Skip to main content

கீதையில் உள்ள பதங்களும் அவற்றின் அர்தமும் (அத்யாயம் 2)

\

கீதையில் உள்ள பதங்களும் அவற்றின் அர்தமும்
(அத்யாயம் 2)

1 .  அனார்ய (II – 2) : –  ஆர்ய என்றால் மேன்மையானவன் ..  அனார்ய எதிர்மாறானவன் ..  நம் ஸாஹித்யங்களில் ஆர்ய என்ற பதம் இந்த அர்தத்தில் தான் ப்ரயோகம் ஆகி உள்ளது ..  ராமாயணத்தில் ஸீதாதேவி ஸ்ரீ ராமனையும் மண்டோதரி ராவணனையும் ஆர்ய என்று விளிக்கின்றனர் ..  மஹாபாரதத்தில் த்ரௌபதி யுதிஷ்டிரனை ஆர்ய என்றும் ஆர்ய புத்ர என்றும் அழைக்கிறாள் ..  த்ராவிட என்பது பாரதத்தில் தக்ஷிண ப்ரதேஶத்தின் (தெற்குப் பகுதி) பெயர் ..  பஞ்ச த்ராவிட ப்ரதேஶம் ..  தேஶீய கீதம் 'ஜன கண மன' வில் பாரதத்தின் தென் பகுதி த்ராவிடம் என்று அழைக்கப் படுகிறது ..  காஶியில் தென் பாரதத்தில் இருந்து வரும் ப்ராஹ்மணர்களை த்ரவிட ப்ராஹ்மண என்று அழைக்கும் வழக்கம் உள்ளது ..  மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகத்திலும் பல ப்ராஹ்மண குடும்பங்களில் த்ரவிட் என்ற குடும்பப் பெயர் உண்டு ..  சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் த்ரவிட் என்ற பெயர் கொண்ட ஒரு ஸம்ஸ்க்ருத பண்டிதர் இருக்கிறார் ..  ஆக , ஆர்ய என்ற பதம் ஒழுக்கத்தில் மேன்மையையும் த்ராவிட என்ற பதம் ஒரு பூ ப்ரதேஶத்தையும் குறிக்கின்றன ..  ஆனால் , ஓரிரு வெள்ளைக்காரனின் வக்ரப் பார்வை மற்றும் ஆங்க்லம் படித்த ஹிந்துக்களின் அறியாமையால் சென்ற நூற்றாண்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன இவ்விரு பதங்கள் ..  இன்றும் தமிழகத்தில் உள்ள பல பிரிவினை ஶக்திகளுக்கு இவ்விரு பதங்களே தீனி போடுகின்றன ..

2 .  ஸ்வர்க (II – 2, 37) : –  நம் அனைத்து கர்மங்களுக்கும் ப்ரதி ஃபலன் உண்டு ..  ஸத் கர்மங்களின் விளைவு ஸுகமானது ..  ஸ்வர்க வாஸம் ஸத் கர்மங்களுக்குக் கிடைக்கும் ஃபலன் ..  கொடுமையான பாப கர்மங்கள் வேதனையும் வலியும் நிறைந்த விளைவைக் கொடுக்கும் ..  நரக  வாஸம் அதற்குண்டான ஃபலன் ..  ஸ்வர்கத்திலும் நரகத்திலும் ஸுக து:கங்கள் மிகைப் படுத்தப் பட்டவை ..  மரணத்துடன் ஜீவன் ஸ்தூல ஶரீரத்தை இங்கு விட்டு விட்டு ஸூக்ஷ்ம ஶரீரங்களை ஏந்திச் செல்கிறது ..  தான் சேகரித்த வாஸனைக்கு ஏற்ப அடுத்த ஜன்மத்தை அடைகிறது ..  இடையில் யாதனா தேஹம் அல்லது போக தேஹம் ஏற்று , தன் பாப புண்யத்திற்கு ஏற்ப நரகம் அல்லது ஸ்வர்கத்தை அடைகிறது ..  (ஸ்வர்கத்தில் ஸுக போகத்தை அநுபவிக்க போக தேஹம் ..  நரகத்தின் வலி - வேதனைகளை அநுபவிக்க யாதனா தேஹம் ..)  ஸ்வர்கத்தில் ஸுகம் முடிவில்லாதது ..  அலுக்காதது ..  ஸுராபானம் , ரம்பா ஊர்வஶி போன்ற திவ்ய ஸ்த்ரீக்கள் , கல்ப வ்ருக்ஷம் , நித்ய இளமை , நித்ய ஸுக போகம் போன்றவை ஸ்வர்கத்தின் லக்ஷணங்கள் ..  க்றிஸ்தவத்தின் ஹெவன் (Heaven) மற்றும் இஸ்லாத்தின் ஜன்னத் நம் ஸ்வர்கம் போலத் தோன்றினாலும் அவை வேறானவை ..  அங்கு செல்பவர் நிரந்தரமாக அங்கிருப்பராம் ..  அவர்களுக்கு இவை இறுதி இடம் ..  ஆனால் , ஸ்வர்கத்திற்குச் செல்வோர் ஸுகபோகங்களை அநுபவித்து தாம் சேகரித்த புண்யங்களைக் கழித்த பின் மீண்டும் பூ உலகத்தில் பிறப்பர் ..  நமக்கு ஸ்வர்கம் இறுதி இலக்கு இல்லை ..  ஜன்ம - மரண சக்ரத்தில் இருந்து மீண்டு , ஸ்ரீ பரமாத்மாவை அடைவது தான் இறுதி இலக்கு ..

3 .  பூஜா (II – 4) : –  வழிபாடு .  பூஜை என்பது உருவத்தின் வழிபாடு ..  ஒரே பரமனின் வெளிப்பட்ட உருவம் தான் பல்வேறு தெய்வ ஸ்வரூபங்கள் ..  பூஜையில் உள்ள பதினாறு உபசாரங்கள் ஶோடஷோபசாரம் என்ற பெயரில் அறியப்படுகின்றன ..  தெய்வ விக்ரஹங்கள் அனைத்தும் இதே முறையில் பூஜிக்கப் படுகின்றன ..  வேறுபாடுகள் நிறைந்த  ஹிந்துக்களை  ஒருங்கிணைக்க வைக்கும் அத்புத ஸாதனம் பூஜை ..  பாரதத்தின் ஸர்வ ப்ரதேஶங்களிலும் அனைத்து விக்ரஹ ஸ்வரூபங்களும் இதே வழியில் பூஜை நடந்திடும் ..  அறுபத்து நான்கு உபசாரங்கள் கொண்ட விஸ்தாரமான பூஜை முறையும் உள்ளது ..

1 .  ஆவாஹனம் (ஆஹ்வானம்) – ஸ்ரீ பகவானை உருவத்தில் வந்திருக்கச் சொல்வது ..
2 .  ஆஸனம்  ஆஸனம் அளிப்பது .
3 .  பாத்யம் – நீர் விட்டுப் பாதங்களை அலம்புதல் .
4 .  அர்க்யம் – ஜலம் விட்டு கைகளை ஶுத்தம் செய்தல் .
5 .  ஆசமநீயம் – ஆசமநீயம் செய்து தன்னைத் தானே ஶுத்தம் செய்து கொள்ளல் .
6 .  மதுபர்கம் – ஸ்ரீ பகவானுக்கு கல்கண்டு அல்லது ஶர்கரைக் கட்டி அளித்தல் .
7 .  ஸ்நானம் – ஸ்ரீ பகவானுக்கு ஸ்நானம் செய்வித்தல் .
8 . வஸ்த்ரம் – வஸ்த்ரம் அணிவித்தல் .
9 .  ஆபரணம் – ஆபரணங்கள் அணிவித்தல் .
10 .  கந்தம் , குங்குமம் – சந்தன குங்குமம் அணிவித்தல் .
11 .  புஷ்பம் – புஷ்பங்களால் அர்சனை செய்தல் .
12 .  தூபம் – தூபம் / வாஸனைப் புகை காட்டுதல் .
13 .  தீபம் – தீபம் காட்டுதல் .
14 .  நைவேத்யம் – நைவேத்யம் செய்தல் .
15 .  கற்பூர நீராஜனம் – கற்பூரம் காட்டுதல் .
16.  வந்தனம் – ப்ரார்தனையும் ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் .

பூஜை மானஸமாக இருக்க முடியும் ..  இதில் நம் ஶ்ரத்தையும் ஸமர்பணமும் ப்ரதானம் ..  மந்த்ர உச்சாரத்தையும் ப்ரார்தனையும்  சேர்த்தால் மானஸ மற்றும் வாக் பூஜை ஆகிறது ..  மனஸில் ஶ்ரத்தையும் வாக்கில் மந்த்ரங்களும் கைகளால் ஷடங்குகளும் செய்யும் போது , மனஸ் , வாக் மற்றும் ரீரம் மூன்றும் சேர்ந்து பூஜை செய்யப் படுகிறது ..  விஶேஷங்களில் நாம் மற்ற மநுஷ்யர்களுக்கு அளித்திடும் அன்பளிப்புகள் உபசாரம் ஆகும் ..  நம் வாழ்த்துக்கள் மந்த்ரம் ஆகும் ..  நம் உள்ளத்தில் அவர் ப்ரதி இருக்கும் அன்பு பகுதியாகும் ..  உள்ளே அன்பில்லாமல் , பக்தியில்லாமல் வெளிப்படையாகச் செய்யப் படும் அனைத்து கர்மங்களும் உயிரற்றவை ..  மந்த்ரங்கள் முக்யம் ..  ஷடங்குகளும் முக்யம்தான் ..  மனஸில் ஶ்ரத்தையும் ஸமர்பணமும் பக்தியும் இவற்றை விட அதிக முக்யம் ..  பக்தி இல்லாத பூஜை உபசாரங்கள் வீண் ..

4 .  பிக்ஷா (II – 5) : –  இப்பதத்தின் நேரடி அர்தம் பிச்சை ஏற்று உண்பது ..  ஆனால் , பிக்ஷா மிக ஸூக்ஷ்மமான , திவ்ய அர்தத்தைப் பகர்கிறது ..  ஹிந்து தர்மத்தில் உள்ள விஶேஷ வார்தை இது ..  ஸம்ஸார வாழ்க்கையின் நித்யம் அற்ற தன்மையை உணர்ந்து , அதைத் துறந்து ஒருவன் ஸந்யாஸம் ஏற்கிறான் ..  அவனுக்கு அடுத்த வேளை போஜனத்தைப் பற்றிய கவலை இல்லை ..  ஶரீரத்தின் குறைந்த பக்ஷத் தேவைக்காக உணவை ஏற்கிறான் ..  அது பிக்ஷை ஆகும் ..  "பிச்சைக்காரன் அடுக்கு மாடி கட்டிடத்தின் ஸ்வந்தக்காரன்" ;  "பத்து ஆட்டோவின் ஸ்வந்தக்காரன் ஒரு பிச்சைக்காரன்" ;  "பிச்சைக்காரனின் வங்கிக் கணக்கில் மூன்று லக்ஷம் ரூபாய்" .. போன்ற செய்திகள் நாம் கேட்பதுண்டு ..  பிச்சை எடுப்பதும் மற்ற தொழில்களைப் போல ஒரு தொழில்தான் ..  ஒருவன் வ்யாபாரம் செய்து பணம் ஈட்டுகிறான் ..  மற்றவன் வேலையில் சேர்ந்து ..  பிச்சைக்காரன் பிச்சை கேட்டு பணம் ஸம்பாதிக்கிறான் ..  மற்றவர் எதிர்க்காலத்திற்கு சேகரிப்பர் ..  பிச்சைக்காரனும் சேகரிக்கிறான் ..  சொத்து வாங்குகிறான் ..  மற்றவர் மேலும் மேலும் நாடுகின்றனர் ..  பிச்சைக்காரனும் த்ருப்தி அடையாமல் மேலும் மேலும் வேண்டுகிறான் ..  ஆனால் , பிக்ஷையின் பாவனை வேறு ..  பிக்ஷையில் வாழ வேண்டும் என்பது ஒருவனின் வாழ்க்கை லக்ஷ்யம் ஆக முடியும் ..  "நான் ஶரீரத்தில் இருந்து வேறுபட்டவன் ..  ஶரீரத்தின் பசிக்கு போஜனம் அளிப்பது ஶரீர தர்மம் ..  அதைச் செய்வது என் கடமை .." என்ற பாவனையுடன் ஒரு ஸந்யாஸீ பிக்ஷை ஏற்கிறார் ..  இத்தகையவருக்கு பிக்ஷை அளிப்பதே வழிபாடு ஆகும் ..  இதை பிக்ஷா வந்தனம் என்கிறோம் ..

5 .  குரு (II  5) : –  நம்மை இருளில் இருந்து ஒளியை நோக்கி , அக்ஞானத்தில் இருந்து க்ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார் ..  வேதம் , தனுர்வித்யா , ஆயுர்வேதம் , ஜ்யோதிஷம் போன்ற ஒரு விஷயத்தைக் கற்பிப்பவர் ஆசார்யன் ..  ஸ்ரீ பரமனை நோக்கிச் செல்லும் வழியைக் காட்டி , அவ்வழியில் சென்றிட உதவுபவர் குரு .  குரு ப்ரஹ்மா , விஷ்ணு , ஶிவன் இம்மூவரின் ஒருங்கிணைந்த ரூபம் ..  குருக்கள் அனைவருக்கும் மூத்தோனாக ஸ்ரீ தத்தாத்ரேயன் கருதப் படுகிறார் ..  குரு பரம்பரையின் ஆதி அவர் ..  அத்ரி மஹர்ஷியின் மனைவி அநஸூயா மஹா பதிவ்ரதை ..  மூன்று தேவிகளான லக்ஷ்மீ , ஸரஸ்வதி மற்றும் பார்வதி அநஸூயாவின் பதி வ்ரதத்தை ஶோதிக்க விரும்பினர் ..  அநஸூயாவிடம் பிக்ஷை வாங்கும் படி தத்தம் கணவனுக்கு அவர்கள் கட்டளை இட்டனர் ..  ஒரு நிபந்தனையும் விதித்தனர் ..  பிக்ஷை அளிக்கும் போது அநஸூயா உடலில் வஸ்த்ரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றனர் ..  தேவி அநஸூயா பிக்ஷை கேட்டு வந்த இம்மூவர் மீது நீரைத் தெளித்து அவர்களை குழந்தைகளாக மாற்றி விட்டாள் ..  பின்னர் அவர்களுக்கு பால் புகட்டினாள் (ஶரீரத்தில் வஸ்த்ரம் இல்லாமல்) ..  மூன்று குழந்தைகளையும் இணைத்து அணைத்த போது , உருவான ரூபமே ஸ்ரீ தத்தாத்ரேயன் ..

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் , "பல குருக்களை நான் ஸந்தித்திருக்கிறேன் ..  எனக்கு ப்ரேரணை அளிக்கும் உயர் குணம் எவரிடம் கண்டேனோ அவரனைவரும் என் குருவாக ஏற்றேன்" என்கிறார் ..  அவர் 24 பெயர்களைக் குறிப்பிடுகிறார் ..  1 .  பூமி .  2 .  நீர் .  3 .  அக்னி .  4 .  வாயு .  5 .  ஆகாஶம் .  6 .  ஸூர்யன் .  7 .  சந்த்ரன் .  8 .  புறா .  9 .  மலைப்பாம்பு .  10 .  கடல் .  11 .  ஈசல் .  12 .  தேனீ .  13 .  யானை .  14 .  தேன் சேகரிப்பவர் .  15 .  மான் .  16 .  மீன் .  17 .  பிங்களா என்ற வேஶீ .  18 .  சிட்டுக்குருவி .  19 .  சிறுவன் .  20 .  இளம்பெண் .  21 .  அம்பு வார்க்கும் கொல்லன் .  22 .  பாம்பு .  23 .  சிலந்தி .  24 .  ப்ருங்கி என்ற புழு .  இவைகளிடம் இருந்து அவர் எவ்வகையில் ப்ரேரணை பெற்று என்னென்ன கற்றார் என்பதை விளக்குகிறார் ..  (10வது ஸ்கந்தம் , அத்யாயம் 7 , 8 , 9) ..

குரு இல்லாமல் வாழ்வில் உயர்வு இல்லை ..  பகவானை விட மேலாகக் கருதப் படுகிறார் குரு ..  உள்ளத் தூய்மையும் அப்பழுக்கற்ற குணமும் எய்த பின்னரே பகவான் ஒருவனை ஏற்கிறார் ..  ஆனால் குருவோ ஒருவனை அவனிருக்கும் நிலையில் ஏற்கிறார் ..  அவனை மெருகேற்றி பகவானின் அருள் பெறும் தகுதி உள்ளவன் ஆக்குகிறார் ..

6 .  இந்த்ரிய (II  8) : –  இந்த்ரியங்கள் / புலன்கள் .  மநுஷ்ய ஶரீரத்தில் பத்து முக்ய அங்கங்கள் உண்டு ..  க்ஞானத்திற்கான ஐந்து அங்கங்கள் (கண் , காது , நாஸி , நாக்கு , தோல்) ..  கர்மத்திற்கான ஐந்து அங்கங்கள் (கைகள் , கால்கள் , தொண்டை , மல-மூத்ர அங்கம் , ஜனன உறுப்பு) ..  இந்த அங்கங்களின் ஆற்றல் இந்த்ரியம் எனப்படுகிறது ..  கண்ணின் பார்க்கும் ஆற்றல் ..  காதின் கேட்கும் ஆற்றல் , நாஸியின் நுகரும் ஆற்றல் , நாக்கின் ருசிக்கும் ஆற்றல் மற்றும் தோலின் உணரும் ஆற்றல் ..  இந்த ஐந்து இந்த்ரியங்களும் ஐந்து அங்கங்களும் சேர்ந்து நமக்கு உலக க்ஞானத்தை அளிக்கின்றன ..  கண்ணுக்கு காட்சி , காதிற்கு ஶப்தம் , நாஸிக்கு கந்தம் , நாவிற்கு ருசி , தோலிற்கு தொடு உணர்ச்சி .. இந்த்ரியங்களுக்கான விஷயங்கள் இவை ..  அதே போல் , கர்மத்திற்கான ஐந்து அங்கங்களின் ஆற்றல் கர்மேந்த்ரியங்கள் ..  இவை புத்தியின் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு கார்யம் செய்கின்றன ..

7 .  ஸுர / அஸுர (II – 8) : –  ஸுர என்றால் தெய்வம் ..  அஸுர என்பவர் தெய்வத்திற்கு எதிரானவர் ..  ஸுரா பானம் என்பது தேவ லோகத்து பானம் ..  க்றிஸ்தவத்தில் சொல்லப் பட்டுள்ள தேவன் - டெவில் / ஸாத்தான் என்பது இதே போலத் தோன்றினாலும் , இக்கருத்துக்கு ஸமம் ஆகாது ..

அஸுரர்கள் கொம்புடனும் கோரப்பற்களுடனும் விகார முகத்துடனும்  சித்ரிக்கப் பட்டாலும் , ஸுர - அஸுர இருவருக்கும் மனப்பான்மையில் தான் பேதம் ..  கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் பதினாறாம் அத்யாயத்தில் தேவ - அஸுர கண்ணோட்டங்களை விவரிக்கிறார் ..  காமம் , க்ரோதம் மற்றும் லோபம் ஆகிய மூன்றும் அஸுரர்களில் காணப்படும் ப்ரதானத் தன்மைகள் என்கிறார் ..  ப்ரஹஸ்பதி ஸுரர்களின் குரு ஆவார் ..  ஶுக்ராசார்யன் அஸுரர்களின் குரு ..

8 .  ப்ரக்ஞா (II – 11) : –  ஸ்வ உணர்வு நிலை ..  ஸ்திர நிலை ..  இந்த்ரிய ஸுகங்களுக்குப் பின்னால் அலையும் மனஸு , புத்தியையும் பாதிக்கிறது ..  புத்தி போதம் இழந்த நிலையை , ஸ்வ நினைவு இழந்த நிலையை அடைகிறது ..  ஆயிரம் யோஜனைகளுக்கு இடையில் தத்தளிக்கிறது ..  விவேகம் உறுதியாக ஆக , புத்தி ஸ்திரமாகி , ஒளியுற்றதாகிறது ..  அந்த நிலையே ப்ரக்ஞா ..

9 .  கதாகத (II - 11) –  வந்து போவது ..  நிரந்தரமில்லாதவை ..  செல்வம் , புகழ் , பெருமை , பதவி , செல்வாக்கு , மனைவி , குழந்தைகள் என்று அனைத்தும் கதாகத ..  இவை அனைத்தும் அநித்யம் ..  இன்று , ஏன் இந்த க்ஷணம் நம்மிடம் இருக்கும் ..  அடுத்த க்ஷணம் இல்லாமல் போகலாம் ..  இன்று நம்மை விட்டு விலகலாம் ..  நாளை மீண்டும் சேரலாம் ..  வந்தவை போகும் ..  போனவை வரும் ..  இந்த ஒத்தை பதத்திற்கு ஸம்ஸாரத்தைப் பற்றிய நம் கண்ணோட்டத்தைத் திருத்தி விடும் ஆற்றல் உண்டு ..

10 .  பண்டித (II – 11) : –  அறிந்தவன் ..  தமிழ் அறிந்தவன் தமிழ்ப் பண்டிதன் ..  ஹிந்தி அறிந்தவன் ஹிந்தி பண்டித் ..  ஸமையல் கலையில் நிபுணன் ஸமையல் பண்டித் ..  (மஹாராஷ்ட்ர , மத்ய ப்ரதேஶம் , குஜராத் மாநிலங்களில் ஸமையல் செய்பவர்கள் பண்டித் என்று அழைக்கப் படுகின்றனர் ..)  ஆனால் , இவற்றை எல்லாம் அறிவதால் என்ன ஃபலன் ??  அறியப் பட வேண்டியதை அறிபவனே பண்டித ..  பன்மைக்குப் பின்னல் உள்ள ஒருமையை , அழிபவற்றின் பின்னால் உள்ள அழிவில்லாததை , பேதங்களுக்குப் பின்னால் உள்ள ஸமத்வத்தை , லோகத்தில் உள்ள அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஒன்றை அறிவதே அறிதல் ஆகும் ..  இதை அறிபவன் பண்டித ..  ஆதி ஶங்கரன் தம் பாஷ்யத்தில் , "ஸ்ரீ பரமாத்மனை நோக்கித் திரும்பியவனைப் பண்டித" என்கிறார் ..

11 .  தேஹ / தேஹின (II – 13) –  தேஹ என்பது ஶரீரம் ..  தேஹத்தை ஏந்தியவன் தேஹின ..  தேகத்தை அணிந்தவன் தேஹின ..  ஒரு அரிய தத்வத்தை வெளிப்படுத்தும் பதம் தேஹின ..  "மநுஷ்யன் வெறும் ஶரீரம் இல்லை ..  தேஹத்தை அணிந்திருப்பவன் மாத்ரமே" ..  ஒரு சட்டையை அணிந்திருப்பவன் சட்டையை விட வேறானவன் அல்லவா ??  மாலை அணிந்திருப்பவனும் மாலையும் வெவ்வேறல்லவா !!  அதே போல , தேஹம் வேறு ..  அதை அணிந்திருப்பவன் மநுஷ்யன் ..  அவன் அதை ஏற்றிருக்கும் வரை அதற்குப் பல்வேறு ஆற்றல்கள் உண்டு ..

12 .  மாத்ராஸ்பர்ஶ (II – 14) : –  ‘ஸ்பர்’ என்பது தொடுதல் ..  பொதுவாக தோலால் தொடுதலே தொடுதல் எனப்படும் ..  ஆயின் , மாத்ராஸ்பர்ஶ என்பது இந்த்ரியங்கள் தத்தம் விஷயங்களைத் தொடுதல் ..  கண் காக்ஷியையும் , காது ஶப்தத்தையும் , நாஸி கந்தத்தையும் , நாக்கு ருசியையும் தோல் ஸ்பர்ஶ உணர்வையும் அநுபவித்தலே மாத்ராஸ்பர்ஶ ..

13 .  அம்ருத (II – 15) : –  மரணம் அற்ற நிலை .  ம்ருத என்பது மரணம் ..  அம்ருத என்பது மரணம் அற்ற நிலை ..  தேவர்கள் மற்றும் அஸுரர்களால் நிகழ்த்தப் பட்ட ஸமுத்ரக் கடைதலில் அம்ருதம் வெளிப்பட்டது ..  அதை தேவர்கள் எடுத்துப் பருகினர் ..  அம்ருத நிலையை அடைந்தனர் என்கிறது புராணம் ..  மநுஷ்யன் தேவர்களை அமரர்களாகக் கருதலாம் ..  மநுஷ்யனின் வாழ்நாளை விட பல்மடங்கு நீண்ட வாழ்நாள் தேவர்களுடையது ..  ஆனால் , தேவர்களின் வாழ்க்கையும் முடிவுள்ளதே ..  ஏன் ??  தேவேந்த்ரனும் ப்ரஹ்மாவும் கூட முடிவுறும் காலம் வாழ்பவர்கள் ..  ஸ்ரீ பரமாத்மன் மாத்ரமே அமரன் அல்லது ம்ருத்யுவிற்கு அப்பாற்பட்டவன் ..  நித்யம் ஆனவன் ..  மற்ற அனைத்தும் அநித்யம் ..  அவனுடன் இணைந்து விட்டால் மநுஷ்யனும் அமரன் ஆக முடியும் ..  தான் இழந்து அவன் ஆக வேண்டும் ..

யஜுர் வேதத்தில் ருத்ரம் என்றொரு பகுதி உண்டு ..  அதில் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம் என்றொரு மந்த்ரம் உண்டு ..  ம்ருத்யுஞ்ஜய என்றால் மரணத்தை ஜயிப்பது ..  அதாவது அமரத்வத்தை அடைவது ..  "எனக்கு வைராக்யம் , பற்றின்மை அருளிடு ..  முழுமையாக பக்வம் அடைந்த ஒரு பழம் மரத்தில் இருந்து எவ்வாறு ப்ரயாஸை இன்றி விலகுகிறதோ , அவ்வாறு இவ்வுலகத்தை விட்டு நான் பிரிய வேண்டும்" என்கிறது அம்மந்த்ரம் ..  அதாவது வைராக்யத்தால் மரணத்தை வெல்ல முடியும் ..

14 .  ஸத் (II – 16) : –  ஸத் என்றால் இருப்பு ..  ஸ்ரீ பரமாத்மாவின் மூன்று (ஸத் , சித் , ஆனந்த) தன்மைகளில் ஒன்று ..  அவன் ஒருவனே இருக்கிறான் ..  அழியும் இவ்வுலகில் அழியாத ஒன்று அவன் மாத்ரமே ..  நாம் இல்லை என்பதல்ல அர்தம் ..  நாம் இருப்பது போல தோன்றுகிறது ..  தொடர்ந்து மாறிக் கொண்டு இருக்கிறோம் ..  அழிந்து கொண்டு இருக்கிறோம் ..  ஒரு TV ஸெட்டில் நாம் காக்ஷிகளைக் காண்கிறோம் ..  காக்ஷிகள் இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றன ..  மாறி அழிந்து கொண்டிருக்கும் புள்ளிகளின் தொகுப்புதான் காக்ஷிகள் ..  இருப்பது TV திரை தான் ..  காக்ஷிகளின் மாற்றங்கள் அனைத்தும் மாறாத திரையின் ஆதாரத்தில் ஏற்படுகின்றன ..  நதி ஓடுகிறதா ??  நதியில் நீர் ஓடுகிறது ..  நீர்ச் சொட்டுகள் சேர்ந்து நதி என்ற இல்லாத ஒன்றை இருப்பது போல தோற்றுவிக்கின்றன ..  ஓடிக் கொண்டே இருக்கிறது ..  மாறிக் கொண்டே இருக்கிறது ..  மாற்றம் நிகழ்வது இரு கரைகளுக்கு இடையே அமைந்துள்ள நதியின் படுக்கை என்ற மாறாத ஒன்றின் ஆதாரத்தில் ..  அதே போல , இவ்வுலகமும் இங்குள்ள அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன ..  அழிந்து கொண்டே இருக்கின்றன ..  ஆனால் , இம்மாற்றங்கள் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது என்றும் மாறாத அவன் , என்றும் நிலைத்து இருக்கும் அவன் ..  அவனே அனைத்திற்கும் ஆதாரம் ..  அவனே ஸத் ..

ஸத் என்பது உண்மையும் ..  உண்மையும் நித்யம் ஆனது ..   எனவே , உண்மை அல்லது ஸத்யமும் ஸ்ரீ பரமனின் ஸ்வரூபமே ..

15 .  அஸத் (II – 16) : –  ஸத் அல்லாதது அஸத் ..  மாறக்கூடியவை , அழியக் கூடியவை , நித்யம் இல்லாதவை அனைத்தும் அஸத் ..  இருளை வர்ணிக்கும் போது ஒளியின் அபாவம் அல்லது ஒளி இல்லா நிலை என்கிறோம் ..  அதே போல , ஸத் அல்லாதது அஸத் ..  அஸத் என்ற ஒன்று கிடையாது ..  இருப்பது போலத் தோன்றும் மாயை அஸத் ..  ஸ்ரீ பரமன் ஸத் ..  ஸம்ஸாரம் அஸத் ..

16 .  அவிநாஶி (II – 17) : –  நாஶம் அல்லது அழுவு இல்லாதவன் ..  இது ஸ்ரீ பரமனை விவரிக்கும் ஒரு படம் ..  நம்மைச் சுற்றி அனைத்து அழியக் கூடியவர் ..  ஸ்ரீ பரமாத்மன் மாத்ரமே அழிவு அற்றவன் ..

17 .  அஜம் (II – 21) : –  பிறப்பு இல்லாதது ..  ஆரம்பம் இல்லாதது ..  இந்தப் பதமும் ஸ்ரீ பரமாத்மனைக் குறிக்கும் பதம் ..  இங்கு படைக்கப்பட்டவை அனைத்தும் பிறக்கின்றன அல்லது தோன்றுகின்றன ..  பிறப்பவை அனைத்தும் இருக்கும் ..  தோன்றும் அனைத்தும் மறையும் ..  ஆரம்பம் உள்ள அனைத்திற்கும் முடிவு உண்டு ..  உருவாக்கப் பட்ட அனைத்தும் அழியும் ..  உருவாக்கத்திற்கும் இருத்தலுக்கும் அழிவிற்கும் காரணமான ஸ்ரீ பரமாத்மன் பிறப்பில்லாதவன் ..  தோற்றம் இல்லாதவன் ..  ஆரம்பம் இல்லாதவன் ..  அவன் இருந்தான் ..  அவன் இருக்கிறான் ..  அவன் இருப்பான் ..  நாம் ஸ்ரீ பரமாத்மனை அவன் என்கிறோம் , அவள் என்கிறோம் , அது என்கிறோம் ..  நம் பாஷைகளில் உள்ள குறைய இது வெளிப்படுத்துகிறது ..  நம் பாஷைகள் அவனை விளக்கப் போதுமானவை அல்ல ..  பால்களுக்கு அப்பாற்பட்டவன் / ள் / து அவன் / அவள் / அது ..

18 .  அவ்யயம் (II – 21) : –  மாறாதது .  அழிவற்றது ..  இதுவும் ஸ்ரீ பரமனைக் குறிக்கும் பதம் ..  மாற்றம் அழிவின் வேறு ரூபம் ..  அவன் மாற்றத்திற்கு அப்பாற்பட்டவன் ..  நாம் காணும் இந்த ஸம்ஸாரத்தில் அனைத்தும் மாற்றம் , அழிவு மற்றும் மரணத்திற்கு உட்பட்டவை ..  மாறாதது ஸ்ரீ பரமாத்மன் மாத்ரமே ..

19 .  பூத (II – 30) : –  ப்ருத்வீ (மண்) , ஜலம் (நீர்) , வாயு (காற்று) , அக்னி (உஷ்ணம்) , ஆகாஶம் (வெற்றிடம்) என்பவை படைப்பின் ஆதாரமான ஐந்து பூதங்கள் ..  படைப்பில் உள்ள அனைத்தும் இவ்வைந்தின் கலவையால் உருவானவை ..  நம் ஶரீரத்தைப் பார்ப்போம் ..  மண் இருக்கிறது ..  எலும்பு , ரக்தம் , பல் , தஸைகள் , நகம் , பல்வேறு த்ரவ்யங்கள் என்று அனைத்திலும் மண்ணில் காணப்படும் கனிமங்கள் இருக்கின்றன ..  அதனால் தான்  மரணத்தின் போது ஶரீரம் ஸுலபமாகக் கரைந்து மண்ணுடன் மண்ணாகி விடுகிறது ..  பூமியில் 70 ஶத விஹிதம் நீர் இருப்பது போல் , நம் தேஹத்திலும் 70 ஶத விஹிதம் நீர் உள்ளது ..  நீர் அளவு குறைந்தால் வறட்சி ஏற்பட்டு ஶரீரம் கோமா நிலையும் மரணமும் எய்து விடும் ..  நாம் ஆக்ஸிஜன் வாயுவை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைட் வாயுவை வெளியேற்றுகிறோம் ..  ஶரீரத்தில் மற்ற வாயுக்களும் உண்டு ..   ஶரீரத்தில் உஷ்ணம் இருக்கிறது ..  உணவை ஜீர்ணம் செய்யவும் ரக்த ஸஞ்சாரத்திற்கும் மற்ற அங்கங்கள் வேலை செய்யவும் உஷ்ணம் அவஶ்யமானது ..  உஷ்ணம் அதிகம் ஆனாலும் குறைந்தாலும் மரணம் வாய்த்து விடும் ..  ஶரீரத்தில் ஆகாஶமும் உண்டு ..  உள்ளும் வெளியும் வெற்றிடங்கள் உண்டு ..  வெளியே எங்கும் வெற்றிடம்தான் .. நாம் இருப்பதே ஆகாஶத்தில் ..  ஶரீரம் என்று அருவம் இருக்கும் அதற்கு ஆகாஶத்தில் ஒரு பகுதி தேவை ..  ஶரீரத்தின் உள்ளும் காலி இடங்கள் உள்ளன ..

மரணம் ஏற்படும் போது , ஶரீரம் அழிந்து , இவ்வைந்து பூதங்களும் தத்தம் மூலத்துடன் இணைந்து விடுகின்றன ..

பூத என்பது உயிரினங்கள் ..  'ஸர்வ பூத ஹிதே ரதாஹ' (XII - 4) என்கிறது கீதை ..  'அனைத்து உயிர்களின் நலன் விழைதல் ..

பூத என்பது கடந்த காலத்தையும் குறிக்கும் ..

20 .  ஸ்வதர்ம (II – 31) : –  ஸ்வந்த தன்மை ..  தர்மம் தொழிலை அல்லாமல் கண்ணோட்டத்தைக் குறிக்கும் ..  அக்னியின் தன்மை உஷ்ணம் ..  கல்லின் தன்மை கடினம் ..  ஈரம் மற்றும் ப்ரவாஹம் நீரின் தன்மை ..  அதே போல , மநுஷ்யர்களுக்கும் ஸ்வதர்மம் உண்டு ..  தத்தம் ஸ்வதர்மத்திற்கு ஏற்ப , தம் வாழ்க்கையை அமைக்க முயல வேண்டும் ..  ஸ்வதர்மத்திற்கு மாறாக வாழ முயல்வது பயம் தரக் கூடியது ..  “ஸ்வதர்மத்தில் மரணமும் உயந்தது ..  ஆனால் , பர தர்மம் பயங்கரமானது ” ..

21 .  க்ஷத்ரிய (II – 31) : –  க்ஷாத்ரம் நான்கு வர்ணங்களில் ஒன்று ..  நான்கு அடிப்படை தன்மைகளில் ஒன்று ..  க்ஷாத்ர வர்ணத்தை ஸார்ந்தவன் க்ஷத்ரியன் ..  ஒருவன் க்ஷத்ரியன் ஆவது குணம் மற்றும் கர்மங்களாலே ..  இதுவே கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணனின் அறிவிப்பு ..  க்ஷத்ரியனுக்கு உரிய குணங்கள் ..  ஶௌர்யம் (ஶூரத்தனம் அல்லது துணிச்சல்) , தேஜஸ் (மற்றவர் மீது தன் ஆளுமையின் தாக்கம்) , த்ருதி (பொறுமை , தைர்யம்) , தாக்ஷ்யம் (விழிப்பு உணர்வு) , யுத்தே சாப்யபலாயனம் (எடுத்த போராட்டத்தில் இருந்து விலகி ஓடாமை) , தானம் , ஈஶ்வரபாவம் (நானே தலைவன் என்ற பாவம்) ..  ஜன்மம் / பிறப்பு க்ஷாத்ரத் தன்மையை நிர்ணயிப்பதில்லை ..  ஆனால் , ஒரு ஜீவன் தன் வாஸனைக்கு ஏற்ற ஶரீரத்தையும் குடும்பச் சூழ்நிலையையும் தேர்ந்தெடுக்கிறது என்பது ஸத்யமானால் ஜன்மமும் முக்யமானதே ..  க்ஷத்ரிய குடும்பத்தில் க்ஷத்ரியன் பிறக்கிறான் என்பதே ஸத்யம் ..  க்ஷத்ரியன் அல்லாத குடும்பத்தில் ஒரு க்ஷத்ரியன் பிறப்பது துர்லபமே ..  உலக இதிஹாஸத்தில் க்ஷத்ரிய ராஜாக்களும் ஸேனாதிபதிகளும் மேலே குறிப்பிட்ட க்ஷத்ரியத் தன்மைகளால் மஹத்தான ஸாதனைகளை , ப்ரமிக்க வைக்கும் ஸாதனைகளை ஸாதித்து உள்ளனர் ..


22 .  ஸாங்க்ய (II – 39) : –  ஹிந்து ஸமுதாயத்தில் எண்ணற்ற தீர்க தர்ஶிகள் தோன்றி உள்ளனர் ..  அவர்களில் ஶட் - தர்னங்கள் எனப்படும் ஆறு தர்னங்களைப் படைத்த முக்யமானோர் அறுவர் ..  அந்த ஶ்ட் - தர்னங்களில் ஒன்றே ஸாங்க்யம் ..  கபில முனியின் படைப்பு இது ..  ஸ்ரீ பரமாத்மனைப் பற்றியும் அவனது படைப்பைப் பற்றியும் விவரித்திடும் தர்னம் இது ..  கீதையின் ரெண்டாம் அத்யாயம் 'ஸாங்க்ய யோகம்' எனப்படுகிறது ..  க்ஞான மார்கத்தின் மற்றொரு பெயர் ..

23 .  புத்தி (II – 39) : –  புத்தி நம் அந்தஹ்கரணங்களில் ஒன்று ..  மநுஷ்யனுக்கு அருளப்பட்ட உட்கருவிகளில் ஒன்று ..  கண் , காது , நாஸி , நாக்கு , கை , கால் . ஆகியவை புறக் கருவிகள் ..  மனஸ் , புத்தி , சித்தம் , அஹங்காரம் ஆகியவை உட்கரணங்கள் ..  ஸம்ஸாரத்துடன் உறவாடி பலவகைகளில் அநுபவிப்பது மனஸ் ..  என்ன , ஏன் , எப்படி , என்ற கேள்விகளை எழுப்பி , அநுபவங்களின் ஆதாரத்தில் நிர்ணயம் செய்து யோஜனை சொல்வது புத்தி ..  அநுபவங்களை ஶேகரித்து வைப்பது சித்தம் ..  நான் என்ற உணர்வு அஹங்காரம் ..  புத்தி என்பது மூளை இல்லை ..  மூளை ஒரு புறக்கருவி ..  இக்கருவியின் மூலம் புத்தி செயல்படுகிறது ..  அநுபவங்களை அலசி ஆராய்வது புத்தி ..  "நல்ல புத்தி கொடு ஸாமி" என்றொரு ஸாமான்ய ப்ரார்தனை உள்ளது ..  ஸத் யோஜனைகளைச் சொல்வது ஸத் புத்தி அல்லது ஸுபுத்தி ..  கேடான யோஜனைகள் சொல்வது துர்புத்தி ..  நம் வாஸனைகளுக்கு ஏற்ப , நம் கர்மங்கள் மற்றும் சிந்தனைகள் அடிப்படையில் நமக்கு புத்தி வாய்க்கிறது ..  முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் துர்யோதனாதிகளை துஷ்ட புத்தி கொண்டவர்கள் என்கிறான் (I - 23) ..  மனஸை வஶப்படுத்திய புத்தி ஸ்திர புத்தி ஆகும் ..  மனஸால் அலைக்கழிக்கப் படும் புத்தி அஸ்திர புத்தியாகும் (II - 40) .  நாம் கேட்கிறோமா இல்லையா என்பதைப் பற்றிக் கவலை இல்லாமல் , நம் ஸ்வபாவத்திக்கு ஏற்ற யோஜனை சொல்வது புத்தி ..  புத்தியின் யோஜனையைக் கேட்பவன் புத்திஶாலி எனப் படுகிறான் ..

24 .  வேத (II – 42, 45) : –  வேதம் ஹிந்துக்களின் புநிதப் புஸ்தகம் ..  ஆனால் வேதம் என்ற பதத்திற்கு அறிதல் , க்ஞானம் என்பது நிஜ அர்தம் ..  வித் / வித்வான் என்பவன் அறிந்தவன் ..  வித்யா என்பது கல்வி ..  இவை அனைத்திற்கும் மூல வார்தை வேதம் ..

ஸ்ரீ க்ருஷ்ண த்வைபாயன என்ற வேத வியாஸர் வேதங்களை சேகரித்து , நான்கு பகுதிகளில் 1180 ஷாகைகளாகப் பிரித்துத் தொகுத்தார் ..  (இன்று நம்மிடம் 8 , 9 ஷாகைகளே உள்ளன ..)  ரிக் , யஜுர் , ஸாம , அதர்வண இவை நான்கு வேதங்கள் ..  ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை , ப்ராஹ்மணம் மற்றும் ஆரண்யகம் என்று மூன்று பாகங்கள் உள்ளன ..  ஆரண்யகத்தின் இறுதியில் உபநிஷதங்கள் அல்லது வேதாந்தம் உள்ளது ..  வேதாந்தம் ப்ரஹ்ம தத்வத்தின் ஸத்யத்தை உரைக்கின்றன ..  வேதத்தில் ஶிக்ஷை (ஶப்த்ம்) , வ்யாகரணம் (இலக்கணம்) , சந்தஸ் (சந்தங்கள்) , நிருக்தம் , ஜ்யோதிஷம் மற்றும் கல்பம் (சடங்குகளின் வர்ணனை) .. ஷடாங்கம் எனப்படும் ஆறு அங்கங்கள் உண்டு ..  ஶரீர அங்கங்களைப் போன்றவை இவை ..  ஶிக்ஷை என்பது வேத புருஷனின் நாஸி ..  வ்யாகரணம் அவனது வாய் ..  ஜ்யோதிஷம் கண்கள் ஆகும் ..  நிருக்தம் காது ..  கல்பமும் சந்தஸும் கால்கள் ஆகும் ..  புராணம் , ந்யாயம் , மீமாம்ஸ மற்றும் தர்ம ஶாஸ்த்ரம் ஆகிய நான்கும் உபாங்கங்கள் ..  கர்ம காண்டம் மற்றும் க்ஞான காண்டமும் ரெண்டு மார்கங்களைக் குறிக்கும் ..  கர்ம காண்டம் குறித்திடும் மார்கம் ப்ரவ்ருத்தி மார்கம் ..  க்ஞான காண்டம் காட்டும் மார்கம் நிவ்ருத்தி மார்கம் ..  ப்ரவ்ருத்தி என்பது பற்றிக் கொள்ளுதல் அல்லது ஈடுபடுதல் ..  நிவ்ருத்தி என்பது விடல் அல்லது த்யாகம் செய்தல் ..

தனுர் வேதம் , காந்தர்வ வேதம் , ஆயுர் வேதம் மற்றும் அர்த ஶாஸ்த்ரம் இவை உப வேதங்கள் ..  தனுர் வேதம் யுத்தக்கலையை விவரிக்கிறது ..  காந்தர்வ வேதம் ஸங்கீதம் போன்ற கலைகளை விவரிக்கிறது ..  ஆயுர்வேதம் ஆரோக்யத்தையும் மருத்துவ ஶாஸ்த்ரத்தையும் விவரிக்கிறது ..  அர்த ஶாஸ்த்ரம் பொருளாதாரத்தையும் ராஜாங்கத்தையும் விவரிக்கிறது ..

25 .  ஐஶ்வர்ய (II – 43) : –  ஆக்ஷி அல்லது ஆதிக்யம் அல்லது ப்ரபாவம் ..  ஐஶ்வர்யம் என்றால் செல்வம் என்ற தவறான அர்தம் பரவலாக உள்ளது ..  தேவீ  லக்ஷ்மீக்கு 'ஐஶ்வர்யா' என்ற பெயர் உண்டு ..  அது அவளது ப்ரபாவத்தைக் குறிக்கும் பெயர் ..  ஐவர்யம் என்ற பதத்தின் மூல பதம் ஈஶ்வரன் ..  ஈவரன் என்றால் நாயகன் , ஆள்பவன் என்று அர்தம் ..  செல்வமும் ஆள்பவனின் ஒரு லக்ஷணமாக இருப்பதால் 'ஐவர்யத்தில்' செல்வமும் அடங்கும் ..

26 .  த்ரிகுண (II – 45) : –  ஸத்வம் , ரஜஸ் மற்றும் தமஸ் இவை ப்ரக்ருதியின் அடிப்படையான மூன்று குணங்கள் ..  ப்ரக்ருதியில் உள்ள அனைத்தும் வெவ்வேறு விஹிதங்களில் இம்மூன்று குணங்களின் கலப்பே ..  தெளிவு ஸத்வம் ..  குழப்பம் ராஜஸம் ..  தாமஸம் விக்ருதி / கோணல் ..  அமைதி ஸத்வம் ..  செயல்பாடு ராஜஸம் ..  மோஹம் அல்லது மயக்கம் தாமஸம் ..  ஸத்வம் தூய்மை , ஒளி மற்றும் ஞானத்துடன் பிணைந்தது ..  விருப்பம் , காமம் மற்றும் செயலுடன் பிணைந்தது ராஜஸம் ..  தாமஸம் தூக்கம் , சோம்பல் மற்றும் அறியாமையுடன் பிணைந்தது ..  மூன்று குணங்களும் நம்மை ஸமமாகப் பிணைத்திடும் ..  பிணைத்திடும் சங்கிலியில் உயர்வென்ன ..  தாழ்வென்ன ??  கயிற்றால் பிணைக்கப் பட்டால் என்ன ??  இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்டால் என்ன ??  ஸ்வர்ண சங்கிலியால் பிணைக்கப் பட்டால்தான் என்ன ??  ஸ்ரீ க்ருஷ்ணன் முக்குணங்களில் இருந்தும் விடுபட்டு , குணாதீதன் ஆகச் சொல்கிறான் ..

27 .  விஷய (II – 45) : –  தீனி ..  இந்த்ரியங்களுக்கான தீனி ..  நம் ஶரீரங்களில் நாம் வெளிப்படையாகக் காணும் கண் , காது , நாக்கு , மூக்கு இவை இந்திரியங்கள் அல்ல ..  இவற்றின் ஆற்றலே இந்த்ரியம் ..  காக்ஷி பார்வைக்குத் தீனி ..  ஶப்தம் ஶ்ரவணத்திற்குத் தீனி ..  கந்தம் நுகரும் ஆற்றலுக்குத் தீனி ..  எண்ணங்கள் மனஸுக்குத் தீனி ..  சிந்தனை மற்றும் பகுத்தறிதல் புத்திக்கு விஷயங்கள் ..  அஹங்காரத்திற்கு அறியாமையே விஷயம் ..  இந்த்ரியங்களும் விஷயங்களும் ப்ரக்ருதியின் அம்ங்கள் ..  பரமாத்மனில் இருந்து வேறானவை ..

28 .  ப்ராஹ்மண (II – 46) : –  ப்ராஹ்மண சாதுர்வர்ணத்தில் , நான்கு அடிப்படைத் தன்மைகளில் ஒரு வர்ணம் அல்லது தன்மை ..  ப்ரஹ்மத்தை நாடுபவன் , க்ஞானத்தை நாடுபவன் ப்ராஹ்மணன் ..  ப்ராஹ்மணன் தந் குணங்கள் மற்றும் கர்மங்களில் இருந்து அறியப் படுகிறான் ..  வேத பாராயணம் , வேதம் கல்பித்தல் , ஹோமம் செய்தல் , ஹோமம் செய்வித்தல் , தானம் பெறுதல் , தானம் அளித்தல் ஆகிய இவை ப்ராஹ்மணனின் ஆறு அடிப்படை கர்மங்கள் ..  ஶம (ஶாந்தி) , தம (இந்த்ரியங்கள் மீது கட்டுப்பாடு) , தபஸ் (நியமங்களுடன் உறுதியாக ஒரே நோக்கத்தில் தொடர் முயற்சி) , ஶௌசம் (ஶரீர , வாக் , மனத் தூய்மை) , க்ஷாந்தி (பொறுமை மற்றும் மன்னிக்கும் தன்மை) , ஆர்ஜவம் (எளிமை , கபடம் இன்மை) , க்ஞானம் (அத்யாத்ம க்ஞானம்) , விக்ஞானம் (உலக க்ஞானம்) மற்றும் ஆஸ்திக்யம் (அவன் இருக்கிறான் என்ற ஶ்ரத்தை) .. ஆகியவை ப்ராஹ்மணனின் ஸஹஜ ஸ்வபாவம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

29 .  கர்ம (II – 47) : –  தர்மத்தைப் போலவே கர்மம் என்ற பதத்திற்கும்  வெவ்வேறு ஸந்தர்பங்களில் வெவ்வேறு அர்தம் உண்டு ..  ‘செயல்’ என்பது பொதுவாக அறியப்படுவது ..  ஶரீரம் , வாக் மற்றும் மனஸால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்மங்கள் ஆகும் ..  நான் செய்கிறேன் என்ற பாவத்ததுடனும் பற்றுடனும் செய்யப் பட்டால் ..  பற்றுதான் பிணைக்கிறது ..  பற்றுடன் செய்யப் படும் கர்மமும் பிணைக்கிறது ..  பற்றில்லாமல் ஸ்வயமாக நடைபெறும் செயல்கள் பிணைப்பதில்லை ..  அவற்றை அகர்மம் எனலாம் ..

யக்ஞங்களும் வேதத்தில் பகரப்பட்ட மற்ற ஷடங்குகளும் கர்மம் எனப் படுகின்றன ..  இவற்றை விளக்கும் பகுதி கர்ம காண்டம் என்றே அறியப் படுகிறது ..  கர்மம் கடமை என்ற அர்தத்திலும் வரும் ..  வர்ணத்திற்கு ஏற்ற கர்மம் ..  ஜாதிக்கு ஏற்ற கர்மம் ..  அன்றாடம் செய்யப் பட வேண்டியவை நித்ய கர்மம் ..  அவ்வப்போது செய்யப் படும் கர்மங்கள் நைமித்திக கர்மம் ..  ஃபலன் மீது பற்று வைத்துச் செய்யப் படும் கர்மம் காம்ய கர்மம் ..  பற்றில்லாமல் நடக்கும் கர்மம் நிஷ்காம கர்மம் ..  தவிர்க்கப் பட வேண்டிய கர்மம் நிஷித்த கர்மம் ..

ஒருவன் கஷ்டப் படுவதைப் பார்ப்போர் , "எல்லாம் கர்ம வினை .." "கர்மத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று சொல்லப் படுவதைக் கேட்கிறோம் ..  ஒவ்வொரு கர்மத்திற்கும் ப்ரதி கர்மம் உண்டு என்ற நிஶ்சயமான கருத்தே இத்தகைய சொற்களுக்குக் காரணம் ..  கர்மங்களைச் செய்யும் போது இந்தக் கருத்து ஏற்பட்டால் சிறப்பு ..  பெரும்பாலோருக்கு ஃபலன்களை , அதிலும் கஷ்டமான ஃபலன்களை அநுபவிக்கும் போதுதான் இந்த உணர்வு ஏற்படுகிறது ..  அதை அநுபூதி என்று சொல்ல முடியாது ..  ஃபலன்களின் கஷ்டத்தை ஸஹிக்க முடியாத புலம்பல் இது ..  அநுபூதி எதிர்க்காலத்து கர்மங்களில் வெளிப்படும் ..  அடுத்த கர்மத்திற்குத் தயார் செய்யும் போது , இன்று கிடைத்த ஃபலன் க்ஞாபகம் வருவதில்லை ..  மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கிறான் ..  விஷய ஸுகங்களின் மீதுள்ள பற்றே காரணம் ..  கர்மத்திற்கும் அதனால் விளையும் ஃபலனுக்கும் இடையே உள்ள கால இடைவெளியும் காரணம் ..  சில கர்மங்கள் உடனுக்குடன் ஃபலன் கொடுக்கும் ..  மற்ற சில கர்மங்கள் இதே ஜன்மத்தில் ஃபலன் அளித்திடும் ..  சில கர்மங்கள் அடுத்த ஜன்மங்களில் கிடைத்திடும் ..

30 .  ஸங்க (II – 48) : –  ஸங்கம் என்பது கூட்டு ..  சேர்க்கை ..  ஸத்ஸங்கம் என்பது ஸத்துடன் சேர்க்கை ..  ஸாதுஸங்கம் என்பது ஸாதுக்கள் சூழ இருப்பது ..  விஷய ஸங்கம் என்பது இந்த்ரியங்கள் தத்தம் விஷயங்களுடன் சேர்ந்து ஸுக போகத்தில் திளைத்திருப்பது ..

31 .  யோக (II – 45 , 48) : –  அடைதல் ..  அவஶ்யமானதை அடைதல் யோகம் ..  இருப்பதைக் காத்தல் க்ஷேமம் ..  இவ்விரண்டு பாதங்களும் சேர்ந்தே ப்ரயோகத்தில் வரும் ..

இணைதல் ..  ஒருவனுக்கு அமையும் நல்ல காலத்தை அவனுடைய யோகம் என்று சொல்லும் வழக்கம் உள்ளது ..  'நேரம் கூடி வந்தது' என்பதை அவ்வாறு சொல்கிறோம் ..  நம் ஶரீரத்தை ஸ்திரமாக நிறுத்தச் செய்யும் தேஹப் பயிற்சி இன்று 'யோகம்' என்றும் 'யோகா' என்றும் அழைக்கப் படுகிறது ..  ஶரீரம் மாத்ரம் அல்லாது மனஸ் மற்றும் புத்தியையும் நிலைக்கச் செய்து , ஆத்ம தர்ஶனம் பெறுவதே யோகம் ஆகும் ..  ஆக , யோகம் வழியும் ஆகும் ..  லக்ஷ்யமும் ஆகும் ..  கீதை 'யோகஹ கர்மஸு கௌஶலம்' என்கிறது (செய்வதை சிறப்பாகச் செய்தல் ..)  'ஸமத்வம் யோக உச்யதே' (ஸமநிலையே யோகம்) என்கிறது ..  இறுதியில் , ஸ்ரீ பருமனுடன் இணைதலே யோகம் ..

ஹிந்துக்களின் ஆறு தர்ஶனங்களில் ஒன்று யோக ..  பதஞ்ஜலி யோக ஸூத்ரம் மற்றும் யோக வாஶிஷ்ட்யம் யோக ஶாஸ்த்ரத்தை விளக்கும் இரு ப்ரதான புஸ்தகங்கள் ஆகும் ..

32 .  ஶரண (II – 49) : –  ஸமர்பணம் .  ஶரண் அடைதல் பக்தியின் அழகானதொரு நிலை ..  விருப்பம் கிடையாது ..  திட்டம் கிடையாது ..  முயற்சி கிடையாது ..  குறை கிடையாது ..  வாழ்க்கை அவன் அளிக்கும் ப்ரஸாதம் ..  அவன் படைத்தான் ..  அவன் பார்த்துக் கொள்வான் ..  ஶரணாகதியில் இதுவே மனப்பான்மை ..

33 .  ஜன்மபந்தம் (II – 51) : –  ஜன்மம் ஏற்படுத்தும் பந்தம் ..  உலகத்துடன் உள்ள பிணைப்பு ..  மீண்டும் மீண்டும் பிறப்பு என்ற சுழற் சக்ரத்திற்குக் காரணம் ..

34 .  ஶ்ருதி (II – 53) : –  ஶ்ருதி என்பது கேட்கப்பட்டது ..  கேட்டல் ஶ்ரவணம் ஆகும் ..  ஶ்ரோதா கேட்பவர் ..  கேட்டல் க்ஞானம் பெறுவதற்கான உத்தம ஸாதனம் ஆகும் ..  வேதங்கள் ஶ்ருதி எனப்படுகின்றன ..  வேதங்கள் புஸ்தகங்கள் மூலம் கற்பிக்கப் படுவதில்லை ..  கேட்டுக் கற்கப் படுகின்றன ..  மேலும் வேதங்கள் எழுதப் படவில்லை ..  ஆகாத்தில் நிறைந்திருக்கும் ஶப்தங்களைக் கேட்டு , ர்ஷிகள் வேதங்களைக் கண்டறிந்தனர் ..

35 .  ஸமாதி (II – 54) : –  ஸம நிலையை எய்திய புத்தி ..  மனோ நாம் ஆகும் போது புத்தி ஸமநிலையை அடைகிறது ..  கீதையின் ரெண்டாம் அத்யாயத்தில் விளக்கப் பட்ட 'ஸ்தித ப்ரக்ஞ நிலை' ஒரு ஸமாதி நிலையே ..  பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தில் ஸமாதி எட்டாம் படி ..

36 .  காம (II – 55) : –  விருப்பம் , இச்சை .  மனஸின் ஷட்ரிபுக்களில் (ஆறு வைரிகளில்) ஒன்று ..  காமம் , க்ரோதம் , லோபம் , மோஹம் , மதம் மற்றும் மாத்ஸர்யம் ..  காமம் என்பது ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீது உள்ள காதல் மாத்ரம் இல்லை ..  எந்த விருப்பமும் காமம் தான் ..  பசிக்கு உணவு வேண்டும் இச்சை காமமா ??  களைப்பிற்கு ஒய்வு விரும்புவது காமமா ??  இவை இயற்கையான அவஶ்யங்கள் ..  இயற்கைக்கு முரண்பட்ட விருப்பங்கள் காமம் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் தன் விபூதியை விளக்கும் போது , 'தர்மாவிருத்தோ காமோ(அ)ஸ்மி' என்கிறார் (VII - 11) .  தர்மத்திற்கு முரண் இல்லாத காமம் நானே என்கிறார் ..  தர்மத்திற்கு முரணான விருப்பங்கள் காமம் ..  காமம் நம் ஶரீரத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது ..  மனஸின் ஸமநிலையை பாதிக்கும் ..  காமம் தான் மூலம் ..  மற்ற ஐந்து வைரிகளும் காமத்தின் மாறு-வேஷங்கள் ..  ‘ராமன் இருக்கும் இடத்தில் காமம் இல்லை ..  காமம் இருக்கும் இடத்தில் ராமன் இல்லை' என்றார் ஸ்ரீ துளஸிதாஸர் ..  தெய்வீகத்தை விலக்கும் ஆற்றல் கொண்டது காமம் ..  த்ருப்தியே காமத்திற்கு மருந்து ..

37 .  க்ரோத (II – 56) : –  மனஸில்  வைத்திருக்கும் கோபமே க்ரோதம் ..  பழி வாங்கும் எண்ணமும் ஹிம்ஸையம் கலந்த கோபம் க்ரோதம் ஆகும் ..  இது மனஸின் ஷட் - ரிபுக்களில் (ஆறு வைரிகளில்) ஒன்றாகும் ..  க்ரோதம் ஶரீரத்தின் மீது நடுக்கம் , உஷ்ணம் , இறுக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் ..  க்ஷமா அல்லது மன்னிக்கும் தன்மைதான் க்ரோதத்திற்கு மருந்து ..

38 .  ராக (II – 56) : –  ராக என்பது பற்று ..  விருப்பம் ..  இதற்கு எதிர்ப்பதம் த்வேஷம் அல்லது வெறுப்பு ..  ஒன்று இருந்தால் மற்றதும் இருக்கும் ..  "எனக்கு விருப்பங்கள் உண்டு ஆனால் வெறுப்பெதுவும் கிடையாது" என்று சொல்பவர் பொய் சொல்கிறார் ..  வைராக்யம் என்பது எல்லாவற்றையும் துறந்து ஸந்யாஸம் ஏற்பது அல்ல ..  ராகம் (த்வேஷமும்) அற்ற நிலையே வைராக்யம் ..  அனைத்து வஸ்துக்களையும் துறந்து விட்டு அவற்றின் மீது மனஸில் பற்றிருந்தால் அது வைராக்யம் இல்லை ..  கோபமோ வெறுப்போ இருந்தாலும் வைராக்யம் இல்லை ..

39 .  பரம (II – 59) : –  பரம என்பது இறுதி அல்லது உச்சம் அல்லது பூர்ண .  இது நிலையை விலக்கிடும் ஒரு பதம் ..  பரம ஶாந்தி , பரம ஸுகம் , பரந்தாம (அடையத் தக்க நிழல்) ..  பரமாத்மன் ..  ஆத்மன் பரமாத்மனின் ஒரு துளி ஆகும் ..

40 .  மத்பரஹ (II – 61) : –  'என்னை ஸார்ந்து' ..  (பரமனை ஸார்ந்து) ..  ஸ்வயமாக எவ்வித முயற்சியும் செய்யாது முழுமையாக அவனை ஸார்ந்திருத்தல் ..  மத்பரஹ அவன் உபயோகப் படுத்தும் வார்தை ..  தத்பரஹ நாம் சொல்லும் வார்தை (அதனை ஸார்ந்து) ..  பரஸ்பர , நாம் ஒருவரை ஒருவர் ஸார்ந்து இருத்தல் ..

41 .  மோஹம் (II – 63) : –  மனஸின் ஷட் ரிபுக்களில் (ஆறு வைரிகளில்) ஒன்று இது ..  மோஹம் என்பது அறியாமை அல்லது குழப்பம் அல்லது மயக்கம் ..  தீவ்ரப் பற்றினால் மோஹம் ஏற்படும் ..  இது நம் புத்தியின் பார்வையை மழுங்கச் செய்யும் ..  மனஸ் போதை ஏறிய நிலைக்கு ஓப்பான நிலையை எய்திடும் ..  விளைவாக , புத்தி ஸரி - தவறை நிர்ணயிக்கும் ஆற்றலை இழந்து விடும் ..

42 .  ப்ரஸாத (II – 64) : –  ஆனந்தம் ..  ஸந்தோஷம் ..  கீதையில் 14'வது அத்யாயத்தில் ஶ்லோகம் 16'ல் ப்ரஸாதம் மனஸின் தபஸ் என்று  குறிப்பிடுகிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  நிறைந்த மனஸ் , பூர்ண த்ருப்தி கொண்ட மனஸ் , குறை ஏதும் இல்லா மனஸ் ப்ரஸாதத்தை அநுபவித்திடும் ..  ஆனந்த நிலையை அடைந்திடும் ..  பக்தியின் லக்ஷணம் இது ..  ஆலயங்களிலும் விஶேஷ வைபவங்களிலும் ப்ரஸாதம் கொடுக்கும் வழக்கம் உள்ளது ..  அது ஒரு துளி நீராக இருக்கலாம் ..  ஒரு இலையாகவோ புஷ்பமாகவோ ஸாம்பலாகவோ இருக்கலாம் ..  வாய்க்கு ருசியான தின்பண்டமாகவும் இருக்கலாம் ..  என்ன கிடைத்தது , எவ்வளவு கிடைத்தது என்பது முக்யம் இல்லை ..  கிடைப்பதை நாம் எவ்வாறு ஸவீகரிக்கிறோம் என்பது தான் முக்யம் ..  இது நம் மனங்களுக்கு ஒரு பயிற்சி ..  வாழ்க்கையில் எது கிடைத்தாலும் அதை கடவுளின் ப்ரஸாதமாக ஏற்பதற்கானப் பயிற்சி ..

43 .  பாவனா (II – 66) : –  எண்ணங்களின் ஸாரம் பாவனை ..  மனஸின் ஆழத்தில் புதைந்திருக்கும் ..  நம் கடந்த கால எண்ணங்கள் , கர்மங்கள் மற்றும் வாக்கின் விளைவாக உருவானதே பாவனை ..  இவை அனைத்தின் ஸாரம் ..  பொதுவாக , நம் வாக்கும் நம் கண்களும் நம் பாவனையை வெளிப் படுத்திடும் ..  பயிற்சி மூலம் இதைத் தவிர்த்திடலாம் என்பதும் சத்யம்  ..  ஆனால் , திடீர் என்று எதிர்பாராமல் உருவாகும் சூழ்நிலைகளில் நம் பாவனை , நாம் அணிந்திருக்கும் முகமூடிகளைத் தகர்த்து , வெளிப்படும் ..  கடவுள் நம் செயல்களாலும் வார்தைகளாலும் மயங்குபவன் அல்ல ..  அவன் நமது பாவனையை அறிவான் ..  பாவனைக்கு ஏற்ற ஃபலனே அருள்வான் ..  பாவனையை ஶுத்தப் படுத்தலே நாம் செய்திடும் அனைத்து அத்யாத்ம ஸாதனைகளின் நோக்கமும் ஆகும் ..  பாவனை ஶுத்தம் ஆகாமல் செய்யப் படும் அனைத்து கர்மங்களும் உயிரற்ற ஶடலங்களே ..  ஹோம குண்டத்தில் நெய்யைக் கொட்டுவது யக்ஞம் இல்லை ..  'இதம் ந மம' அதாவது 'இது என்னுடையது இல்லை' ..  நான் அல்ல நீயே என்ற பாவனைதான் யக்ஞம் ..  தாஸ்ய பாவனை அல்லது ஸமர்பண பாவம் என்பது கைகளைக் கூப்புவதும் காலில் விழுவதும் தாஸ என்ற பதத்தைத் தம் பெயருடன் சேர்த்துக் கொள்வதும் இல்லை ..  "உன் விருப்பமே" என்ற பாவம்தான் ஸமர்பணம் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் , "வேதம் மூலமோ யக்ஞம் மூலமோ தானம் மூலமோ தபஸ் மூலமோ என்னை அடைந்திட முடியாது ..  தூய்மையான பாவனை மூலமே என்னை அடைய முடியும் .." என்கிறான் .

44 .  ஶாந்திஹி (II – 71) : –  ஶாந்தி என்பது ஶப்தம் இல்லாத நிலை இல்லை ..  மன அமைதியே ஶாந்தி ..  காமம் , க்ரோதம் , மோஹம் போன்ற ஸுனாமிகளால் அலைக்கழிக்கப் படும் மனஸ் அமைதி இழக்கிறது ..  அமைதியை நாடி ஜனநெரிஸல் இல்லா இடங்களைத் தேடும் மனப்பான்மை உள்ளது ..  இவ்விடங்களில் அமைதி கிடைக்காது ..  மனஸின் இந்த வரிகளை அழித்தால்தான் அமைதி கிடைத்திடும் ..  த்வந்த்வங்களான வெற்றி - தோல்வி . கீர்தி - அபகீரதி , லாப - நஷ்டம் , ஸுக - து:கம் ஆகியவை நம் மனஸின் மீது தாக்கம் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடிந்தால் மனஸில் ஶாந்தி மலரும் ..

45 .  நி:ஸ்ப்ருஹ (II – 71) : –  பற்றின்மைக்கு ஸமமான பதம் ..  ஸ்ப்ருஹ என்றால் தொடுதல் ..  நி:ஸ்ப்ருஹ என்பது தொடாமல் இருத்தல் ..  மனஸால் தொடாமல் இருத்தல் ..  வனம் புகுந்து விடல் அல்ல ..  தனிமையில் இருந்து விடல் அல்ல ..  விஷயங்களுக்கு மத்தியில் இருந்தும்மனஸில் கவலை அல்லது அக்கறை இல்லாமல் இருத்தலே நி:ஸ்ப்ருஹ ..  'தண்ணீரில் தாமரை இலை' என்ற உதாஹரணம் இதை விளக்கிடும் சிறந்த உதாஹரணம் ..

46 .  மம / நிர்மம (II – 71) : –  ‘என்னுடையது’ என்ற உணர்வு மம ..  அதன் அபாவம் , அதாவது 'என்னுடைய' என்ற உணர்வு இல்லாமை நிர்மம ..  மம என்ற உணர்வு ஸம்ஸாரத்துடன் பிணைத்திடும் பந்தம் ..  ஶரீரம் , இந்த்ரியங்கள் , மனஸ் , புத்தி இவை அனைத்தும் ஸம்ஸாரத்தினுடையது ..  இங்கு நம்மிடம் வரும் உறவுகள் , செய்வாம் , சொத்து , பதவி , பட்டம் , புகழ் , செல்வாக்கு , போன்ற அனைத்தும் ஸம்ஸாரத்துடையது ..  இவற்றை என்னுடைய என்று கருதுவது அறியாமை ..  'தாமரை இலை' நீரிலேயே இருந்தாலும் நீரைத் தன் மீது ஒட்ட அநுமதிப்பதில்லை ..  நாம் ஸம்ஸாரத்தில் தாமரை இலையைப் போல , இவை அனைத்திற்கும் மத்தியில் இருந்தும் அவற்றுடன் ஒட்டாமல் இருப்பதே அத்யாத்மத்தின் எதிர்ப்பார்ப்பு ..  பொதுவாக மநுஷ்யன் இவை அனைத்தையும் 'எனதென்று' ஸ்வந்தம் கொண்டாடுகிறான் ..  இவற்றுக்காக சண்டை இடுகிறான் ..  வாழ்க்கையில் கசப்பை வளர்த்துக் கொள்கிறான் ..  இவை எதுவும் 'எனதாக' முடியாது ..  இவை நம்மிடம் வந்தன ..  நம்மிடம் இருந்து விலகி விடும் ..  இந்த ஸத்யத்தை மநுஷ்யன் உணராமல் தன்னுள் ஶோகத்தைச் சேர்த்துக் கொள்கிறான் ..  இதை உணர்ந்து , பற்றினை அறுத்து விடுதலே 'நிர்மம' ..  ஸ்ரீ பரமனின் தாள்களைப் பற்றி , "நான் அவனுடையவன் .. அவன் என்னுடையவன்" என்று கருதுதல் மம பாவனை இல்லை ..  அதே போல , மம பாவனையை விரித்து , என் க்ராமம் , என் ஸமுதாயம் , என் தேம் என்ற விசாரம் 'நிர்மம' பாவனையை நோக்கிய வளர்ச்சியே ..

47 .  அஹங்கார / நிரஹங்கார (II – 71) : –  ‘நான்’ என்ற உணர்வு அஹங்காரம் ..  அதன் அபாவம் 'நிரஹங்காரம்' ..  கண் , காது , நாக்கு , மூக்கைப் போல அஹங்காரமும் ஶரீரத்தின் அங்கம் ..  இவை ஸ்தூல ஶரீரத்தின் அங்கங்கள் எனில் அஹங்காரம் ஸூக்ஷ்ம ஶரீரத்தின் அங்கம் ..  இந்த அங்கங்கள் அந்தஹ்கரணம் எனப் படுகின்றன ..  அந்தஹ்கரணங்கள் நான்கு ..  மனஸ் , புத்தி , சித்தம் , அஹங்காரம் ..  கரணங்கள் செய்யும் கர்மங்களை 'நான் செய்கிறேன்' என்று கருதுவது மநுஷ்யனின் ஸஹஜ ஸ்வபாவம் ..  கண்கள் பார்த்திடும் ..  ‘நான் பார்க்கிறேன்’ என்று கருதுகிறோம் ..  கைகள் பற்றிடும் ..  'நான் பற்றுகிறேன்’ என்று கருதுகிறோம் ..  மனஸ் அநுபவிக்கிறது ..  'நான் அநுபவிக்கிறேன்' என்று கருதுகிறேன் ..  புத்தி சிந்தனை செய்கிறது ..  ‘நான் தான் சிந்தனை செய்கிறேன்’ என்று கருதுகிறோம் ..  'நான்' உணர்வு நம்முள் நிரம்பி இருக்கிறது ..  ஸ்ரீ பரமாத்மனை நோக்கிய ப்ரயாணத்தில் கடைஸி தடங்கல்  அஹங்காரம் ..  மற்ற உபகரணங்களை ஸமர்பணம் செய்வது போல , அஹங்காரமும் அவன் தாளில் ஸமர்பணம் ஆக வேண்டும் ..  நிரஹங்கார நிலையில் தான் அவனை அடைய முடியும் ..  அஹங்காரத்தை அழித்திடும் ஒரு பயிற்சி தான் நமஸ்காரம் ..  ஆலயங்களில் பலிபீடம் உண்டு ..  ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அதன் மீது தம் தலையை வைப்பர் ..  அஹங்காரத்தை ஸமர்பணம் செய்திடும் ஸாங்கேதமான முயற்சி இது ..

அஹங்காரம் என்ற பதம் பேச்சு வழக்கில் ஆணவம் / மதம் என்ற அர்தத்தில் உபயோகம் ஆகிறது ..  அஹங்காரம் என்பது காய் , கால் , நாக்கு , மூக்கு போல ஒரு உபகரணம் மாத்ரமே ..  நம் அனைவரிடமும் அது உண்டு ..  ஒரு குழந்தையிடமும் உண்டு ..  கை ஒரு கருவி ..  அது நல்ல கர்மங்களைச் செய்யும் கருவியாக இருக்கலாம் ..  'நான்' என்ற உணர்வைத் தெளிவிக்கும் கருவிதான் அஹங்காரம் ..  அஹங்காரம் பொய்யான ஒன்றுடன் இணைந்து , அதைப் பற்றிக் கொள்ளும் போது ஆணவம் அல்லது மதம் பிறக்கிறது ..  ‘நான் அழகன்’ ;  ‘நான் ஒரு செல்வந்தன்’ ;  ‘நான் உயர்ந்தவன்’ ;   ‘நான் புத்திஶாலி’ ;  ‘நான் பலஶாலி’ ;  ‘நான் கருணை உள்ளவன்’ ;  ‘நான் பணிவானவன்' ;  ‘நான் ஸத்யவாதி’ ; போன்றவை பொய்யான இணைப்புகள் .  ஸத்யமான 'நான்' இவற்றில் ஒன்றும் இல்லை ..  மதம் அல்லது ஆணவம் ஸம்ஸாரத்தில் பழகிடும் போது மற்றவரைப் புண்படுத்தும் கூர்மையான முள் ..  வீங்கிய கையைப் போல வீங்கிய அஹங்காரமே மதம் அல்லது ஆணவம் ..  மனஸின் ஆறு வைரிகளில் ஒன்று மதம் ..  அது தவிர்க்கப் பட வேண்டியது ..  ஆனால் , அஹங்காரம் நம் சூக்ஷ்ம ஶரீரத்தின் ஒரு பகுதி ..  அது ஸமர்பணம் ஆக வேண்டியது ..

48 .  ப்ரஹ்ம (II – 72) : –  ப்ரஹ்மம் என்பது பெயர்கள் , ரூபங்கள் மற்றும் வர்ணனைக்கு அப்பாற்பட்டது ..  ப்ரஹ்மம் படைப்பிற்கு முன்னரும் இருந்தது ..  படைப்பில் ஸர்வ வ்யாபியாக இருக்கிறது ..  லயத்திற்கு பின்னரும் இருந்திடும் ..  ஆதி ஶங்கரர் 'இது இல்லை' 'இது இல்லை' என்று நகாராத்மத்தில் ப்ரஹ்மனை வர்ணிக்கிறார் ..  இதுதான் ப்ரஹ்மம் என்று சுட்டிக் காட்ட முடியவில்லை ..  ப்ரஹ்மமும் படைப்புக் கடவுளான நான்கு முக ப்ரஹ்மனும் வெவ்வேறு ..  நான்கு முக ப்ரஹ்மனுக்கு ஸ்வரூபம் உண்டு ..  மிக நீண்ட காலமாக இருந்தாலும் ஒரு ஆயுட்காலம் உண்டு ..  அவர் ப்ரஹ்ம , விஷ்ணு , மஹேஶ் என்ற மும்மூர்த்திகளில் ஒருவர் ..  ப்ரஹ்மம் என்ற இது ஆணும் இல்லை ..  பெண்ணும் இல்லை ..  நபும்ஸகனும் இல்லை ..  பால்களுக்கு அப்பாற்பட்டது ..  அனைத்து செயல்களுக்குக் காரணம் என்றாலும் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பது ..  கீதையில் ப்ரஹ்மம் நான்காவது அத்யாயத்தில் , 24'வது ஶ்லோகத்தில் விவரிக்கப் பட்டுள்ளது ..  "ப்ரஹ்மார்பணம் ..  ப்ரஹ்மஹவிஹி .."  பூர்ணமும் ப்ரஹ்மம் ..  ஶூந்யமும் ப்ரஹ்மம் ..

ஓம் பூர்ணமிதம் பூர்ணமதஹ பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஶிஷ்யதே ..

‘இது ப்ரஹ்மம் ..  அது ப்ரஹ்மம் ..  ப்ரஹ்மத்தில் இருந்து ப்ரஹ்மம் உதிக்கிறது ..  அனைத்தும் விலகிய பின்னர் எஞ்ஜுவதும் ப்ரஹ்மம் ..’

49 .  ஓம் (அத்யாயங்களின் இறுதியில் உள்ள முத்ரா வாக்யத்தில் உள்ள பதம் ..) : –  ப்ரணவ மந்த்ரம் ..  ஏகாக்ஷர மந்த்ரம் ..  ப்ரஹ்ம மந்த்ரம் .. என்றெல்லாம் அறியப் படும் ஓம் எனும் ஶப்தம் ஸ்ரீ பரமனின் ஶப்த ஸ்வரூபம் ..  நிராகார ப்ரஹ்மத்தை வழிபடுகிறவர்களுக்கு ஓம் சிறந்த ஸ்வரூபம் ..  ஓம் என்ற ப்ரணவ மந்த்ரம் ஹிந்து ர்ஷிகளின் அத்புதக் கண்டுபிடிப்பு ..  ஹிந்துக்கள் வழிபாட்டிற்கு ஒரு இடம் , ஒரு கட்டிடம் , ஒரு திஶை அல்லது ஒரு இறை தூதுவன் அவயமில்லை ..  ஓம் உச்சரிப்பின் மூலம் ப்ரஹ்மத்தை வழிபட முடியும் ..  ஜெருஸலம் என்ற இடமும் பைபிள் என்ற புஸ்தகமும் இல்லை என்றால் க்றிஸ்தவம் இருக்காது ..  காபா என்ற அந்தக்கல் நொறுக்கப்பட்டால் இஸ்லாம் அழிந்து விடும் ..  ஆனால் , மத வெறியர்களால் ஹிந்துக்களின் அனைத்து ஆலயங்கள் அழிக்கப் பட்டாலும் , அனைத்து தர்ம க்ரந்தங்களும் எரித்து நாஶமாக்கப் பட்டாலும் ஹிந்து தர்மம் அழிந்திடாது ..  ஹிந்துக்களுக்கு ஓம் ஒன்றே போதும் ..  ஓம் என்ற இந்த சிறிய விதையில் இருந்து ஹிந்து தர்மம் விஶாலமான வ்ருக்ஷமாக வளர்ந்து விடும் ..  ஓம் என்ற மந்த்ரத்தின் உச்சாரம் யக்ஞம் , தானம் , தபஸ் போன்ற ஸத்கர்மங்கள் செய்ததற்கு ஸமம் ஆகும் .. (XVII – 24) .  "ஓம் என்று உச்சரித்தபடி உலகத்தை விட்டு விலகுபவன் என்னை வந்தடைகிறான்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் (VIII - 13) .  த்யானம் செய்யவும் ஓம் சிறந்ததொரு மந்த்ரம் ஆகும் ..

ஸ்ரீ கணேஶன் ப்ரணவ ஸ்வரூபன் என்று அறியப் படுகிறான் ..  ஸகுண ஸாகார உபாஸனையில் இருக்கும் பக்தனை நிர்குண நிராகார பருமனுடன் இணைத்திடும் பாலம் ஓம் ..

ஓம் என்ற மந்த்ர உச்சாரம் நம் ஶரீரத்தில் அத்புதமான தாக்கம் ஏற்படுத்துகிறது ..  நரம்பு மண்டலம் மற்றும் மற்ற அமைப்புகளை தளர்த்தி விடும் ..  உயர் ரக்த அழுத்தத்தை ஸமன் படுத்தும் ..  மூலையில் (a) அல்ஃபா கதிர்களை உருவாக்கும் ..  நினைவாற்றலை வளப்படுத்தும் ..  மனஸை அமைதிப் படுத்தும் ..  தலைவலி , ஸைனஸ் , ஒற்றைத் தலைவலி , மூச்சு ஸம்பந்தமான ப்ரஶ்னைகள் ஆகிய குறைகளைத் தீர்க்கும் ..  பரபரப்பாக இருக்கும் குழந்தையை அமைதிப் படுத்தும் ..  தாயின் கர்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு வழி வகுத்திடும் ..

ஓம் என்ற ப்ரணவ மந்த்ரத்தை மையமாக வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன ..  நோயாளிகளின் மீதும் கர்பவதி பெண்கள் மீதும் ஸாமான்ய குழந்தைகள் மீதும் அஸாதாரண குழந்தைகள் மீதும் பயிர்கள் மீதும் கறவைப் பஶுக்கள் ஓம் என்ற மந்த்ரத்தின் அதிர்வுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது ஆராயப் பட்டு வருகிறது ..  அநேக கம்பெனிகளில் ஒரு விஶேஷ அறையில் ஓம் என்ற ஶப்தம் ஒலித்துக் கொண்டிருக்கும் ..  கம்பெனியின் உயர் அதிகாரிகள் அந்த அறையில் சில நிமிஷங்களைக் கழிப்பதால் அவர்களது செயலாற்றல் அதிகம் ஆகிறது ..  மன இறுக்கமும் மன அழுத்தமும் குறைகிறது ..  இத்தகைய ஏற்பாட்டை நான் தென்னாஃப்ரிக கம்பெனிகளில் கண்டேன் ..

50 .  தத் (அத்யாயங்களின் இறுதியில் உள்ள முத்ரா வாக்யத்தில் உள்ள பதம் ..) : –  தத் என்பது அது .  ஸ்ரீ பரமாத்மனைக் குறிக்கும் பதம் இது ..  ஸ்ரீ பரமாத்மன் நமக்கு வெகு ஸமீபத்தில் , நமக்குள்ளே இருக்கிறான் ..  ஸம்ஸார ஸுகத்தில் மூழ்கி இருக்கும் நாம் அவனிடம் இருந்து வெகு தூரத்தில் இருப்பதாக உணர்கிறோம் ..  அதனால் நம் பாஷையில் தூரத்தில் இருப்பதைக் குறிக்கும் ஸ்ரீ பரமனுக்கு 'தத்' என்ற பதமும் ஸம்ஸாரத்திற்கு ஸமீபத்தில் இருப்பதைக் குறிக்கும் 'ஏதத்' என்ற பதமும் உபயோகப் படுத்துகிறோம் ..  பொதுவாக ஆண்பாலாக குறிப்பிடப் படும் ஸ்ரீ பரமாத்மன் தத் என்ற இந்தப் பதம் மூலம் அஃறிணையாக குறிக்கப் படுகிறது ..  'தத் த்வம் அஸி' ..  தத் ஸத் என்பவை மஹா வாக்யங்கள் ..

51 .  இதி (அத்யாயங்களின் இறுதியில் உள்ள முத்ரா வாக்யத்தில் உள்ள பதம் ..) : –  தமிழிலோ மற்ற மொழிகளிலோ இதி என்ற பதத்திற்கு ஸமமான பதம் கிடையாது ..  மந்த்ரங்களும் ஶ்லோகங்களும் இதி என்ற பதத்துடன் நிறைவுறும் ..  அத ஆரம்பம் என்றால் இதி முடிவு ..

52 .  உபநிஷத் (அத்யாயங்களின் இறுதியில் உள்ள முத்ரா வாக்யத்தில் உள்ள பதம் ..) : –  ஒவ்வொரு வேதத்திலும் மூன்று பகுதிகள் உள்ளன ..  ஸம்ஹித , ப்ராஹ்மணம் மற்றும் ஆரண்யக ..  ஆரண்யகங்களின் இறுதியில் ஒவ்வொரு தத்வ விசாரம் உண்டு ..  அவையே உபநிஷதங்கள் ..  உபநிஷதங்கள் ஸ்ரீ பரமாத்மனை விளக்குவதால் , பரமனுக்கு அருகில் என்ற அர்தத்தில் உபநிஷதம் எனப்படுகின்றன ..  வேதத்தின் (ஆரண்யகத்தின்) இறுதியில் உள்ளதால் இவை வேதாந்தம் எனப் படுகின்றன ..  ஸ்ரீ வேத வ்யாஸர் கீதையை உபநிஷதம் என்கிறார் ..

நூற்றுக்கணக்கான உபநிஷதங்கள் உண்டு ..  அவற்றில் முக்யமானவை பதினொன்று ..  ஈஶாவாஸ்ய , கேன , கட , சாந்தோக்ய , ப்ருஹதாரண்யக , தைத்ரீய , கைவல்ய , மாண்டூக்ய , முண்டக , ஶ்வேதாஶ்வதர , ப்ரஶ்ன ..மற்ற உபநிஷதங்கள் ஆரண்யகங்களின் இறுதியில் ஒரு பகுதியாக உள்ளன ..  ப்ருஹதாரண்யக உபநிஷத் ஒரு முழு ஆரண்யகம் ..

வைத்யோபநிஷத் என்று ஒரு உபநிஷதம் பற்றி ஸமீபத்தில் அறிந்தேன் ..  நாகபூரில் உள்ள ஒரு டாக்டர் வைத்திருந்தார் ..  வேதத்தில் எங்கு இருக்கிறது என்பதை நான் அறியேன் ..  சிறிய உபநிஷத் ..  மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ப்ரதிக்ஞையாக அது எழுதப் பட்டிருக்கிறது ..  வ்யாதிஸ்தர்களின் பால் மருத்துவரின் கண்ணோட்டம் பற்றி சர்சை செய்கிறது ..  மருத்துவர்களுக்கு அளிக்கப் படும் ப்ரதி ஒரு அரிய ஆன்மீக தத்வத்தின் வெளிப்பாடு ..

53 .  யோக ஶாஸ்த்ர (அத்யாயங்களின் இறுதியில் உள்ள முத்ரா வாக்யத்தில் உள்ள பதம் ..) : –  ஶாஸ்த்ரம் என்பது விதிகளுடன் கூடிய விக்ஞானத் துறை ..  யோக ஶாஸ்த்ரம் என்பது யோக விக்ஞானம் ..  மனஸைப் பற்றியும் , மனஸை அமைதிப் படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும் , ஸமத்வம் எய்திடும் வழிகளைப் பற்றியும் , ஸ்ரீ பருமனுடன் இணைவதற்கான வழிகளைப் பற்றியும் ஆராயும் / விளக்கும் விக்ஞானம் ..  ஸ்ரீ வேத வ்யாஸன் கீதையை யோக ஶாஸ்த்ரம் என்கிறார் ..  பதஞ்ஜலி யோக ஸூத்ரம் , யோக வாஶிஷ்ட்யம் யோகத்தை விளக்கும் இவ்விரு ப்ரதான புஸ்தகங்களையும் யோக ஶாஸ்த்ரம் எனலாம் ..  ஆதி ஶங்கரன் இயற்றிய விவேக சூடாமணி யோக ஶாஸ்த்ரமே ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   பெங்காலியில் জ  ,   স , হা  , ক্ষ ... என்றும் ஹிந்தியில் ज , स , ह , 

Chapter X (19 - 42)

\ श्री भगवानुवाच - हन्त ते कथष्यामि दिव्या ह्यात्मविभूतय : । प्राधान्यत : कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥ Shri Bhagawan said:   I shall speak to Thee now, Oh best of the Kurus! of My Divine attributes, according to their prominence;   there is no end to the particulars of My manifestation. (X - 19) Arjuna asks for a detailed and complete elaboration on His manifestations.   Shri Krishna replies He will be brief in description.   Why?   ‘My manifestations are infinite’, says Shri Krishna.   Shri Krishna is in human form.   The Infinite Paramaatman has bound Himself in a finite Form.   A finite can not fully describe an Infinite.   The same Shri Krishna in the next chapter says, “See My Infinite Forms.   See as much as you wish”, when Arjuna expresses his desire to see His one Form.   Brief in words and Elaborate in Form.;. The discussion in the last shlokam continues here.   The listener’s ahankara tries to fathom the speaker.   The listener, Arj

Chapter IV (1 - 20)

\   ADHYAAY IV   GYANA KARMA SANYASA YOGAM Introduction This chapter named ‘Gnyana Karma Sanyasa Yog’ is a special one, as this is where Shri Krishna reveals the secrets of Avatara to Arjuna. We, as human have a natural weakness.  When a great thought is placed before us, instead of analysing the thought, understanding it and trying to put it into practise, almost all of us start worshipping the person who revealed the thought.  Worship of the Cross and the idols of Buddha can be quoted as examples.  One of the reasons for this may be that we deem him to be the originator of the thought.  Truths are eternal and can only be revealed and not invented.  You ask any educated person about ahimsa or non-violence.  You should not be surprised if he instantly come up with the answer, “Gandhi”.  You try to clarify that ‘almost two thousand years ago Shri Mahaveer based his life and religion solely on the principle of Ahimsa’ and ‘hundreds of years prior to that the Vedas, the Gi