ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 79 मूढोऽयं नाभिजानाति माम् । (अध्याय ७ - श्लोक २५) மூடோயம் நா பி ஜானாதி மாம் ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 25) Moodhoyam NaaBhiJaanaathi Maam ... (Chapter 7 - Shloka 25) அர்தம் : மூடர்கள் என்னை அறிவதில்லை ... மூடர்கள் என்னை அறிவதில்லை ... என்னை அறியாதவர்கள் மூடர்கள் ... உலகம் மூடன் என்று சொல்வது யாரை ? உலகத்து விஷயங்களை அறியாதவன் மூடன் . ஸம்பாதிக்கத் தெரியாதவன் மூடன் . பள்ளி , கல்லூரி படிப்பில் ஈடுபடாதவன் மூடன் ... உலக வ்யவஹாரங்கள் அறியாதவன் மூடன் ... உலகத்து மூடன் எப்படியோ வாழ்ந்து விடுகிறான் ... அவனுக்கேற்ற வட்டம் அவனுக்கும் சேர்கிறது . அவன் அறிந்த ஏதோ ஒன்றை வைத்து அன்றாட சோற்றை ஸம்பாதித்து விடுகிறான் . ஒரு நாள் இறந்து போகிறான் . அவனுக்கும் , உலகத்தில் பெரும் ஸாதனை செய்ததாக தன்னையே மெச்சிக் கொள்ளும் அறிவாளிகளுக்கும் பெரிதாக வித்யாஸம் ஏதுமில்லை . அரஸியல்வாதிகள் , ஸமூஹ சீர்திருத்தவாதிகள் , விஶேஷ கலைத் திறன் கொண்ட கலைஞர்கள் , மெத்தப் படித்த ட...
राम गोपाल रत्नम्