ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 240
तं यज्ञं राजसम् .. (अध्याय १७ - श्लोक १२)
தம் யக்ஞம் ராஜஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 12)
Tham Yagyam Raajasam .. (Chapter 17 - Shlokam 12)
அர்தம் : இந்த யக்ஞம் ராஜஸீகம் ஆகும் ..
ராஜஸம் ப்ரதானமாகக் கொண்டவன் செய்திடும் யக்ஞம் எந்தத் தன்மைகளை வெளிப்படுத்தும் ?? ராஜஸம் தூண்டும் தன்மைகள் எவை ??
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் ரெண்டு தன்மைகளைக் குறிப்பிடுகிறார் .. ஒன்று .. ஃபலன் பற்றிய எதிர்ப்பார்ப்பு .. ஃபலன் கிடைக்கும் என்பதே யக்ஞம் செய்வதற்கானத் தூண்டுதல் .. ஃபலன் கிடைக்க வாய்ப்பில்லை என்றால் யக்ஞம் நடந்திடாது .. ரெண்டு .. தம்பம் .. டாம்பீகம் பறைசாற்றும் வகையில் யக்ஞம் செய்திடுவான் ராஜஸன் .. தற்பெருமை , தற்புகழ்ப் பற்றி தம்பம் அடிக்கும் வகையில் யக்ஞம் நடந்திடும் ..
மிகப் பெரிய 'கடவுட்'கள் .. வானைத் தொடும் ஃப்லெக்ஸ் பேனர்கள் , யக்ஞத்தின் நோக்கத்தை விட நடத்துபவனின் பெயரும் படமும் பெரிதாகத் தெரிந்திடும் வகையில் விளம்பரங்கள் .. ராஜஸனுக்கு எந்நிலையிலும் பூதாகாரமாக வளர்ந்த 'நான்' .. நோக்கம் முதன்மை ஸ்தானத்தைப் பெற வேண்டும் என்றால் "நான்" ஒதுங்க வேண்டும் .. "நான்" ஓங்கி நின்றால் அது தம்பம் ..
யக்ஞம் என்பது த்யாகம் .. இதம் ந மம .. இது என்னுடையது இல்லை .. உன்னுடையது என்ற பாவத்தை வளர்த்துக் கொள்வதே யக்ஞத்தின் ஹேது .. ஆனால் , பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் , பணம் வேண்டும் என்பதற்காகவும் , புதல்வனை வேண்டியும் , ஶத்ருக்களை அழிப்பதற்காகவும் யக்ஞங்கள் நடத்துவான் ராஜஸன் ..
இவ்வாறு மாறுபடும் தன்மைகளில் உயர்வு தாழ்வுகள் இல்லை .. இவை ஸ்வபாவங்கள் .. அந்தந்த குணங்களின் தூண்டுதல்கள் .. உலகத்தில் இத்தகைய மாறுபாடுகள் தவிர்க்க முடியாதவை .. இவை இருந்தே தீரும் ..

Comments
Post a Comment