ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 269 अयुक्तः प्राकृतः स्तब्धः शठः नैष्कृतिकः अलसः विषादी दीर्घसूत्री कर्ता तामस .. (अध्याय १८ - श्लोक २८) அயுக்தஹ் ப்ராக்ருதஹ் ஸ்தப்தஹ ஶடஹ நைஷ்க்ருதிகஹ அலஸஹ விஷாதீ தீர்கஸூத்ரீ கர்தா தாமஸ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 28) Ayukthah Praakruthah Stabdhah Shathah Naishkruthikah Alasah Vishaadhee Deergha Sootri Kartaa Taamasa .. (Chapter 18 - Shlokam 28) அர்தம் : விழிப்புணர்வு இல்லாதவன் , பண்படாதவன் , முரடன் , வறட்டுப் பிடிவாதம் கொண்டவன் , சதிகள் தீட்டுபவன் , சோம்பேறி , வருத்தம் நிறைந்தவன் , தள்ளிப் போடுபவன் , தாமஸ கர்தா .. மோஹம் , மூடநிலை , அறியாமை , சோம்பல் , மயக்கம் ஆகியவை தாமஸனின் அடையாளங்கள் .. தாமஸ கர்தாவைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடும் லக்ஷணங்கள் அனைத்தும் இத்தாமஸத் தன்மைகளின் வெளிப்பாடுகளே .. அயுக்தஹ ... யோகம் அற்றவன் .. செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை பற்றி அறியாதவன் .. அயுக்தஹ என்றால் கவனம் இல்லாதவன் , ஶ்ரத்தை இல்லாதவன் என்றும் அர்தம் ஆகும் .. ப்ராக்ருதஹ .. பட்டிக்க...