ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 296
न च तस्मान मनुष्येषु कश्चिन्मे प्रिय कृत्तमः ... (अध्याय १८ - श्लोक ६९)
ந ச தஸ்மான் மநுஷ்யேஷு கஶ்சின் மே ப்ரிய க்ருத்தமஹ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 69)
Na cha Tasmaan Manushyeshu KaschinMe Priya Kruttamah ... (Chapter 18 - Shloka 69)
அர்தம் : அவனுக்கு ஸமமாக எனக்கு ப்ரிய கார்யத்தைச் செய்யக் கூடியவன் வேறு எவரும் இல்லை ...
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் தனக்கு ப்ரிய கார்யம் என்று சொல்வது எதை ?? கீதையின் அத்யயனம் மற்றும் பக்தர்களிடம் கீதையை விளக்கிச் சொல்லுதல் .. இதுவே தனக்கு மிக ப்ரியமான கார்யம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. விபூதி யோகம் என்ற பத்தாவது அத்யாயத்தில் வித்யைகளில் அத்யாத்ம வித்யை தனது விபூதி என்று குறிப்பிட்டார் அல்லவா !! கீதையின் அத்யயனம் அத்யாத்ம வித்யையைக் கற்பது ஆகும் .. பரமாத்மாவின் உபாஸனை ஆகும் .. எனவே , அவனுக்கு மிக ப்ரியமான கார்யம் ..
தான் அறிந்ததை அந்யற்கு விளக்குவது மநுஷ்யனின் ஸஹஜமான இயல்பு .. அதினும் அத்யாத்ம வித்யையான கீதையை விளக்குவது விஶேஷமான கார்யம் .. குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனன் குழம்பி நின்று , யுத்தம் புரிய மாட்டேன் என்று புலம்பிய போது , ஸ்ரீ க்ருஷ்ணன் அவன் சொல்வதை ஏற்று , யுத்த களத்தில் இருந்து அர்ஜுனன் விலக ஸம்மதித்திருக்கலாம் .. அல்லது ஆவேஶப் படுத்தி , யுத்தத்தில் ஈடுபட அவனைத் தூண்டி இருக்கலாம் .. இவை மிக ஸுலபமான கார்யங்கள் .. ஆனால் , மிகக் கடினமான மூன்றாவது வழியை முயன்றான் .. ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு அத்யாத்ம வித்யையான கீதையைக் கொடுத்து , அவனை ஒரு யோகி ஆக்க முயன்றான் .. யோகியின் மனஸுடன் யுத்தத்தில் ஈடுபட ஊக்குவித்தான் .. இது மிகக் கடினமான கார்யம் ஆனாலும் இது மிக ஶ்ரேஷ்டமான கார்யம் .. தான் செய்ததை நம்மிடமும் எதிர்பார்க்கிறான் .. கீதையை அத்யயனம் செய்தவன் , அதைத் தன் பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் .. இதையே தனக்கு மிக இஷ்டமான கார்யம் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .. இதற்கு ஈடான கார்யம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்கிறான் ..

Comments
Post a Comment