ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 303
मतिः मम ... (अध्याय १८ - श्लोक ७८)
மதிஹி மம ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 78)
Matih Mama ... (Chapter 18 - Shloka 78)
அர்தம் : இது என்னுடைய கருத்து ..
குருட்டு மஹாராஜன் த்ருதராஷ்ட்ரனின் தேரோட்டி ஸஞ்ஜயன் இதைச் சொல்கிறான் .. ஸ்ரீ க்ருஷ்ணன் இவ்வார்தைகளை கீதையில் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறோம் .. அவன் அர்ஜுனனிடம் பேசிய பதினெட்டு அத்யாயங்களைக் கேட்கக் கேட்க , ஸஞ்ஜயன் மனஸில் இந்தக் கண்ணோட்டம் துளிர்த்து விட்டதா ?? அவ்வாறும் இருக்கலாம் ..
ஆனால் , பொதுவாக ஹிந்துக்களின் மனங்களில் இந்த கண்ணோட்டம் வேரூன்றித் தழைத்து உள்ளது .. ஆதி காலம் முதல் நம் ர்ஷிகள் இதைப் போற்றி வளர்த்து உள்ளனர் ..
கருத்து ஸ்வாதந்தர்யத்தை வெளிப்படுத்தும் வார்தைகள் இவை .. ஸ்வயக் கருத்தை பிறர் மீது திணிக்க விரும்பாத மனப்பான்மை .. ஸஞ்ஜயன் ஒரு கடைநிலை ஊழியன்தானே !! அவனுக்கோ எத்தகைய அதிகாரமும் கிடையாது .. தன் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடிய நிலையில் அவன் இல்லை என்பது ஸத்யமே .. ஆனால் , இங்கு அவன் அதே கருத்து ஸ்வாதந்தர்யத்தின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறான் .. "அதே கருத்து ஸ்வாதந்தர்யம் எனக்கு உண்டு .. அந்யர் தம் கருத்தை என் மீது திணிக்க நான் அநுமதிக்க மாட்டேன்" என்பதே ஸஞ்ஜயன் இங்கு கூற வரும் கருத்து ..
த்ருதராஷ்ட்ரனின் மைந்தர்களான துர்யோதனாதிகள் பாண்டவர்கள் மீது பகைக் கொண்டு , அவர்களை அழித்தொழிக்கச் செய்த பல முயற்சிகளின் இறுதி விளைவே குருக்ஷேத்ர யுத்தம் .. இங்கு ஸஞ்ஜயன் தன் யஜமானன் த்ருதராஷ்ட்ரனுக்கு யுத்த பூமியில் நடப்பவற்றை விவரித்துக் கொண்டு இருக்கிறான் .. த்ருதராஷ்ட்ரன் எதிர்ப்பார்ப்பது துர்யோதனாதிகளின் வெற்றிச் செய்தி .. ஆனால் , தர்மாத்மாவான ஸஞ்ஜயன் மனஸோ பாண்டவர்களின் வெற்றியை விழைந்தது .. தன்னை மறந்த நிலையில் அதை வெளிப்படுத்தி விட்டான் .. "யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணனும் வில்லேந்திய அர்ஜுனனும் எங்கு இருக்கிறார்களோ , அங்குதான் செல்வமும் வெற்றியும் கீர்தியும் நிலைத்த நீதியும் இருக்கும்" என்று அறிவித்து விட்டான் .. அதன் பின்னர் , அவனுக்குத் தான் மஹாராஜா த்ருதராஷ்ட்ரனின் வேலையாள் என்பது நினைவிற்கு வந்தது போலும் .. உடனே , என்னுடைய கருத்து இது என்று சொல்லி முடிக்கிறான் ஸஞ்ஜயன் ..
Comments
Post a Comment