ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 27 भक्तोsसि में सखा चेति .... (अध्याय ४ - श्लोक ३ ) பக்தோsஸி மே ஸகா சேதி (அத்யாயம் 4 - ஶ்லோகம் 3) Bhakto(a)Si Me Sakhaa Chethi ... (Chapter 4 - Shlokam 3) அர்தம் : என் பக்தன்.. மற்றும் என் நண்பன் (நீ)... ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதைக் கேளுங்கள்.. "நீ என் பக்தன் மற்றும் ஸகா (நண்பன்) ... என்பதால் ரஹஸ்யமயமான இந்த யோகத்தை உனக்குக் கூறுகிறேன். ஸக்யத்திற்கு, நட்பிற்கு எவ்வளவு அத்புதமான, மஹத்தானதொரு அன்பளிப்பு பாருங்கள்.. கீதை அர்ஜுனனிடம், பேசப்பட்டது, யுதிஷ்டிரனிடமோ பீமனிடமோ அல்ல.. பஞ்ச (ஐந்து) பாண்டவர்களுமே ஸ்ரீ கிருஷ்ணனின் அன்பிற்குப் பாத்ரமானவர்களே.. இந்த்ரப்ரஸ்தத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணன் வந்த ஒவ்வொரு முறையும் பாண்டவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்கி அவரது தங்கல் சில நாட்கள் நீண்டது. அங்கு சில நாட்கள் தங்கி விட்டு, கிளம்பும் ஒவ...
राम गोपाल रत्नम्