ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 299
व्यास प्रसादात ... (अध्याय १८ - श्लोक ७५)
வ்யாஸ ப்ரஸாதாத் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 75)
Vyaasa Prasaadaath ... (Chapter 18 - Shloka 75)
அர்தம் : ஸ்ரீ வ்யாஸனுடைய ப்ரஸாதமாக ...
இவை த்ருதராஷ்ட்ரனின் ஸாரதி அல்லது தேரோட்டி ஸஞ்ஜயனின் வார்தைகள் .. ஸஞ்ஜயன் ஒரு விஶேஷ ஆற்றலைப் பெற்றிருந்தான் .. திவ்ய சக்ஷு .. திவ்யக் கண்கள் .. இவை ஸஞ்ஜயனுக்கு ஸ்ரீ வேத வ்யாஸன் அருளியவை .. ஸ்ரீ வேத வ்யாஸனின் ப்ரஸாதமாகக் கிடைத்தவை ..
ஸ்ரீ வேத வியாஸன் குருட்டு மஹாராஜா த்ருதராஷ்ட்ரனுக்கு இந்த திவ்யக் கண்களை அருள விரும்பினார் .. அரண்மனையில் இருந்தபடி யுத்த பூமியின் காக்ஷிகளை பார்க்க உதவிடும் என்று கருதினார் .. ஆனால் , த்ருதராஷ்ட்ரன் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டான் .. தன் புதல்வர்கள் சாவதைப் பார்க்க விரும்பவில்லை என்றான் .. எனவேதான் , அவனது தேரோட்டியான ஸஞ்ஜயனுக்கு இந்த ஆற்றலைக் கொடுத்தார் ..
ஸ்ரீ வ்யாஸன் அருளிய இந்த ப்ரஸாதத்தின் ஃபலனாக ஸ்ரீ க்ருஷ்ணன் - அர்ஜுனன் இடையே நிகழ்ந்த அத்புத உரையாடலை , ஸஞ்ஜயனால் கேட்க முடிந்தது .. அதே போல , அர்ஜுனனுக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அருளிய விஶ்வ ரூப தர்ஶனத்தையும் ஸஞ்ஜயன் கண்டான் ..
இதனால் விளைந்த ஆனந்தத்தின் வெளிப்பாடே ஸஞ்ஜயனின் இவ்வார்தைகள் .. வ்யாஸ - ப்ரஸாதம் என்கிறான் ..

Comments
Post a Comment