ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 241
तं यज्ञं तामसम् .. (अध्याय १७ - श्लोक १३)
தம் யக்ஞம் தாமஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 13)
Tham Yagyam Taamasam .. (Chapter 17 - Shlokam 13)
அர்தம் : இந்த யக்ஞம் தாமஸம் ஆகும் ..
தாமஸம் அல்லது தமோ குணம் முக்யமாக அறியாமையால் அடையாளம் காணப் படுகிறது .. தாமஸி அல்லது ப்ரதானமாக தமோ குணம் கொண்டவன் வெளிப்படுத்தும் முதல் தன்மை அறியாமையே ..
தாமஸி அல்லது தமோ குணீயின் கர்மங்கள் அனைத்திலும் பொதுவாக சில தன்மைகள் காணப்படும் .. அவன் நடத்தும் யக்ஞங்களிலும் இதே தன்மைகள் காணப்படும் .. ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறான் ..
விதி - ஹீனம் .. நியமங்கள் இல்லாமல் , விதிகளுக்கு உட்படாமல் யக்ஞங்களைச் செய்தல் .. அறியாமை தாமஸியின் ப்ரதானத் தன்மை ஆதலால் , அவன் யக்ஞங்களுக்கான விதிகளை அறிவதில்லை .. அறிந்தவர் எவரேனும் சொன்னாலும் , நியமங்களுக்கு உட்பட்டு யக்ஞங்களை செய்வதன் மஹத்வம் அறியாதலால் , தாமஸி அவற்றைப் புறக்கணிக்கிறான் .. தான் நடத்தும் யக்ஞங்களை ஶாஸ்த்ரங்களின் வழிகாட்டுதலிலோ , அவற்றில் விதிக்கப் பட்ட விதிகளுக்கு உட்பட்டோ நடத்தாமல் ஸ்வய இஷ்டப் படி நடத்திடுவான் தாமஸி ..
அஸ்ருஷ்டான்னம் .. அன்ன தானம் இல்லாமல் .. குறைந்த பக்ஷம் ப்ரஸாத விநியோகம் கூட இல்லாமல் தாமஸி யக்ஞங்களை நடத்திடுவான் .. ஸோம்பல் தாமோ குணீயின் மற்றொரு தன்மை ஆகும் .. அதனால் , ப்ரஸாதம் தயார் செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் ஸோம்பல் கொண்டு , அன்னதானமோ ப்ரஸாதமோ இல்லாமல் யக்ஞத்தை நடத்தி விடுவான் தாமஸி ..
மந்த்ர - ஹீனம் .. உரிய மந்த்ரம் இல்லாமல் .. தமோ குணீ உரிய மந்த்ரங்கள் இல்லாமல் யக்ஞங்களை நடத்துவான் .. அறியாமை மற்றும் ஸோம்பல் காரணமாக , அந்த யக்ஞத்தை உரிய முறையில் ஸ்வயமாக நடத்த இயலாதவன் தகுதி உள்ளோரை அக்காரியத்தில் ஈடுபடுத்தவும் மாட்டான் ..
அதக்ஷிணம் .. உரிய நபர்களுக்கு உகந்த தக்ஷிணை கொடுக்க மறுப்பான் தாமஸி .. வறட்டுப் பிடிவாதமும் தாமஸியின் ஒரு தன்மை .. அந்யரின் பங்களிப்பை ஸரியாக மதிப்பிடுவதைத் தடுத்திடும் அவனது வறட்டுப் பிடிவாதம் .. அதனால் , உரிய தக்ஷிணை இல்லாமலே யக்ஞத்தை நடத்தி முடிப்பான் .. மந்த்ரங்களை ஸரியாக ஓதிடும் தகுந்த நபர்களை ஈடுபடுத்தாமல் , தக்ஷிணையை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் , பேரம் பேசி அரைகுறையாக அறிந்தவரை தாமஸி ஈடுபடுத்துவதற்கு அவனது இந்தத் தன்மையே காரணம் ..
ஶ்ரத்தா விரஹிதம் .. முழு யக்ஞமும் ஶ்ரத்தை இல்லாமலே நடத்தப் படும் .. தமோ குணியின் மனஸில் லவலேஶமும் ஶ்ரத்தை கிடையாது .. அவன் ஶ்ரத்தை இல்லாமல் , எவ்வித நோக்கமும் இல்லாமல் , ஈடுபாடும் இல்லாமல் யக்ஞத்தை நடத்தி முடிப்பான் ..

Comments
Post a Comment