ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 171
मतं मम .. (अध्याय १३ - श्लोक २)
மதம் மம .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 2)
Matam Mama .. (Chapter 13 - Shlokam 2)
அர்தம் : என்னுடைய கருத்தில் ..
மீண்டும் ஒரு முறை .. ஸ்ரீ க்ருஷ்ணனின் வாணியில் இவ்வார்தைகள் வெளிவருகின்றன .. "என்னுடைய அபிப்ராயம் இது .." அவனுக்குத் தகுதி இருக்கிறது .. அதிகாரம் இருக்கிறது .. இறுதியான ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் .. அவ்வாறு வெளியிட்டால் அவனை எதிர்ப்பவர்களோ , அவனுடன் வாக்குவாதம் புரிபவர்களோ பாண்டவர்களில் இல்லை .. இருந்தாலும் அவன் எப்பொழுதும் , 'இது என்னுடைய கருத்து' என்றே கூறுவான் .. கீதையை அவன் நிறைவு செய்யும் போது , "ஹே அர்ஜுனா ! நீ எனக்கு ப்ரியமானவன் என்பதால் உனக்கு விவரமாக விளக்கினேன் .. இனி யதேச்சஸி .. ததா குரு .. உன் இஷ்டம் போல நீ செய்திடு .." என்கிறான் .. இது அவனுடைய உயர்ந்த ஆளுமையை வெளிப்படுத்துகிறது .. இத்தகைய ஆளுமை வெகு ஸஹஜமாக 'தலைவன்' ஆக பரிணமிக்கும் ..
இன்றைய நவீன உலகில் 'ஜனநாயகம்' 'ஜனநாயகம்' என்று உரத்த குரலில் பேசப் படுகிறது .. ஆனால் , மேற்கில் தோன்றிய இந்த ஜனநாயகம் எல்லா விஷயங்களிலும் ராஜாவின் தலையீட்டை எதிர்த்து உருவானது .. இது எதிர்மறையானது .. உண்மையில் ஜனங்களின் மனப்பான்மையே ஜனநாயகம் .. "நான் சொல்வதே இறுதி ஸத்யம் .." ; "இதை எதிர்த்துக் கேள்வி கேட்க உரிமை கிடையாது .." ; "என் பாதை மாத்ரமே ஸரியானது .." ; "நான் வழிபடுபவம் தெய்வம் மாத்ரமே ஒரே தெய்வம் .." ; (யா இலாஹா இல்லல்லா .. அல்லது யேஶு ஒருவனே தெய்வம் .. போன்ற) .. ஒரு தேஶத்தில் இத்தகைய மனப்பான்மை ஓங்கினாள் , அங்கு ஜனநாயகம் மலர முடியாது .. அரஸாங்கத்தைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கலாம் .. ஜனங்கள் வாக்களிக்கலாம் .. எனினும் , அங்கு ஜனநாயகம் செழிக்க முடியாது ..
"இதுவும் ஸரியாக இருக்கலாம் .." ; "நீ சொல்வதும் ஸத்யமே .." ; "கேள்வி கேட்பதும் ஸந்தேஹம் தீர்த்துக் கொள்வதும் க்ஞானத் தேடலின் ஆதாரம் .." ; "நீ தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்ல உனக்கு உரிமை உண்டு .." ; "தெய்வம் ஒருவனே .. அவனை வெவ்வேறு ஜனங்கள் வெவ்வேறு ரூபத்தில் வழிபடுகிறார்கள் .." இத்தகைய மனப்பான்மையே ஜனநாயகம் .. ராஜாங்க முறை எப்படியும் இருக்கலாம் .. ராஜா ஆளும் முறை இருந்தாலும் இந்த மனப்பான்மை இருந்தால் அது ஜனநாயகமே ... ஸ்ரீ க்ருஷ்ணன் உண்மையான ஜனநாயக வாதி ..
Comments
Post a Comment