ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 235
प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः .. (अध्याय १७ - श्लोक ४)
ப்ரேதான்பூதகணாம்ஶ்சான்யே யஜந்தே தாமஸா ஜனாஹ .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4)
Pretaan Bhootaganaamschaanye Yajante Taamasaa Janaah .. (Chapter 17 - Shlokam 4)
அர்தம் : தாமஸ ஜனங்கள் ப்ரேத பூதங்களை பூஜிப்பார்கள் ..
அறியாமை , இருள் , மயக்கம் ஆகிய தன்மைகள் தாமஸ குணம் பளிச்சென்று வெளிப்படுத்தும் தன்மைகள் .. தாமஸ குணம் ப்ரேதங்களைப் பூஜை செய்யத் தூண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. நிழலை பூஜிப்பான் .. ப்ரேதம் என்பது இல்லாத ஒன்று , இருப்பது போலத் தோன்றும் ஒன்று .. இன்றைய காலத்தில் , ஸினிமா நடிக நடிகையரை இவ்வகையில் சேர்க்கலாம் .. ப்ரேதங்களைப் போல உயிர் இல்லாதவர்கள் .. இல்லாத வீரம் , இல்லாத அழகு , இல்லாத ஸத்குணம் .. இல்லாதிருந்தும் இருப்பது போலத் தோன்றும் .. இத்தகைய ஸினிமா நடிகர்களை பூஜித்து , அவர்களுக்கு விழா எடுத்து , அவர்களது பிறந்த நாள் கொண்டாடி , ரஸிகர் மன்றம் ஏற்படுத்தி , போஸ்டர் ஒட்டி , தோரணம் கட்டி , நிழலை நிஜமாக நம்பி , அவர்கள் நினைவிலேயே , அவர்களுக்காகவே வாழ்ந்திடும் இந்த ரஸிகர்கள் தமோ குணிகள் ..
Comments
Post a Comment