ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 223
दम्भ मान मदान्विताः .. (अध्याय १६ - श्लोक १०)
தம்ப மான மதான்விதாஹ .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 10)
Dambha Maana Madaanvitaah .. (Chapter 16 - Shlokam 10)
அர்தம் : அஸுரன் தம்பம் (டாம்பீகம்) , மான (அபிமானம்) மற்றும் மதம் (ஆணவம்) நிறைந்தவன் ..
தம்பம் இன்றைய உலகில் மிகப் பெரும் அளவில் காணப்படும் நோய் .. பேச்சு வழக்கில் ஆடம்பரம் , டாம்பீகம் என்கிறார்கள் .. இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் இருப்பதை மிகைப் படுத்திக் காட்டிக் கொள்வதும் தம்பம் .. ஏன் ? இதன் மூலம் அல்பப் பரிஸுகளும் , பொய்யான பாராட்டுதலும் , மர்யாதையும் பெறுவதற்காக .. தம்பம் எந்தெந்த வகையில் வெளிப்படுகிறது ?? கடனை வாங்கியாவது விவாஹம் போன்ற ஸ்வந்த வைபவங்களை ஆடம்பரமாக நடத்துதல் .. ஆடம்பரமான வஸ்திரங்கள் , ஷூக்கள் , கறுப்புக் கண்ணாடி , வாஸனை ஸ்ப்ரேக்கள் அணிதல் .. (இவை அனைத்தும் வெளியே காட்டுவதற்காக .. இவ்வாறு பகட்டு செய்யும் பெரும்பாலோர் ஶரீரத்துடன் ஒட்டி இருக்கும் உள்ளாடைகளை அழுக்காக அணிந்திருப்பர் ..) கடன் புரை ஓடிக் கொண்டிருக்கும் .. ஆனால் , பகட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர் .. உள்ளே அறியாமை மண்டிக் கிடக்கும் .. மேடையில் இருந்து அலங்காரச் சொற்கள் நிறைந்த உரை நிகழ்த்துவர் .. தன்னுடைய ஸ்வந்த ப்ரஶ்னைகளைத் தீர்த்துக் கொள்ள த்ராணி இல்லாத , தன்னம்பிக்கை இல்லாதவன் நடத்திடும் motivation வகுப்புகள் .. உள்ளே வெற்று மனஸ் , ஆனால் , வெளியே ஆன்மீகச் சின்னங்கள் ..
மானம் அல்லது அபிமானம் என்பது தற்பெருமை .. தன்னிடம் உள்ளவை உலகில் மற்ற எவரிடமும் இல்லாமல் , தன்னிடம் மாத்ரம் விஶேஷமாக உள்ளவை என்று கருதிக் கொள்ளுதல் அபிமானம் .. இன்று பொது இடங்களில் வயஸானவர்கள் ஸந்தித்தால் , தத்தம் பேரன் பேத்திகள் எத்தகை 'super - intelligent , super - skilled' என்ற அபிமானப் பேச்சுக்கள் தான் பொழுதுபோக்கு .. அபிமானம் மிகையானால் அது மதம் ஆகிறது .. பேச்சு வழக்கில் ஆணவம் எனப் படுகிறது .. தற்பெருமை ஏற்படுத்தும் மயக்கம் அல்லது போதையின் வேகத்தில் மற்றவரை அபமானப் படுத்துதல் , புண் படுத்துதல் மதத்தின் ப்ரதானக் கார்யம் .. மதம் கொண்ட அஸுரன் நலன் நாடும் நபர்களைப் பகைத்துக் கொள்வான் .. புண்படுத்தி தூரத் தள்ளுவான் .. தனியாள் ஆகி விடுவான் .. அவனை ஸுற்றி வெறும் ஜால்ராக்களும் , வெற்றுக்களும் , கூழ் கும்பிடு போடுபவர்களும் அப்பட்டமான ஸ்வயநலமிகளும் குழுமி விடுவர் .. அவர்களும் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடும் எலிகளைப் போல , மூழ்கப் போவதை எதிர்ப் பார்த்து இருப்பர் .. அஸுரனால் தனக்கு இணையானவருடனும் , தன்னை விட உயர்ந்தவர்களுடனும் சேர்ந்து பணி செய்ய முடியாது .. இதுவே அஸுரன் விழப்போவதற்குக் காத்திருக்கும் மிகப் பெரிய பள்ளம் ..

Comments
Post a Comment