\ ரயில் பயணம் (ரயில் பட்ஜெட் தாக்கல் செய்த மறுநாள் எழுதப் பட்டது.) சிறு வயஸ்ஸில் விளையாடிய ரயில் விளையாட்டு நினைவிற்கு வருகிறது. முன்னால் நிற்பவரின் சட்டையைப் பிடித்துக் கொண்டு வரிசையாக நிற்போம். முதலில் நிற்பவன் கூ சுக் சுக் ...என்று சப்தம் எழுப்புவான். எல்லோரும் ஓடுவோம், நேராக, வளைந்து, நெளிந்து, திரும்பி.. இணைப்பு அறுந்து சிதறும் வரை ஓடுவோம். என்ஜினாக நிற்பவனே தலைவன். ரயிலைக் கட்டுப்படுத்துபவன். நாளடைவில், கடைசியில் ‘Gaurd’ ஆக நிற்பவனே தலைவன் என்றானது. அவன் ஒரு ஊதலை ஊதி நிறுத்தச் சொன்னால் ரயில் நிற்க வேண்டும். மேலும் சில நாட்களில் மூன்றாவது தலைமை எழுந்தது. ரயிலை விட்டு விலகி நிற்பவன் கையால் ‘Signal’ கொடுத்தால் ரயில் நகரும். அவன் விருப்பப்படி ரயில் நிற்க வேண்டும். ரயிலைப் பற்றிய எங்களின் புரிதல் வளர வளர எங்கள் விளையாட்டும் பரிணமித்தது. ரயிலை ஓட்டுவது யார்? டிரைவரா, கார்டா, சிக்னல் கொடுப்பவரா? ஸ்டேஷன் மாஸ்டர், மேலாளர், பொது மேலாளர், என்று தொடங்கி ரயில்வே போர்ட் தலைவர், ரயில் மந்த்ரி வரை இப்பட்டியல் நீள்கிறது என்று புரிந்திடும் போது நாங்கள் வளர்ந்து விட்டிருந்தோம். விளையாட்டு ந...
राम गोपाल रत्नम्