ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 284
शूद्रस्यापि स्वभावजम ... (अध्याय १८ - श्लोक ४४)
ஶூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 44)
Shoodrasyaapi Swabhaavajam ... (Chapter 18 - Shloka 44)
அர்தம் : ஶூத்ரனின் ஸ்வபாவம் ...
பரிசர்யாத்மகம் கர்ம ஶூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் என்கிறார் .. உழைப்பின் மூலம் ஸேவை செய்வது ஶூத்ரனின் ஸஹஜ ஸ்வபாவம் ..
முன்னரே சர்சை செய்தபடி இந்த ஸ்வபாவங்கள் தெளிவான நான்கு பிரிவுகள் அல்ல .. கலந்தே காணப்படுகின்றன .. ஏதோ ஒன்று மேலோங்கி இருக்கலாம் .. சிந்தனை இல்லாத உழைப்பு .. இருக்கலாம் .. க்ஞானத்துடன் கூடிய உழைப்பும் இருக்கலாம் .. கணக்குப் போடாத உழைப்பும் காணலாம் .. கணக்குப் போட்ட உழைப்பும் காணலாம் .. அதே போல , பணம் தேடலில் உழைப்பு இல்லையா ?? க்ஞானத் தேடலில் உழைப்பு இல்லையா ?? ஶூரத் தனத்தில் உழைப்பு வேண்டாமா ?? எனவே , ஒருவனிடம் நான்கு ஸ்வபாவமும் கலந்தே இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் .. இன்று நான் ராஜபாளையத்தில் தங்கி இருக்கும் வீட்டின் க்ருஹிணி (வீட்டம்மா) சாக்கட்டியில் முழு ராமாயணமும் மஹாபாரதமும் வடித்திருக்கிறாள் .. ஆயிரக்கணக்கில் ஶிற்பங்கள் படைத்திருக்கிறாள் .. பள்ளிப் பர்வம் முதல் இக்கார்யத்தில் ஈடுபட்டிருக்கிறாள் (ஏறக்குறைய ஐம்பது வர்ஷங்கள்) .. மற்ற கார்யங்களும் செய்திருக்கிறாள் .. குடும்பம் , குழந்தைகள் , ஸமையல் போன்று .. இக்கார்யத்திலும் உழைப்பு வேண்டும் .. க்ஞானம் வேண்டும் .. பணம் வேண்டும் .. பொறுமை வேண்டும் .. பரம்பொருளை ஸார்ந்திருக்கும் தன்மை வேண்டும் .. எனவே , அவளுள் ப்ராஹ்மண , க்ஷத்ரிய , வைஶ்ய மற்றும் ஶூத்ர ஸ்வபாவங்கள் இவை நான்கும் கலந்து இருக்கின்றன என்றுதானே சொல்ல வேண்டும் !! ஆனாலும் , ஶில்பம் வடித்தல் என்ற இந்த ஒரு கர்மம் அவளது வாழ்க்கையில் ஓங்கி நிற்கிறது .. இந்த உழைப்பு நிறைந்த அவளது கர்மம் ஶூத்ர ஸ்வபாவத்தில் இருந்து பிறந்தது என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Comments
Post a Comment