவனிடம் ஏன் சொல்ல வேண்டும் ??  கீதை மாத்ரம் இல்லை ..  இத்தகையவனிடம் எதையும் சொல்லக் கூடாது ..  விழலுக்கு இறைத்த நீராகி விடும் ..  பொறாமை கொண்டவன் கண்ணிருந்தும் குருடன் ஆவான் ..  பொறாமை அவனது சிந்தனை ஶக்தியை மழுங்க அடித்து விடும் ..  சொல்பவர் மீது பொறாமை இருந்தால் வார்தைகளை உள்ளபடி புரிந்து கொள்ள முடியாது ..  இவர்கள் அனைவரும் கீதையின் செய்தியை ஜீர்ணம் செய்யும் ஆற்றல் அற்றவர்கள் ..

கீதையைக் கேட்டால் மாத்ரம் போதாது ..  கேட்டதைச் சிந்திக்க வேண்டும் ..  சித்தத்தின் ஆழத்தில் பதிய வைக்க வேண்டும் ..  வலுக்கட்டாயமாக கீதையின் வசனங்களை இவர்களின் காதுகளில் பாய்ச்சி விட்டாலும் சிந்தனை செய்ய வேண்டியது அவர்களே ..  சிந்திப்பதும் ஜீர்ணம் செய்து ,  ஸாரத்தை உள்ளே பதிய வைப்பதும் அவர்களால் இயலாத ஒன்று ..  எனவே இவர்களுக்கு கீதையைக் கூறாதே என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

PHRASES IN THE GITA - 173

ॐ PHRASES IN THE GITA - 173 जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् ।।  (अध्याय १३ - श्लोक ८) ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி து:க தோஷாநுதர்ஶனம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 8) Janma Mrutyu Jaraa Vyaadhi Duhkha DoshaanuDarshanam ..  (Chapter 13 - Shloka 8) Meaning :  To think of misery and defects in birth , death , old age and disease again and again .. To think of misery and defects in Birth , Death , Old age and disease .. Birth is miserable ..  The months in mother's womb .. hanging inverted , immersed in water , surrounded by suffocating smell ..  Miserable to the mother too ..  Extreme pain and risk of death to the mother while delivering the child ..  Death is miserable too ..  Apart from the body pain while dying , pain of leaving all those collected so passionately , wife and children , house , bank balance , assets , vehicle , posts and positions , reputation , public influence , etc .. Jara or old age is ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...