ॐ கீதையின் சில சொற்றொடர்கள் - 15 भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् | (अध्याय ३ - श्लोक १३) புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசன்த்யாத்மகாரணாத். (அத்யாயம் 3 - ஶ்லோகம் 13) Bhunjate te Twagham Paapaa ye Pachantyaatmakaaranaat. (Chapter 3 - Shloka 13) அர்தம் : தனக்காக மட்டும் ஸமைத்துக் கொள்கிறவர்கள் பாபிகள். அந்த பாபிகள் பாபத்தையே உண்ணுகின்றனர்.... தனக்காக மட்டும் ஸமைத்துக் கொள்கிறவர்கள் பாபிகள். இவர்கள் பாபத்தையே உண்ணுகின்றனர்....மீண்டும் ஒரு முறை ஸ்ரீ க்ருஷ்ணனின் கடுமையான வார்த்தைகள். ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வார்தைகளைப் படித்தார்களோ இல்லையோ, நம் ஹிந்து ஸமுதாயத்தில் அவனுடைய இவ்வார்தைகள் கடாக்ஷமாக கடைப்பிடிக்கப் படுகின்றன என்பது மாத்ரம் ஸத்யம். உணவைப் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பழக்கம் இங்கு மிக ஆழமாகப் பதிந்து உள்ளது. கிழக்குக் கோடியில் அஸம் முதல் மேற்கில் குஜராத் வரை, வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கில் ஸ்ரீ லங்கை வரை அனைத்துப் பகுதிகளிலும் வாழும் அனைத்து ஸமுதாயத்தினரும் இப்பழக்கத்தில் ஊறி உள்ளனர். உலகத்தின் மற்ற நாட...
राम गोपाल रत्नम्