ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 292
तमेव शरणं गच्छ .. (अध्याय १८ - श्लोक ६२)
தமேவ ஶரணம் கச்ச -- (அத்யாயம் 18 - ஶ்லோகம் 62)
Thameva Sharanam Gachcha ... (Chapter 18 - Shlokam 62)

அர்தம் : அவனை ஶரண் அடைவோம் ..
ஸ்ரீ பரமனை ஶரண் அடைதல் , அவனை ஸார்ந்து இருத்தல் .. இது பரமனின் உபாஸனையில் மிக உன்னதமான வழி .. இதற்குத் தடையாக இருப்பது 'நான்' .. 'நான் ஸாதிப்பேன்' ; 'நான் நினைத்ததை முடிப்பேன்' ; 'என்னால் முடியாதது எதுவும் இல்லை' ; 'என் வாழ்க்கை என் கையில்' ; என்றெல்லாம் முழக்கப் படுகின்றன .. மநுஷ்யனின் தன்னம்பிக்கையைத் 'தட்டி' எழுப்பிட இம்முழக்கங்கள் அவஶ்யமானவை என்று வலியுறுத்தப் படுகிறது .. 'Ego boosting அல்லது மிகப் பெரிதாக ஊதி வளர்க்கப் பட்ட நான்' உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றிட இன்றி அமையாதது என்ற கருத்து நம் காதுகளில் எல்லா திஶைகளிலிருந்தும் பாய்ச்சப் படுகிறது ..
இந்நிலையில் 'ஶரணடைந்து விடு' என்ற ஸ்ரீ க்ருஷ்ணனின் யோஜனை காலத்திற்கு ஒவ்வாதது , நடைமுறைப் படுத்த இயலாதது என்று பலரும் நினைக்கின்றனர் .. ஶரணடைதல் நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தடை என்று கருதுவோர் பலர் ..
குனிந்து காலைத் தொடுதல் , விழுந்து நமஸ்காரம் செய்தல் , நிர்ணயங்களை அவனிடம் விட்டு விடுதல் , விருப்பு - வெறுப்பு இல்லாமல் கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுதல் , அவனை ஸார்ந்து வாழ்தல் , தனக்கு என்று எவ்வித கவலையோ திட்டமோ எதிர்பார்ப்போ இல்லாமல் வாழ்தல் இவை ஶரணடைதல் என்பதன் பல நிலைகள் ஆகும் ..
ஆன்மீக வளர்ச்சிக்கு ஸமர்பணம் அதி அவஶ்யமானது .. உலக வாழ்க்கைக்கும் ஸமர்பணம் உபயோகமானதே ..நாம் விரும்பும் அனைத்தும் , நாம் எதிர்ப்பார்க்கும் அனைத்தும் கிடைக்காது என்பதே லோக ஸத்யம் .. இத்தகைய ஏமாற்றங்களின் புயல்களுக்கு மத்தியில் நம் மனஸை அமைதியாகவும் ஆரோக்யமாகவும் ஸமநிலையோடு வைக்க உதவிடும் வழி ஸமர்பணம் ..
ஶரணடைந்து விடு ..

Comments
Post a Comment