ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 242
शारीरं तप .. (अध्याय १७ - श्लोक १४)
ஶாரீரம் தப .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 14)
Shareeram Tapa .. (Chapter 17 - Shlokam 14)
அர்தம் : இந்த தபஸ் ஶரீரத்தால் ஆகும் தபஸ் ஆகும் ..
தபஸ் நம் மூன்று வித கருவிகளால் செய்யலாம் ..
இங்கு ஶரீரத்தால் செய்யக் கூடிய தபஸை வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..தபஸ் நம் மூன்று வித கருவிகளால் செய்யலாம் .. இங்கு ஶரீரத்தால் செய்யக் கூடிய தபஸை வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. இந்த ஸந்தர்பத்தில் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார் .. 1) பூஜனம் .. 2) ஶௌசம் .. 3) ஆர்ஜவம் .. 4) ப்ரஹ்மசர்யம் .. 5) அஹிம்ஸா .. இவை ஶரீரத்தால் ஆற்றக் கூடிய தபஸ் ..
அ) .. பூஜனம் .. தெய்வம் , த்விஜன் , குரு மற்றும் ப்ராக்ஞன் இவர்களின் பூஜை ஶரீரத்தின் தபஸ் .. தெய்வ பூஜை .. ஷோடஶ உபசாரங்களுடன் தெய்வ பூஜை .. தினம் தினம் ஶரீரத்தை ஒரு நிலையில் அமர்த்தி , செய்யப் படும் தெய்வ பூஜை ஶரீரத்தின் தபஸ் ..
ஆ) .. த்விஜ பூஜை .. த்விஜனை , ப்ராஹ்மணனை ஸாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் .. இது ஶீரீரத்தின் தபஸ் ..
இ) ... குரு பூஜை .. குருவிற்கு செய்திடும் ஸேவை ஶரீரத்தின் தபஸ் ..
ஈ) .. ப்ராக்ஞன் என்பவன் எல்லாம் உணர்ந்தவன் .. க்ஞானீ .. ப்ராக்ஞனை நமஸ்காரம் செய்ய வேண்டும் .. ப்ராக்ஞனுக்கு ஸேவை செய்திட வேண்டும் . மநுஷ்யப் பிறவியில் கிடைத்த இந்த ஶரீரம் பூஜனம் என்ற தபஸ் மூலம் ஶுத்தம் ஆக வேண்டும் ..
(2) .. ஶௌசம் .. தூய்மை .. ஶரீரத்தைத் தூய்மையாக வைத்திட செய்திடும் முயற்சிகளை ஶரீரத்தின் தபஸ் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. தினம் ரெண்டு வேளைகளும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் மூலம் ஶரீரம் , ப்ராணாயாம் மூலம் ஶ்வாஸ அமைப்பு , முறையான உணவுப் பழக்கம் மூலம் ஜீர்ண அமைப்பு இவை தபஸ் போல அன்றாடம் செய்யப் பட வேண்டியவை ..
(3) .. ஆர்ஜவம் .. எளிமை .. தோற்றத்தில் எளிமை , உடையில் எளிமை , வாக்கில் எளிமை , சிந்தனையில் எளிமை , ஸுலபமாக அணுகி விட முடியும் என்ற நிலை , நேர்மையான நட்புணர்வு இவை அனைத்தும் சேர்ந்து ஆர்ஜவம் ஆகும் .. இது ஶரீரத்தினால் ஆற்றப் படும் தபஸ் ஆகும் ..
(4) .. ப்ரஹ்மசர்யம் .. வஶமான இந்த்ரியங்கள் , காமமற்ற மனஸ் , ப்ரஹ்ம சிந்தனை .. திருமணம் ஆகாத நிலை அல்ல .. கட்டுப்பாடுகளுடன் கூடிய விவாஹ வாழ்க்கையும் ப்ரஹ்மசர்யம் ஆக முடியும் ..
(5) அஹிம்ஸா .. ஹிம்ஸைக்கு ஶரீரமே ப்ரதான கருவி .. அடிக்கு பதிலடி .. பழிக்குப் பழி வாங்குதல் , தன் ஸுகத்திற்காக மற்ற உயிர்களையும் அன்ய மநுஷ்யர்களையும் வாட்டுதல் ஆகியவை ஹிம்ஸை எனலாம் .. பொறுத்துக் கொள்ளுதல் , மன்னித்தல் போன்ற தன்மைகள் அஹிம்ஸையின் வெளிப்பாடு .. அஹிம்ஸை ஶரீர தபஸ் ஆகும் ..
Comments
Post a Comment