ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 256 सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विकः .. (अध्याय १८ - श्लोक ९) ஸங்கம் த்யக்த்வா ஃபலம் சைவ ஸ த்யாகஹ் ஸாத்விகஹ .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 9) Sangam Tyaktvaa Phalam Chaiva Sa Tyaagah Saattvikah ... (Chapter 18 - Shloka 9) அர்தம் : செயல் மீதும் ஃபலன் மீதும் பற்றினைத் துறப்பது ஸாத்வீக த்யாகம் .. ஸாத்வீகம் மேலோங்கிய ஒருவன் கர்மங்களை த்யாகம் செய்வதில்லை .. கர்மங்களில் ஈடுபடாமல் லோகத்தில் இருக்க முடியாது என்பதை அறிவான் . கர்மங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவற்றின் பால் பற்று கொள்வதில்லை .. கடமை என்று கருதி , கர்மங்களை செய்கிறான் .. அதே போல , கர்மங்களில் இருந்து விளையும் ஃபலன்கள் மீதும் பற்று கொள்வதில்லை . பற்றினை விலக்குதல் என்ற இத்தகைய த்யாகத்தை ஸ்ரீ க்ருஷ்ணன் ஸாத்வீக த்யாகம் என்கிறான் ..
राम गोपाल रत्नम्