ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 268
रागी कर्मफलप्रेप्सुः लुब्धः हिंसात्मकः अशुचिः हर्ष शोकान्वितः कर्ता राजस .. (अध्याय १८ - श्लोक २७)
ராகி கர்மஃபலப்ரேப்ஸுஹு லுப்தஹ ஹிம்ஸாத்மகஹ அஶுசிஹி ஹர்ஷ ஶோகான்விதஹ கர்தா ராஜஸ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 27)
Raagi Karmaphalaprepsuh Lubdhah Himsaatmakah Ashuchih Harsha Shokaanvitah Kartaa Raajasa . (Chapter 18 Shlokam 27)
அர்தம் : தீவ்ரப் பற்று , ஃபலனில் நாட்டம் , லோபம் , ஹிம்ஸை , தூய்மையின்மை மற்றும் இன்ப துன்பங்களால் பாதிப்பு போன்ற இவை ராஜஸ கர்தாவின் லக்ஷணங்கள் ..
ஸாத்வீகன் அமைதியாகச் செயல் படுவான் என்றால் ராஜஸன் தீவ்ரப் பற்றுடன் .. ஆங்க்லத்தில் Passion என்பார்களே .. அவ்விதம் .. செயல் தன்னால் செய்யப் பட வேண்டும் என்பதில் தீவ்ரம் .. தன்னால் சிறப்பாகச் செய்யப் பட வேண்டும் என்பதில் தீவ்ரம் .. அதன் விளைவாக , தன் பெயர் , புகழ் ஒங்க வேண்டும் என்பதில் தீவ்ரம் .. செயலில் இருந்து விளையக் கூடிய பிறப் ஃபலன்கள் தன்னை அடைய வேண்டும் என்பதில் தீவ்ரம் .. இவையே ராஜஸனின் மொத்த உருவம் ..
இந்தத் தன்மையால் இயல்பாக விளையக் கூடியவை லோபமும் ஹிம்ஸையும் .. தனக்கே கிடைக்க வேண்டும் என்பது லோபம் .. தன்னால் மாத்ரம் நடந்திட வேண்டும் என்பது லோபம் .. எல்லாம் தன் விருப்பப் படி நடந்திட வேண்டும் என்பது லோபம் .. இன்னம் அதிக அதிக ஃபலன் கிடைக்க வேண்டும் என்பது லோபம் ..
பாதையில் வரும் இடர்களைத் தகர்த்திட வேண்டும் என்ற தீவ்ர அவாவின் விளைவால் ஹிம்ஸை விளைகிறது .. போட்டியாக வரும் அந்யரை விலக்கி விட வேண்டும் என்ற தீவ்ரத்தின் விளைவாக ஹிம்ஸை விளைகிறது ..
தீவ்ரம் என்பது ரெண்டு திஶைகளிலும் .. தீவ்ரப் பற்று - தீவ்ர வெறுப்பு .. தீவ்ர உத்ஸாஹம் - தீவ்ர மனச்சோர்வு .. வெற்றி கிடைத்தால் தீவ்ர பரபரப்பு - மாறாக , தோல்வி கிட்டினால் தீவ்ர ஶோகம் .. ராஜஸனிடம் இதை ஸஹஜமாகக் காணலாம் ..

Comments
Post a Comment