ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 172
ऋषिभिः बहुधा गीतं छन्दोभिः विविधैः पृथक । ब्रह्म सूत्र पदैश्चैव ।। (अध्याय १३ - श्लोक ४)
ர்ஷீபிஹ் பஹுதா கீதம் .. சந்தோபிஹ் விவிதைஹ் ப்ருதக் .. ப்ரஹ்ம ஸூத்ர பதைஶ்சைவ .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 4)
RshiBhi: Bahudhaa Geetam , Chandobhi: Vividhai: Pruthak ... BrahmaSootra Padaishchaiva .. (Chapter 13 - Shloka 4)
அர்தம் : ர்ஷீகள் மூலம் பலமுறை பாடப்பட்டுள்ளது .. வேத ர்சாக்களில் பல விதங்களில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது .. ப்ரஹ்ம ஸூத்ரமும் இதைப் பற்றி பேசி உள்ளது ..
இந்த சொற்றொடரும் ஸ்ரீ க்ருஷ்ணனின் மற்ற ஒரு உயர்ந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது .. ஒரு உன்னதக் கருத்தை ஒருவர் வெளியிட்டால் , கருத்தை விட்டு விட்டு , கூறியவரைப் புகழ்ப் பாடத் தொடங்கி விடுவோம் .. ஒரு நல்ல கவிதையைப் படித்தால் , கவிதையை விட்டு விட்டு அதை எழுதியவர் யார் என்ற தேடுதலில் நேரத்தை வீண் அடிப்போம் .. ரேடியோவில் மனஸிற்கு ஹிதமான ஸங்கீதம் அல்லது நம் சிந்தனையைத் தூண்டும் உரையைக் கேட்டால் , அதை ஆனந்தமாக அநுபவிக்காமல் , பாடுபவர் (அல்லது பேசுபவர்) யார் என்ற கேள்விக்கு பதில் கண்டு பிடிக்க விழைவோம் .. இது அநாவஶ்யம் என்றாலும் பொறாமை கொள்ளாமல் ஸஹ மநுஷ்யனைப் பாராட்டுகிறார் என்று விட்டு விடலாம் .. கவிஞன் , கலைஞன் , பாடகன் , எழுத்தாளன் போன்றோரே இதற்கு முயற்சி செய்தால் என்னவென்பது ??
இன்று காபிரைட் , பேடெண்ட் போன்ற சட்டங்கள் வேறு .. ஒரு புஸ்தகத்தை எழுதி விட்டு , "இது என்னுடைய கண்டுபிடிப்பு .." என்று உரிமை கொண்டாடுவது வெகு ஸஹஜமாகி விட்டது .. ஸ்ரீ வேதாத்ரி மஹர்ஷீ என்ற ஆன்மீகப் பேச்சாளர் பேசுவது அனைத்தும் உபநிஷதக் கருத்து .. ஆனால் , அதை வெளிப்படுத்தாமல் , தன் ஸ்வந்தக் கண்டுபிடிப்பு என்ற த்வனியில் பேசுவார் .. அவருடைய (கண்டுபிடிப்பிற்கு) நோபல் பரிஸு கிடைக்கப் போகிறது என்று கூறி வந்த ஶிஷ்யர்கள் சிலரை நான் அறிவேன் .. ஸ்ரீ (ஸ்ரீ ஸ்ரீ) ரவிஶங்கர் என்பவர் ஒரு மூச்சுப் பயிற்சியை ஸ்வந்த கண்டுபிடிப்பாக , தனது ஸொத்துரிமையாக 'பேடெண்ட்' செய்து இருக்கிறார் .. இதில் இருந்து ஸம்பாதிக்கும் பணத்தில் ஸ்ரீ பதஞ்ஜலிக்கு என்ன பங்கு கொடுப்பார் ?? ஸமீபத்தில் ஸ்ரீ இளையராஜாவிற்கு ஸ்ரீ எஸ் பி பிக்கும் இடையே ஒரு போர் நடந்தது .. "நான் மெட்டமைத்த பாடல்களை நீ பாடக்கூடாது .." என்று .. ஸ ரி க ம என்று ஸ்வரங்களைக் கண்டுபிடித்து , அவற்றை ராகங்களாக , நூற்றுக் கணக்கான ராகங்களாக ஸமைத்து , பல்வேறு தாளங்களை கணக்கு போட்டு , இவர் மெட்டமைத்திட அத்புதமான ஆதார மேடை அமைத்துக் கொடுத்த பெயர் தெரியாத முன்னோர்களுக்கு இவர் எவ்வகையில் திருப்பி அளிக்கப் போகிறார் ?? ஸ்ரீ ஶிவ கேரா என்ற பேச்சாளர் ஜாதகக் கதைகள் , பஞ்சதந்த்ர கதைகளைக் கூறி கோடி கோடியாக ஸம்பாதித்தார் .. "You Can Win" என்ற புஸ்தகம் எழுதி , இக்கதைகளையும் அதில் எழுதி காபிரைட் செய்து கொண்டார் .. "என் முன்னோர்கள் கொடுத்துச் சென்றதையே நான் கூறுகிறேன் .. புதியதாக ஒன்றும் கூறவில்லை .." என்று அறிவித்திடும் பணிவு இலையே !!
இதற்கு நேர்மாறானது நம் பாரம்பர்யம் .. அருமையான ஆலயங்களைக் கட்டினார்கள் .. தம் பெயரை கல்வெட்டாகப் பாதிக்கவில்லை .. ஆழமான ஶாஸ்த்ரங்கள் எழுதினார்கள் .. தம் பெயரைக் குறிப்பிடவில்லை .. வேத உபநிஷதங்களில் உன்னதமான ஶாஶ்வத ஸத்யங்களை எழுதினார்கள் , ... எங்கும் தம் பெயரைக் குறிப்பிடவில்லை .. கோடிக்கணக்கான ஹ்ருதயங்களை நெகிழ வைத்த ஸ்ரீ ராமாயணம் எழுதினார் ஸ்ரீ வால்மீகி .. ஆனால் , இக்கதை ப்ரஹ்மா காகப்ருஷுண்டியிடமும் , காகப்ருஷுண்டி நாரதரிடமும் நாரதர் தன்னிடமும் கூறியதாக எழுதிகிறாரே அன்றி , தன் ஸ்வந்த சிந்தனையின் கண்டுபிடிப்பு என்று பெருமை தேடிக் கொள்ள முயலவில்லை .. அதே உன்னத பாரம்பர்யத்தை இங்கும் கீதையில் மற்ற இடங்களிலும் வெளிப்படுத்துகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. இங்கு "ர்ஷீகள் மூலம் பலமுறை பாடப்பட்டுள்ளது .. வேத ர்சாக்களில் பல விதங்களில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது .. ப்ரஹ்ம ஸூத்ரமும் இதைப் பற்றி பேசி உள்ளது ." என்கிறார் .. அதாவது , "இது என்னுடைய கண்டுபிடிப்பு இல்லை .. ஏற்கெனவே நம் முன்னோர்களால் கூறப்பட்ட கருத்தே .. என்னைப் புகழ முயலாதே .. என்னைப் பார்க்காதே .. கருத்தைப் பார் .. கருத்தைச் சிந்தனை செய் .." என்று சொல்லாமல் சொல்கிறார் .. அர்ஜுனனின் முழு கவனத்தையும் தன்னை நோக்கித் திரும்ப இடம் கொடுக்காமல் , கருத்தை நோக்கித் திருப்புகிறார் ..
அத்புதம் .. அதி அத்புதம் .. ஸ்ரீ க்ருஷ்ண வாஸுதேவனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் ..

Comments
Post a Comment