ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 224
अशुचि व्रताः .. (अध्याय १६ - श्लोक १०)
அஶுசி வ்ரதாஹ ... (அத்யாயம் 16 - ஶ்லோகம் 10)
Ashuchi Vrataah .. (Chapter 16 - Shlokam 10)
அர்தம் : தூய்மை அற்ற வ்ரதங்கள் அல்லது ஸங்கல்பங்கள் ..
அஸுரக் கூட்டங்களின் ஸங்கல்பங்கள் தூய்மை அற்றவை .. (தூய்மை அற்ற ஸங்கல்பம் செய்பவரின் அடையாளம் அஸுரன் என்றும் புரிந்து கொள்ள முடியும் ..)
'அடைந்தால் த்ராவிட நாடு - இல்லையேல் சுடுகாடு' என்ற ஸங்கல்பத்துடன் ப்ரயாணத்தைத் துவக்கிய த்ராவிடக் கழகம் தமிழகத்தில் செய்துள்ள நாஶம் அனைவரும் அறிந்ததே .. (ஒரு வகையில் தம் ஸங்கல்பத்தின் ரெண்டாம் பகுதியைச் செயல் படுத்துகின்றனர் என்றே சொல்லலாம் .. த்ராவிட நாட்டை அடைய முடியவில்லை .. கிடைத்த தமிழகத்தை சுடுகாட்டாக மாற்றிக் கொண்டிருக்கின்றனரோ ..)
2001'ல் பாரதம் வந்த போப் அறிவித்த ஸங்கல்பம் நாம் அறிந்ததே .. "முதல் மில்லினியத்தில் ஐரோப்பாவை க்றிஸ்தவமாக மாற்றினோம் .. ரெண்டாம் மில்லினியத்தில் ஆஃப்ரிகாவை மாற்றினோம் .. மூன்றாவது மிலினியம் ஆஸியக் கண்டத்தில் அறுவடை செய்வோம்" என்றார் போப் .. மதம் மாற்றம் , மாற மறுப்பவர்களின் கொலை , இயற்கை வளத்தின் அழிவு , ஒழுக்கக் கேடு , போக வாதம் என்று க்றிஸ்தவம் மற்ற பகுதிகளில் செயல்படுத்தியதே அவர் செய்ய விரும்பும் அறுவடை ..
இஸ்லாமும் உலகம் முழுவதும் தம் மதத்தை நிலை நாட்டும் ஸங்கல்பம் எடுத்து , கையில் வாள் ஏந்திக் கிளம்பினர் .. சென்ற இடங்களில் எல்லாம் ரக்த வெள்ளம் ஓடியது .. கொள்ளையும் கற்பழிப்பும் பெருகியது ..
"Government of the Proletariat" என்பது கம்யூனிஸ ஸங்கல்பம் .. நூறு வர்ஷங்கள் முன் எடுக்கப் பட்டது .. மிகக் குறுகிய காலத்தில் உலகில் மிக அதிக நாஶம் ஏற்படுத்திய பெருமை கம்யூனிஸத்திற்கே உண்டு .. நம் பாரத தேஶத்தில் வங்கம் , கேரளம் என்ற ரெண்டு கம்யூனிஸ்ட் மாநிலங்களும் வன்முறை மிகுந்த மாநிலங்கள் ..
உயிர்களுக்கு நாஶம் , இயற்கை வளத்திற்கு நாஶம் , ஒழுக்கத்திற்கு நாஶம் , இவையே அஸுர ஸங்கல்பத்தின் விளைவு. அதையே ஸ்ரீ க்ருஷ்ணன் அஶுசி வ்ரதம் என்கிறார் ..
இங்கு ஒரு கேள்வி எழுகிறது .. நம் ர்ஷிகளும் "க்ருண்வந்தோ விஶ்வமார்யம்" என்ற ஸங்கல்பம் செய்தனரே .. உலகத்தை ஆர்ய மயமாக்குவோம் என்று ஸங்கல்பம் செய்தனரே .. அதுவும் அஸுர ஸங்கல்பமோ ?? நம் ர்ஷிகள் தனியாகச் சென்றனர் .. நம் தேஶ ராஜாக்களோ ஜனங்களோ அவர்களுக்குப் பண பலமோ , பக்க பலமோ அருளவில்லை .. ர்ஷிகளும் அந்தந்த ப்ரதேஶ ஜனங்களுக்கு வன்முறை போதிக்கவில்லை .. ஆயுதங்கள் அளித்து அந்த ஜனங்களை ஸ்வதேஶ ராஜாங்கத்திற்கு எதிராகத் தூண்டி விடவில்லை .. அவர்களைப் பண்படுத்தினர் .. உயர்ந்த வாழ்க்கை தத்வங்களை கல்பித்தனர் .. அவர்களை மேம்படுத்தினர் .. ஆர்ய என்றால் ஒழுக்கத்தில் ஶ்ரேஷ்டமானவன் என்று அர்தம் .. அந்த ஜனங்களை ஆர்யனாக மாற்றினர் ..
Comments
Post a Comment