ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 163
यस्मान्नोद्विजते लोकः लोकान्नोद्विजते च यः । (अध्याय १२ - श्लोक १५)
யஸ்மான்நோத்விஜதே லோகஹ் லோகான்நோத்விஜதே ச யஹ் ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 15)
Yasmaannodwijate Lokah .. Lokaannodwijate Cha Yah .. (Chapter 12 - Shlokam 15)
அர்தம் : எவன் மற்றவரை உத்வேகப் படுத்துவதில்லையோ ... எவன் மற்றவரால் உத்வேகப் படுவதில்லையோ ...
வீடு முதல் தேஶம் வரை .. உத்வேகப் படுத்தல் ஸுலபமான ஒரு கருவியாக உபயோகப் படுத்தப் படுகிறது .. ஒரு கார்யம் செய்ய வைப்பதற்கும் , ஒரு கார்யத்தைச் செய்யாமல் இருக்க வைப்பதற்கும் உத்வேகம் அளிப்பதே உகந்த கருவி என்று நம்மில் பலரும் கருதுகிறோம் .. தன் குழந்தையிடம் , "உன்னால் எல்லாம் முடியாதடா" ; "அவனைப் பார் ! உன்னை விட அதிக மார்க் எடுத்திருக்கிறான் பார் !" ; என்றெல்லாம் பேசுவது .. வாக்குவாதம் செய்யும் போது , "ஸவால் விடுகிறேன் .." ; "ஒரு ஆண்பிள்ளையாக இருந்தால் .." ; "ஒரு தாய்க்குப் பிறந்திருந்தால் .." என்றெல்லாம் தூண்டி விடுதல் .. "இது நம் குலத்திற்கே , ஜாதிக்கே வந்துள்ள அபமானம் .." ; "ஊரில் தலை காட்ட முடியாது .." ; "ஊர் என்ன சொல்லும் ?" என்றெல்லாம் ஊரையும் ஜாதியையும் இழுப்பது .. "தேஶம் ஆபத்தில் இருக்கிறது .. " ; "மதம் ஆபத்தில் இருக்கிறது .. காப்பாற்ற வாருங்கள் .." என்ற கோஷங்கள் தேஶபக்தியையும் மதப் பற்றையும் உருவாக்கிடும் என்ற நம்பிக்கையில் உபயோகப் படுத்தப் படுகின்றன .. இவ்வாறு பல வகையிலும் உத்வேகப் படுத்தல் , ஆவேஶத்தைத் தூண்டி விடுதல் நம்மைச் சுற்றி நடக்கக் காண்கிறோம் ..
தானும் இவ்வகைத் தூண்டுதலில் உந்தப் படக் கூடாது .. பிறரையும் இவ்வகையில் தூண்ட முயலக் கூடாது .. ஆவேஶத்தைத் தூண்டி விடுதல் ஸுலபமான வழி .. புத்தியை , சிந்தனையைத் தூண்டி விடுதல் கடினமான வழி .. உத்வேகம் அடைந்து செயலில் இறங்குபவன் குறுக்கு வழியில் இறங்குவான் .. ஹிம்ஸையில் இறங்குவான் .. ஸரியானதையே செய்வான் என்பது நிஶ்சயம் இல்லை .. தொடர்ந்து செய்திடுவான் என்பதும் நிஶ்சயம் இல்லை .. கக்ஷிக்கும் , ஜாதிக்கும் , நடிகனுக்கும் , ராஜாங்கத் தலைவனுக்கும் நிரந்தர அடிமையாக இருந்திடுவான் .. ஸ்வய சிந்தனை அற்று இருந்திடுவான் ..
'அறிவாலயத்தில் இருந்து கட்டளை' , 'அம்மாவின் ஆஶை' , 'தானைத் தலைவனின் ஆணை' என்று மதிமயங்கி தலைவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அடிமை ஸேவகம் புரிந்திடும் அரஸியல் கக்ஷித் தொண்டர்களும் , 'தல' , 'தளபதி' 'நாயகன்' 'ஸ்டார்' என்ற படி போஸ்டர் ஒட்டி , தோரணம் கட்டி , அவர்களது புதுப்பட ரிலீஸையும் பிறந்த தினத்தையும் கொண்டாடி , வாழ்க்கையை வீணடிக்கும் ரஸிகர் மன்றக் கூட்டமும் , தர்மத்தை அறிந்திட முயலாமல் , வாழ்க்கையை தர்மப் பாதையில் செலுத்த முயலாமல் நவீன கால "குரு"மார்களின் பின்னால் அலைந்து , அவர்களுக்கு கட்அவுட் வைத்து , அவர்களுடைய வெளிப்படையான அடையாளங்களை காபி அடித்து , அவர்களுடைய கை , பாதம் , முகம் ஆதியின் படங்களை வாங்கி , பூஜை அறையில் வைத்து , தம்மை ஆன்மீகவாதிகள் என்று முத்ரை குத்திக் கொள்ளும் பரிதாப பக்தர்களும் , இவ்விஷயத்தில் ஜவலித்திடும் உதாஹரணங்கள் ..
ப்ரதமராக இருந்த ஸ்ரீமதி இந்திரா தனது காவலர்களால் கொல்லப் பட்ட போது , அவர்களை ஸீக்கியர்கள் என்று அடையாளம் காட்டி , தன் கட்டுப்பாட்டில் இருந்த ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷன் மூலம் அதை ப்ரசாரம் செய்து , கக்ஷித் தொண்டர்கள் மற்றும் ரவுடிகள் ஸீக்கியர்களின் வீடுகளில் புகுந்து அவர்களைத் தாக்கிக் கொன்ற போது , "ஒரு மரம் விழுந்தால் , ஸுற்றி உள்ள அல்பச் செடிகள் அழிந்து தான் போகும்" என்று அந்த வன்முறையை ந்யாயப் படுத்தி நாடறியப் பேசிய புதிய ப்ரதமரும் ஸ்ரீமதி இந்திராவின் மகனுமான ஸ்ரீ ராஜீவ் இவ்வகைத் தலைவர்களில் பளிச்சென்று நினைவில் வந்திடும் உதாஹரணம் ..
சிந்தனையைத் தூண்டி விடுதல் அவஶ்யம் .. படித்து , கேட்டு , கேள்விகள் கேட்டு , சர்சை செய்து , சுற்றிலும் நடை பெறுவதை கவனித்து சிந்தனை செய்தல் பழக வேண்டும் .. ஸரியானவையும் தவறானவையும் எவை என்றும் , செய்யப்பட வேண்டியவையும் தவிர்க்கப்பட வேண்டியவையும் எவை என்றும் நிர்ணயம் செய்யக் கூடிய புத்தியைக் கூராக்க வேண்டும் .. இது கடினமான முயற்சி .. அதிக காலம் எடுக்கக் கூடிய முயற்சி .. அதிக உழைப்பைக் கோரிடும் முயற்சி .. ஆனால் இதுவே உகந்த முயற்சி ..
ஆவேஶப் படுத்தாதே ... ஆவேஶப் படாதே .. உத்வேகம் அளிக்காதே .. உத்வேகம் அடையாதே .. இது என் பக்தனின் , ப்ரிய பக்தனின் லக்ஷணம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment