ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 301
तच्च संस्मृत्य संस्मृत्य रूपम अत्यद्भुतम हरेः विस्मयो में महान राजन हृष्यामि च पुनः पुनः । (अध्याय १८ - श्लोक ७७)
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபம் அதி அத்புதம் ஹரேஹ விஸ்மயோ மே மஹான் ராஜன் ஹ்ருஷ்யாமி ச புனஹ் புனஹ் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 77)
Thath cha Samsmruthya Samsmruthya Roopam Ati Adbhutam Hareh .. Vismayo Me Mahaan Rajan Hrushyaami Cha Punah Punah ... (Chapter 18 - Shloka 77)
அர்தம் : ஸ்ரீ ஹரியுடைய அதி அத்புத ரூபத்தை நினைத்து நினைத்து நான் ஆஶ்சர்யத்தில் மூழ்குகிறேன் .. மீண்டும் மீண்டும் ஆனந்தம் அடைகிறேன் ..
இவையும் தேரோட்டி ஸஞ்ஜயனின் வார்தைகள் .. ஸஞ்ஜயனுக்கு ரெண்டு மாபெரும் பாக்யங்கள் , அவன் எதிர்ப்பார்க்காத பாக்யங்கள் கிடைத்தன .. ஸஞ்ஜயன் தன்னை மிக ஸாதாரண ஜீவனாகக் கருதி இருந்தான் .. ஸபையில் நடந்த நிகழ்வுகளில் தனது கருத்தைக் கூறத் துணிந்ததில்லை .. ஸ்ரீ வேத வ்யாஸர் அவனுக்கு திவ்யப் பார்வை அருளிய போது , பணிவுடன் , ஸேவை செய்திட ஒரு வாய்ப்பாகக் கருதியே அதை ஏற்றான் .. ஆனால் , யுத்த பர்வத்தில் பகவத் க்ருபை அவன் மீது பொழிந்தது .. அவன் எதிர்பார்த்திடாமல் பொழிந்தது .. ஒன்று .. அம்ருத துல்ய கீதை என்ற தெய்வீக உரையாடலைக் கேட்டான் .. நேரடியாக ஸ்ரீ க்ருஷ்ணனின் திவ்ய உதடுகளைத் ஸ்பர்ஶித்த படி வெளிப்பட்ட வசனங்களைக் கேட்டான் .. மற்றொன்று .. ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு அருளிய விஶ்வ ரூப தர்ஶனத்தைப் பார்த்தான் .. அதனால் அவன் ஆனந்தக் களிப்பில் இருக்கிறான் .. தன்னை மறந்து இருக்கிறான் .. அந்த திவ்ய தர்ஶனத்தை மீண்டும் மீண்டும் நினைத்து பரவஶமாகிறான் .. ஆஶ்சர்யத்தில் மூழ்குகிறான் .. ஆனந்தக் கூத்தாடுகிறான் ..

Comments
Post a Comment