ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 183
श्रुतिपरायणाः .. (अध्याय १३ - श्लोक २५)
ஶ்ருதி பராயணாஹ .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 25)
Shruthi Paraayanaah .. (Chapter 13 - Shlokam 25)
அர்தம் : கேட்டதற்கு ஏற்ப ஒழுகும் மநுஷ்யன் ..
ஶ்ருதி என்றால் கேட்கப் படுவது .. பராயணாஹா என்றால் அதற்கு ஏற்ப .. அதே சிந்தனையில் .. அதைப் பதிய வைத்தல் .. கேட்டதற்கு ஏற்ப நடத்தல் .. கேட்டதை மனஸில் பதிய வைத்தல் .. கேட்டதை வாழ்க்கையில் கடைப் பிடித்தல் இன்று அர்தம் கொள்ளலாம் ..
நாம் ஸம்ஸாரத்தில் இருக்கும் போது நம் காதுகள் திறந்தே இருக்கின்றன .. நம்மை ஸுற்றி எழும் ஶப்தங்கள் நம் காதுகளில் நுழைந்தவாறு இருக்கின்றன .. இவற்றைத் தவிர்க்க இயலாது .. காதுகளுக்குப் பூட்டு போட முடியாது .. ஸம்ஸாரத்தில் ருசி இல்லாமல் இருத்தல் , காதுகளுக்குப் பின்னால் நம் மனஸை நிறுத்தாமல் இருத்தல் என்பதுதான் ஸம்ஸார ஶப்தங்கள் காதுக்குள் நுழையாமல் தடுத்திட நமக்கிருக்கும் ஒரே வழி ..
ஶ்ருதி பராயணாஹா .. கேட்டதைச் சிந்திக்க வேண்டும் .. கேட்டதற்கு ஏற்ப ஒழுக வேண்டும் .. என்றால் கண்டவர்ப் பேச்சையும் கேட்டு , அதை சிந்தையில் போட்டு அரைப்பதல்ல அர்தம் .. கேட்டல் என்பது ஒரு கார்யம் .. அதற்குப் பின்னால் ஒரு நிர்ணயம் உண்டு .. என்ன கேட்க வேண்டும் .. யாரிடம் கேட்க வேண்டும் என்ற நிர்ணயம் அதை விட உகந்தது .. நம் மனஸில் உள்ள ஸந்தேஹங்கள் , நம் ஸ்வபாவம் , நம் வாழ்க்கை அநுபவங்கள் இவற்றுக்கு ஏற்ற ஒரு குருவைத் தேடி , அவருக்கு ஸேவை செய்து , அவர் காலடியில் அமர்ந்து , அவர் சொல்வதைக் கேட்டலே கேட்டல் ஆகும் .. கேட்டு , அதைச் சிந்தித்து , அதை வாழ்க்கையில் கடைப் பிடிக்க முயலுதல் ஶ்ருதி பராயணாஹா ..
சிந்தனைத் தெளிவு இருந்தால் , தேடல் உறுதியாக இருந்தால் , எந்த வார்தையும் , எவருடைய வார்தையும் , ஏன் !! பக்ஷிகளின் ப்ராணிகளின் புரியாத ஶப்தங்களும் பராயணத்திற்கு ஏற்றவை ஆக முடியும் .. இவை இல்லாத நிலையில் கண்டவர் பேச்சையும் கேட்டு , அதன் படி ஒழுக முயன்றால் மனஸில் குழப்பமே ஓங்கும் .. வாழ்க்கை திஶையற்றுப் போகும் ..
ஶ்ருதி என்றால் வேதம் .. (வேதம் கேட்கப் பட்டது .. எவராலும் எழுதப் பட்டதல்ல .. என்பதால் இந்தப் பெயர் உண்டு ..) ஶ்ருதி பராயணாஹா என்றால் வேதம் சொல்வது போல் வாழ்தல் .. வேதத்தை அநுஸரித்து வாழ்தல் என்றும் அர்தம் ஆகும் .. ஶ்ருதி பராயணம் என்பதையும் ஸ்ரீ பரமாத்மனை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மார்கமாக , ஸ்ரீ பரமனுடன் இணைய வைக்கும் ஒரு உபாயமாக , ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு கூறுகிறார் ..
Comments
Post a Comment