ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 247
तपः तत्तामसम् .. (अध्याय १७ - श्लोक १९)
தபஹ தத் தாமஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 19)
Tapah Tat Taamasam .. (Chapter 17 - Shlokam 19)
அர்தம் : அது தாமஸனின் தபஸ் ஆகும் ..
அறியாமை , குழப்பம் , மோஹம் , மயக்கம் இவை ஒரு தாமஸனின் லக்ஷணங்கள் .. தாமஸன் குழப்பமான பல கருத்துக்களை ஏந்தி , தன்னை , அதாவது தன் ஶரீரத்தை கஷ்டப்படுத்தி , வலி வேதனைக்கு உட்படுத்தி , பிறருக்கும் கஷ்டம் அளித்து , கார்யங்களில் ஈடுபடுவான் .. செய்திடும் தபஸின் நோக்கம் பற்றிய குழப்பமும் , தபஸின் விதிமுறைகளைப் பற்றிய தெளிவின்மையும் , வறட்டுப் பிடிவாதத்துடன் மூடத்தனமான ஒரு கருத்தைப் பற்றிக் கொண்டும் தபஸ் இயற்றிடுவான் தாமஸன் .. அவனது தபஸின் ஃபலனாக பிறருக்கு , ஏன் உலகத்திற்கே கேடு விளைந்திடலாம் .. தாமஸனுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை .. அந்யருக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்பதையே தாமஸன் தன் தபஸின் நோக்கமாகக் கொண்டிருந்தாலும் ஆஶ்சர்யம் இல்லை ..
Comments
Post a Comment