ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 258
न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माणि अशेषतः .. (अध्याय १८ - श्लोक ११)
ந ஹி தேஹப்ருதா ஶக்யம் த்யக்தும் கர்மாணி அஶேஷதஹ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 11)
Na Hi DehaBhruthaa Shakyam Tyakthum Karmaani Aseshatah ... (Chapter 18 - Shloka 11)
அர்தம் : தேஹத்தை ஏற்றிருக்கும் மநுஷ்யன் எந்நிலையிலும் அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட முடியாது ..
ஶரீரம் என்ற ஒன்று இருக்கும் வரை கர்மங்களைத் தவிர்க்க முடியாது ... ஶரீரத்தை நிர்வாஹம் செய்வதற்கே கர்மங்களில் ஈடுபட வேண்டும் .. ஶரீர தர்மத்தை அநுஸரிக்கவே கர்மங்கள் அவஶ்யம் .. பசி , தாஹம் , களைப்பு , காமம் போன்றவை தீர்க்க கர்மங்கள் செய்தாக வேண்டும் .. ஶரீரத்தில் நோய் அல்லது உபாதைகள் வராமல் இருக்க முயற்சிகள் செய்ய வேண்டும் .. ஶரீரத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க முயல வேண்டும் .. உலகத்தில் வாழும் வரை நடக்க வேண்டும் .. பேச வேண்டும் .. உறவுகள் வைக்க வேண்டும் .. பணம் ஸம்பாதிக்கும் முயற்சிகள் செய்ய வேண்டும் .. தன்னை ஸார்ந்துள்ளவர்களைப் பாதுகாக்க வேண்டும் .. சொத்தை , செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் ..
கர்மங்களைத் தவிர்க்க முடியாது .. கர்ம ஃபலன்கள் மீது பற்று வைக்காமல் கர்மங்களில் ஈடுபடுதல் ஒன்றுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி ..
கர்மங்களைத் தவிர்க்க முடியாது .. கர்ம ஃபலன்கள் மீது பற்று வைக்காமல் கர்மங்களில் ஈடுபடுதல் ஒன்றுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி ..
Comments
Post a Comment