ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 003
நானுஶோசிதும் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25) / நைவம் ஶோசிதும் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25) / ந த்வம் ஶோசிதும் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25) / கா பரிதேவனா ? (அத்யாயம் 2 - ஶ்லோகம் 25)
नानुशोचितुम (अध्याय २ - श्लोक २५) / नैवं शोचितुम (अध्याय २ - श्लोक २६) / न त्वं शोचितुम (अध्याय २ - श्लोक २७) / का परिदेवना ? (अध्याय २ - २८) |
Naanshochitum (Ch 2 - Sh 25) / Naivam Shochitum (Ch 2 - Sh 26) / Na Twam shochithum (Ch 2 - Sh 27) / Kaa pardevanaa ? (Ch 2 - Sh 28).
அர்தம் : துயரம் கொள்ளாதே. வருந்தாதே... சிறப்பான வார்தைகள். எதற்குக் கவலை? ஏன் வருத்தம்?
ஏழ்மை?? (ஒப்பிடுதல் நல்லதில்லை என்றாலும் சில தருணங்களில் ஒப்பிடுதல் துயரத்தை விரட்டிட, கவலையை அழித்திட உதவிடும்.) சுற்றிலும் பார். உன்னைப் போல், உன்னை விட ஏழைகள் பலர் உள்ளனர். உன்னிடம் கல்வி இருக்கிறது. ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கைக்குத் தேவையானதை ஸம்பாதிக்க முடியும் உன்னால். உன்னிடம் உள்ள ஆற்றலை, திறனை வைத்து ஸம்பாதித்து விட முடியும். உன்னிடம் வயஸு இருக்கிறது. நல்ல உடல் இருக்கிறது. உழைத்து ஸம்பாதித்து விட முடியும். உலகத்தில் தனியானவனா நீ? அநாதையா நீ ? உன்னை ஆதரிக்க நல்ல குடும்பம் இருக்கிறது. நல்ல நண்பர்கள் உள்ளனர். கவலைப் பட காரணம் இல்லையே?
ஸ்வந்த வீடு இல்லை?? வாடகைக்கு வீடு எடுத்து, வஸித்திட பணம் இருக்கிறதே உன்னிடம்?? பல்லாயிரங்களைப் போல், நீ என்ன சாலையோர நடைபாதையிலா வஸிக்கிறாய்? ரயில் நிலைய பிளாட்பார்மிலா வஸிக்கிறாய்? பின் து:கம் கொள்ள ஏது காரணம் ??
மிகக் கடுமையான சூழ்நிலையா? வாழ்க்கை ஒரு சுழற்சிப் பாதை. எதுவும் நிரந்தரம் இல்லை. மாற முடியாதது என்று எதுவும் இல்லை. எந்த சூழ்நிலையும் முடிவுறாத, இருண்ட குஹை இல்லை. எல்லாம் மாறும். வந்தது போகும். போனது வரும். கஷ்டம் மாறி ஸுகம் மலரும். இருள் அழிந்து ஒளி பிறந்திடும். மன உறுதியை வளர்த்துக் கொள். பொறுமையை வளர்த்துக் கொள். சூழ்நிலை மாறும். நம்முடைய மனநிலை தான் நண்பர்களையும் சூழ்நிலைகளையும் நம்மை நோக்கி ஆகர்ஷிகின்றன. மனநிலையை உயர்த்திக் கொள். சூழ்நிலை தன்னால் மாறும். குறைந்தது, கடின சூழ்நிலையை புன்னகையுடன் எதிர்க்கொள்ளலாம். இடுக்கண் வந்தால் நகுக என்று பறைந்த முன்னோர்களின் வாரீஸல்லவா நீ? ஏன் துயரம்??
கீதை அதற்கும் ஒரு படி மேலே சென்று, "மரணம் கூட துயரத்திற்கான விஷயம் இல்லை" என்கிறது. மரணம் உடலுக்கு தான். நீ உடல் இல்லை. அந்த பரமனுடைய ஒரு துளி நீ. ஸத் - சித் - ஆனந்த வடிவ பரமாத்மனின் ஒரு துளி. ஆனந்தமே உன் உண்மை ஸ்வரூபம். ஏன் வருத்தம் தோய்ந்த முகமூடி அணிகிறாய்?
Comments
Post a Comment