ॐ கீதையில் சில சொற்றொடர்கள் 004 ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்ஸ்யசே மஹீம் ..(அத்யாயம் 2 - ஶ்லோகம் 37) हतो वा प्राप्स्यसि स्वर्गम् जित्वा वा भोक्ष्यसे महीम् (अध्याय 2 - श्लोक 37) Hatho vaa praapsyasi Swargam jitvaa vaa bhokshyase Maheem (Chapter 2 - Verse 37) இந்தச் சொற்றொடர் விஶேஷமான ஒன்று. "(யுத்தத்தில்) நீ கொல்லப் பட்டால் ஸ்வர்கத்தினை எய்திடுவாய். வென்றால் ராஜ போகத்தினை அநுபவிப்பாய்." பாரதத்து க்ஷத்ரியர்கள் தம் முழு திறனையும் யுத்த முயற்சியில் செலுத்திட இந்த கண்ணோட்டமே காரணமாக இருந்தது எனலாம். இந்தச் சொற்றொடர் ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு முயற்சிக்கும் ரெண்டு வகை ஃபலன்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒன்று அநுகூலமானது, விரும்பப்படுவது. மற்றொன்று எதிர் மறையானது, விரும்பப்படாதது. ஒருவன் இந்த ரெண்டு வாய்ப்புகளால் உந்தப்பட்டு எதிர் திஶைகளில் அலைக்கழிக்கப் படும் போது அவனது செயலின் திறன் (efficiency) விழுந்து விடுகிறது. ரெண்டு வாய்ப்புகளும் தனக்கு ஆதரவானவையே, அநுகூலமானவையே என்று உணர்ந்திடும் போது, செயல்திறன் நூற்ற...
राम गोपाल रत्नम्