நேற்று ஸ்ரீ குரு பௌர்ணமீ ... அல்லது ஸ்ரீ வ்யாஸ பௌர்ணமீ .. ஆஷாட மாஸ பௌர்ணமீ ஸ்ரீ குருவிற்காக அர்பணம் .. குரு என்பவர் வெறும் டீசர் , கற்றுக் கொடுப்பவர் இல்லை .. குரு என்பவர் வெறும் லெக்சரர் .. உரை நிகழ்த்துபவர் இல்லை .. குரு ஒரு ஆற்றலைக் கற்றுக் கொடுக்கும் வெறும் பயிற்சியாளர் இல்லை .. ஆனால் இவர்களில் எவராலும் ஒரு குரு ஆக முடியும் .. குரு என்ற வார்தை .. கு என்றால் இருள் .. ரு என்றால் அழிப்பவர் .. இருளை அழித்தொழிப்பவர் குரு .. நம்முள் நிறைந்திருக்கும் இருள் .. குரூர்ப்ர ஹ்மா குரூர்விஷ்ணுஹு குரூ தேவோ மஹேஶ்வரஹ குரூ ஒரு ஸ்ருஷ்டிகர்தா .. படைப்பாளி .. குரு பாதுகாப்பவர் .. குரு அழிப்பவர் .. குரூ எதையும் செய்யாத பரப்ரஹ்ம பரமாத்மா .. எதையும் செய்யாதவர் ஆனால் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமானவர் .. இன்று நடந்த ஸெமினாரில் கருத்தரங்கில் சர்சைக்கு வந்த விஷயங்கள் .. குரு ஶிஷ்ய ஸம்பந்தம் ஸ்நேஹம் மற்றும் பக்தி அடிப்படையில் அமைகிறது .. குருவின் மனஸில் ஶிஷ்யனைப் பற்றி ஸ்நேஹமும் .. ஶிஷ்யனின் மனஸில் குருவைப் பற்றி பக்தியும் ... குரு விஶேஷமானவர் ஏனென்றால் ஶிஷ்யனுடன் ரக்த ஸம்பந்தம...
राम गोपाल रत्नम्