ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 300
केशवार्जुनयोः पुण्यं संवादम इमम् अद्भुतम् । (अध्याय १८ - श्लोक ७६)
கேஶவார்ஜுனயோஹ புண்யம் ஸம்வாதம் இமம் அத்புதம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 76)
Keshavaarjunayoh punyam Samvaadam Imam Adbhutam ... (Chapter 18 - Shloka 76)
அர்தம் : கேஶவார்ஜுனன் இடையே நடந்த புண்யமயமான , அத்புதமான ஸம்வாதம் ...
இந்த வசனமும் தேரோட்டி ஸஞ்ஜயனுடையது .. ஸஞ்ஜயன் ஆனந்தத்தில் திளைத்து இருக்கிறான் .. துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறான் .. தன்னை மறந்த நிலையில் இருக்கிறான் .. ஒரு ஸாதாரண தேரோட்டியாக , த்ருதராஷ்ட்ர மகாராஜா கொடுக்கும் ஸம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியனாக இருக்கும் தனக்கு வாய்த்த பாக்யத்தை நினைத்து நினைத்து உத்ஸாஹத்தில் மூழ்குகிறான் .. பயிருக்குப் பாயும் தண்ணீர் களைக்கும் பாய்ந்து விடுவதைப் போல , ஸ்ரீ க்ருஷ்ணார்ஜுன மத்தியில் நடந்த அத்புத ஸம்வாதம் , தெய்வீக ஸம்வாதம் , அம்ருதத்திற்கு ஒப்பான ஸம்வாதம் தன்னாலும் கேட்க முடிந்ததை நினைத்து பரவஶமாகிறான் ..
ஸஞ்ஜயனின் மனஸ் தூய்மையாக இருந்ததால் அவனுக்கு இந்த ஸம்வாதம் புண்ய மயமாக , தெய்வீகமாகத் தோன்றியது .. குழம்பி இருந்த த்ருதராஷ்ட்ரன் , அதர்மி துர்யோதனன் மற்றும் ஸதித் திட்டங்களும் வஞ்ஜகமும் நிறைந்த அவனது ஸகாக்கள் ஆகியோர் மத்தியில் இருந்தும் ஸஞ்ஜயன் மனஸு கெடாமல் தூய்மையாக இருந்தது .. இது அவனது ஸத்வத் தன்மையைக் காட்டுகிறது ..தர்மாத்மா ஸஞ்ஜயன் !!!

Comments
Post a Comment