ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 64 चँचलम् हि मनः कृष्ण प्रमाथि बलवद् दृढम ... (अध्याय ६ - श्लोक ३४) சஞ்சலம் ஹி மனஹ க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 34) Chanchalam Hi Manah Krishna Pramaathi Balavad Drudham ... (Chapter 6 - Shloka 34) அர்தம் : ஹே க்ருஷ்ண ! மனஸ் பிடிவாதம் நிறைந்ததாக , சஞ்சலம் கொண்டதாக இருக்கிறதே ... இது அர்ஜுனனின் ப்ரஶ்னை மாத்ரம் இல்லை . நம் அனைவரின் ப்ரஶ்னையும் இது . மனஸ் சஞ்சலமானது . நிலையில்லாதது . பிடிவாதம் கொண்டது . சிந்தனை செய்தால் ஒரு விஷயத்தில் தொடர்ந்து இருந்திடாது . கை வஶம் உள்ள கார்யத்தில் தொடர்ந்து ஈடுபட விடாது . ஒரு ப்ரஸங்கம் கேட்டுக் கொண்டிருந்தாலோ , ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாலோ , ஒரு கார்யம் செய்து கொண்டிருந்தாலோ , நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலோ , அதில் தொடர்ந்து ஈடுபடாமல் , அலுத்துக் கொண்டு வேறு பக்கம் தாவி விடும் . தனியாக இருக்கும் போது கை , தொடையை ஆட்டிக் கொண்டும் , நகத்...
राम गोपाल रत्नम्