ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 152
आवेश्य मनाः ... (अध्याय १२ - श्लोक २)
ஆவேஶ்ய மனாஹ ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 2)
Aaveshya Manaah ... (Chapter 12 - Shlokam 2)
அர்தம் : உறுதியாக நிறுத்தப் பட்ட மனஸ் ...
ஆவேஶம் என்பது வழக்குத் தமிழில் உணர்ச்சி வேகம் என்று அர்தம் கொள்ளப் படுகிறது .. இங்கு உறுதியான மனஸ் , நிலை நிறுத்தப்பட்ட மனஸ் என்பது அர்தம் ..ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு , "என்னில் உறுதியாக நிறுத்தப் பட்ட மனஸ்" என்கிறான் . ஸகுண , ஸாகார உபாஸனையில் முதல் நிபந்தனையாக இதைக் குறிப்பிடுகிறான் ..
ஒன்றே ஒன்று என்பதில் உறுதி .. நீதான் , நீ மாத்ரமே என்பதில் உறுதி .. உன்னுடைய உபாஸனையில் உறுதி ..
பொதுவாக , ஒரு அஸாதாரண சூழ்நிலை அல்லது ஒரு ஆபத்காலம் நம் மனஸின் உறுதிக்குப் பரீக்ஷை வைத்திடும் .. ஸாதாரண காலத்தில் உறுதியாக இருப்பதாகத் தோன்றிடும் .. ஆனால் , லேஸான ஒரு புயல் தோன்றினாலும் உறுதி குலைந்து விடும் .. பல வர்ஷங்கள் நித்ய பூஜை செய்து வரும் நபர் மகனின் மரணத்திற்குப் பின்னர் பூஜையை நிறுத்தி விட்டு விக்ரஹங்களைத் தூக்கி எறிந்து விடுவதைப் பார்க்கிறோம் .. சிறிய ப்ரலோபனங்களில் (ஆஶையைத் தூண்டுதல்) உறுதியாக நின்றிடும் 'நேர்மையாளனின் மனஸ் வாழ்க்கையில் அவனால் கல்பனை செய்ய முடியாத பெரும் பணத்தின் முன் குலைந்து விடுகிறது .. வாழ்க்கையின் கஷ்டங்களைப் புன்னகையுடன் எதிர்க் கொள்ளும் 'ஶாந்தமான' மனஸ் கஷ்ட காலம் நீளும் போதோ கஷ்டத்தின் கடுமை அதிகமாகும் போதோ ஒடிந்து விடுவதைப் பார்க்கிறோம் ..
புகழ் வாய்ந்த பலர் உண்டு , பல வகையில் அவர்கள் உயர்ந்தவர்களும் கூட .. ஆனால் ஆஸாதாரண சூழ்நிலையில் உடைந்து , க்ஷண நேரத்தில் வீழ்ந்தவர்கள் அல்லது க்ஷண நேரத்திற்கு வீழ்ந்து பின்னர் ஸுதாரித்துக் கொண்டவர்கள் .. அவர்களைப் பற்றி சர்சை செய்வதில் ப்ரயோஜனம் இல்லை .. அனைத்து சூழ்நிலைகளிலும் மன உறுதி குன்றாமல் குறையாமல் இருந்த உதாஹரணங்களை நினைப்போம் .. என் மனஸில் முதலில் உதிக்கும் உதாஹரணம் ஸ்ரீ குரு கோபிந்த ஸிஹ்மன் .. என்ன உறுதி ! பாலகனாக இருந்த போது தந்தை ஸ்ரீ குரு தேஜ் பஹாதூரின் தலை , முஸ்லீமாக மத மாற மறுத்ததால் ஒளரங்கஜீபினால் அவர் ஶரீரத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட ஶிரம் இவன் முன் வைக்கப் பட்டது .. அதன் பிறகு ஹிந்து ஸமுதாயத்தின் மனப்பான்மையை மாற்றி அமைத்து , ஒருங்கிணைக்கும் பணியைக் கையில் ஏற்றார் .. இந்தக் கார்யத்தில் கிடைத்திடும் வெற்றி தோல்விகள் ஒரு புறம் , ஒளரங்கஜீபின் கொடூர ஆக்ஷிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த போராட்டங்களும் யுத்தங்களும் அவற்றில் கிடைத்த வெற்றி தோல்விகள் ஒரு புறம் , புத்ர மரண ஶோகம் .. ஒன்றல்ல நான்கு புதல்வர்கள் .. (மூத்த இருவர் (16 வயஸு , 13 வயஸு) யுத்தத்தில் கொல்லப் பட்டனர் , இளைய இருவர் (வயஸு 10 மற்றும் 7) முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் உயிருடன் சுண்ணாம்புச் சுவரில் புதைக்கப் பட்டனர் ..) ஸ்வந்தங்களின் த்ரோஹம் .. என்று பல கடினமான சூழ்நிலைகளிலும் தளராத மனஸ் , உறுதியாக நிலைத்து நின்ற மனஸ் ! வாஹ் குரு !!
இளமைத் துடிப்பில் ஸந்தேஹம் கொண்டு கேள்வி கேட்டு அலைந்த போதும் ஸரி , வாழ்வின் அந்திம தினங்களில் நோயுடன் ஹிமாசலத்தில் ஒடுங்கிய போதும் ஸரி , குடும்பம் கடனில் தத்தளித்த போதும் ஸரி , ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் ஸ்தாபனத்திற்காக மேற்கில் இருந்து பெரும் செல்வத்தை அள்ளி வந்த போதும் ஸரி , பரிவ்ராஜக வாழ்க்கையில் பெயர் தெரியா நபராக பாரத தேஶம் முழுவதும் சுற்றிய போதும் ஸரி , ஸர்வ ஸமய மஹாநாட்டில் உரை ஆற்றி விட்டு , உலகளவில் புகழ் ஸம்பாதித்து , பாரதத்தில் ரத்னக் கம்பள வரவேற்பு பெற்ற போதும் ஸரி , பரிவ்ராஜக வாழ்க்கையில் பாரதத்திலும் ஸர்வ ஸமய மஹாநாட்டிற்கு முன்னர் அமெரிகாவிலும் உணவில்லாமலும் , உறங்க இடம் இல்லாமலும் கழித்தபோதும் ஸரி , மிகப்பெரும் தனவந்தர்களின் வீடுகளில் விருந்தாளியாகத் தங்கிய போதும் பெருமை வாய்ந்த ஸபைகளில் கெளரவிக்கப் பட்ட போதும் ஸரி , மனஸின் உறுதி குலையாமல் இருந்த நபர் ஸ்வாமி விவேகானந்தர் ..

Comments
Post a Comment