ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 233 यजन्ते सात्त्विका देवान् .. (अध्याय १७ - श्लोक ४) யஜந்தே ஸாத்த்விகா தேவான் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Yajante Saattvikaa Devaan .. (Chapter 17 - Shlokam 4) அர்தம் : ஸாத்த்வீக நபர் தேவர்களை பூஜிப்பான் .. "யஜந்தே ஸாத்விகா தேவான்" .. ப்ரதானமாக ஸாத்வீக குணம் உள்ள மநுஷ்யன் தெய்வத்தைப் பூஜிக்கிறான் .. பூஜை என்பது புஷ்பங்களையும் ஸுகந்த த்ரவ்யங்களையும் அர்பித்து , தீப தூபத்தையும் காட்டி , மந்த்ரங்களால் ஒரு தெய்வ சித்ரத்தையோ ஒரு தெய்வ விக்ரஹத்தையோ பூஜை செய்தல் மாத்ரம் அல்ல .. அதைத் தாண்டி குணங்களை சிந்திப்பதும் பூஜையே .. ஒரு மநுஷ்யனை அவனது ஸ்வந்த ஸ்வபாவத்திற்கு ஏற்ற குணங்களே ஆகர்ஷிக்கின்றன .. ப்ரதானமாக ஸத்த்வ குணம் உள்ளவனை இயல்பாகவே ஸாத்த்வீக குணம் கவர்ந்திழுத்திடும் .. தெய்வம் ஸத்த்வ குணங்களின் பொக்கிஷம் என்று கருதப் படுகிறது .. (இங்கு சர்சிக்கப் படுவது ஸகுண ஸாகார தெய்வமே .. குணங்களுடன் கூடிய , உருவத்துடன் கூடிய தெய்வமே .. நிர்குண ந...
राम गोपाल रत्नम्