ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 175
विविक्त देश सेवित्त्वम ।। (अध्याय १३ - श्लोक १०)
விவிக்த தேஶ ஸேவித்வம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 10)
Vivikta Desha Sevithvam .. (Chapter 13 - Shloka 10)
அர்தம் : ஏகாந்தத்தில் இருந்திடும் வழக்கம் ..
தனிமையை நாடுதல் .. தனிமை என்பது யாரும் இல்லாத இடம் என்பது உண்மை .. ஆரண்யம் , மலை உச்சி , குஹை , நதிக்கரை .. போன்ற இடங்கள் .. ஆனால் இதை விட முக்யம் மனஸில் தனிமையை உணர்வது .. யாரும் இல்லாத ஒரு இடத்தைக் கண்டு பிடித்து விடுதல் ஸுலபம் .. அவ்விடத்திற்குச் சென்று விடுவதும் ஸுலபம் .. இந்த அவஶ்யத்திற்குத் தீனி போட்டு பெரும் பணம் பண்ணும் முயற்சியில் நவீன ஸாமியார்கள் பலர் நதிக்கரைகளிலும் மலை உச்சிகளிலும் ஆரண்யங்களிலும் ஆஶ்ரமங்கள் கட்டி வைத்துள்ளனர் .. ஏகாந்தத்தை நாடுபவர்கள் ஆயிரங்களில் கட்டணம் கட்டி , அந்த ஆஶ்ரமங்களில் ஸில தினங்கள் தங்கி , ஸாமியாரின் உரைகளைக் கேட்டு , ஆன்மீக உயர்வு அடைந்து விட்டதாக ஒரு பொய்யான உணர்வுடன் திரும்புகின்றனர் ..
எவரும் இல்லாத தனிமையை விட மனஸின் உள்ளே தனிமை உணர்வை அநுபவிப்பதே உண்மையான ஏகாந்தம் .. பரபரப்பான சூழ்நிலை நிலவும் இடத்தில் , ஜன நெருக்கடி உள்ள இடத்தில் இருந்தாலும் , தன்னுள் பரபரப்பு இறங்க அநுமதிக்காததே ஏகாந்தம் .. ஸுற்றி உலகத்தின் நிகழ்வுகளை அறிந்திட ஆர்வம் , அடுத்தவர் உலகத்த்தில் நுழைந்து , அதில் உள்ள குறை நிறைகளை ஸ்வாரஸ்யமாக அநுபவிக்கும் ஆர்வம் , பிறர் உலகின் நிகழ்வுகள் தன்னை பாதிக்க அநுமதித்தல் , இவை எல்லாம் உள்ளே நிலவும் தனிமையை , உண்மையான ஏகாந்தத்தை பாதிக்கும் ..
உள்ளே ஏகாந்தம் இல்லாமல் புறத் தனிமையை நாடுதல் உள்ளே புயலை வைத்துக் கொண்டு வெளியே அமைதியைத் தேடுவது போலாகும் .. .நான் எட்டாம் வகுப்பில் இருந்த போது , தீபாவளி விடுமுறையில் ஜபல்பூர் சென்று கொண்டிருக்கும் போது வழியில் இத்தகைய தனிமையை உணர்ந்தேன் .. உள்ளே ஏகாந்தத்தை அநுபவித்தால் , புறச் சூழ்நிலைகள் நம்மை பாதித்திடாது ...
Comments
Post a Comment