ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 265
यत्तु कामेप्सुना साहङ्कारेण क्रियते बहुलायासं तत् कर्म राजसम् ... (अध्याय १८ - श्लोक २४)
யத்து காமேப்ஸுனா ஸாஹங்காரேண க்ரியதே பஹுலாயாஸம் தத் கர்ம ராஜஸம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 24)
Yattu Kaamepsunaa Saahankaarena Kriyate Bahulaayaasam Tat Karma Rajasam .. (Chapter 18 - Shlokam 24)
அர்தம் : தீவ்ரப் பற்றுடனும் அஹங்காரத்துடனும் பெருமுயற்சியுடனும் செய்யப்படும் கர்மம் ராஜஸம் ..
ராஜஸ குணம் வெளிப்படுத்தும் கர்மம் தீவ்ரப் பற்றுள்ளதாக இருந்திடும் .. அஹங்காரத்துடன் செய்யப்படும் .. இவற்றின் காரணமாக , பெரும் பாரமாகக் கருதி செய்யப்படும் ..
பற்று , தீவ்ரப் பற்றுதான் ரஜோ குணத்தின் ப்ரதானத் தன்மை .. கர்மத்தின் பற்று .. ஃபலன் மீது பற்று .. ராஜஸ கர்மத்திலும் இது வெளிப்படும் ..
பெருகி வளர்ந்த அஹங்காரம் ராஜஸனின் மற்றொரு தன்மை .. 'நான் செய்கிறேன்' என்ற உணர்வு ராஜஸனிடம் மேலோங்கி நிற்கும் .. 'செய்வது நான் அல்லவா' , 'நான் செய்யா விட்டால் ?' , 'என்னை அன்றி வேறு யார் செய்வார் ?' , போன்ற பல ரூபங்களில் ராஜஸனின் அஹங்காரம் வெளிப்படும் ..
கர்மத்தின் மீது பற்று இருப்பதால் நன்றாக நடந்திட வேண்டும் என்ற கவலை விளைந்திடும் .. ஃபலன் மீதுள்ள பற்றும் நாடிய ஃபலன் கிடைத்திடுமா என்ற கவலையை விளைவித்து செயல்திறனைக் குறைத்திடும் .. 'நான் செய்கிறேன்' என்ற அஹங்காரம் செயல் படுவதை பாரம் ஆக்கிடும் .. மொத்தத்தில் கர்மம் உத்ஸாஹமாக , ஆனந்தமாக செய்யப் படாமல் பெரும் ப்ரயாஸையுடன் , களைப்பும் சலிப்பும் ஏற்படுத்தும் வகையில் செய்யப் படும் ..

Comments
Post a Comment